பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்127

58. - வீமன் அக்கொன்றைமாலையைக்கடவாது வணங்கிச்செல்லுதல்.

என்றிதழிமாலைதனை, நின்றுதொழுதன்பினொடு
சென்றனனிடிம்பனைமுன், வென்றதிறல்வீமனுமே.

     (இ-ள்,) இடிம்பனை - இடிம்பாசுரனை, முன் வென்ற-முன்பு சயித்த [கொன்ற],
திறல்-வலிமையையுடைய, வீமனும்-, என்று- என்றுசொல்லி, இதழி மாலைதனை
அன்பினொடு நின்று தொழுது- கொன்றைப்பூ மாலையைப் பக்தியோடு எழுந்து
நமஸ்கரித்து, சென்றனன் - மீண்டுசென்றான்; (எ - று.)

     தேரில்வீரர்வீற்றிருத்தல் இயல்பாதலின், 'நின்றுதொழுது' எனவேண்டிற்று. (196)

59.- மாலைகடவாத அபிமன் பகைநடுவில் உக்கிரத்தேசொடு நிற்றல்.

மாலைகடவாமல்வரு, பாலனரசர்க்குநடு
வேலைவடவைக்கனலி, போலொளிரநின்றனனே.

     (இ-ள்.) மாலை கடவாமல் - கொன்றைமாலையைக் கடக்க மாட்டாமல், வரு-
மீண்டுவந்த, பாலன் இளையவனான அபிமன், அரசர்க்கு நடு - பகையரசர்களுக்கு
மத்தியில், வேலை வடவை கனலி போல் - கடலின்மத்தியில் படபாமுகாக்கினிபோல,
ஒளிர நின்றனன்- விளக்கமாக நிலைநின்றான்; (எ-று)

     பகையரசர் குழாத்தினிடையில் அகப்பட்டுள்ள அபிமனொருவன் தானே
அக்கூட்டமுழுவதையுஞ் செருக்கடக்கவல்லனாந் தன்மைக்கும்,
தேககாந்திமிகுதிக்கும், கடலிடையுள்ள வடவையனலை உவமைகூறினார்.     (197)

60.- இரண்டுகவிகள் - அர்த்தரதரான எதிரிகள் அம்புமழை
பொழிதலைக்கூறும்.

யாளியெனநின்றவய, மீளியைவளைந்துபல
வாளிகள்பொழிந்தனர்கள், கூளிகண்டஞ்செயவே.

     (இ-ள்.) யாளி என நின்ற-யாளியென்னும் மிருகவிசேஷம்போல
(மிகவலியனாய்) நின்ற, வய மீளியை - வெற்றியையுடைய வீரனான அபிமனை,
(பகையரசர்கள்), வளைந்து-சூழ்ந்துகொண்டு, கூளிகள் நடம் செய-பேய்கள்
கூத்தாட,பல வாளிகள் - அநேக பாணங்களை, பொழிந்தனர்கள்-; (எ - று.)

     அபிமனை 'யாளி' என்றதற்கு ஏற்ப, பகையரசரை யானையென்னாமையால்,
ஏகதேசவுருவகம். பி-ம்: மீளிமிசைவந்துபல.                         (198)

61.பற்பலருமர்த்தரதர், விற்பலவணக்கியெதிர்
சொற்பொலியப்பகழி, சிற்சில தொடுத்தனரே.

     (இ - ள்.) பல் பலர்உம் அர்த்தரதர் - மிகப்பலரான அர்த்தரத வீரர்கள்;
வில்பல வணக்கி-(தம்தம்) விற்கள் பலவற்றை வளைத்து, எதிர் - அபிமனெதிரில்,
சில்சில - சிலசிலவாகிய, சொல் பொலி வய பகழி - புகழ் விளங்குகிற வலிய
அம்புகளை, தொடுத்தனர் - பிரயோகித்தார்கள்; (எ- று.)               (199)