62.- எய்த அம்புகளைவிலக்கி அபிமன் பகைநையப் பலகணை சிந்துதல். பெய்கணையடங்கவிவ, னெய்கணைவிலக்கியிட மொய்கணையனந்தமவர், மெய்கணையவுந்தினனே. |
(இ-ள்.) பெய் கணை அடங்க - (அவர்கள்) சொரிந்த அம்புகளையெல்லாம், இவன் எய் கணை - இந்தஅபிமனெய்த அம்புகள், விலக்கியிட-(இவன்மேல் வந்திடாதபடி இடையிலே) தடுத்துவிட, (பின்பு இவன்), மொய் அனந்தம் கணை - நெருங்கின அளவில்லாத அம்புகளை, அவர் மெய்கள் நைய - அந்த அர்த்தரதர்களது உடம்புகள் வருந்தும்படி, உந்தினன் - செலுத்தினான் : (எ-று.)-ந +அந்தம் = அநந்தம்: எல்லை யில்லாதது. (200) 63.- மூன்றுகவிகள் - கன்னனை அபிமன் பொருது வென்றமை கூறும். கன்னனுமடங்கலபி, மன்னுவுமுடன்றுமுனை முன்னிரதமுங்கடவி, மன்னமர்தொடங்கினரே. |
(இ-ள்.) (பின்பு), கன்னன்உம் - கர்ணணும், மடங்கல் அபிமன்னுஉம்- ஆண்சிங்கம்போன்ற அபிமந்யுவும், உடன்று- கோபித்து, முனை முன் இரதம்உம் கடவி - போர்களத்தின் முன்னிடத்தில் தேரைச்செலுத்துதலுஞ்செய்து, மன் அமர் தொடங்கினர் - பெரிய போர்செய்யத் தொடங்கினார்கள்: (எ - று.) (201) 64. | அங்கர்பதிதேரிலிவன், வெங்கணைகணுாலுவிட மங்குலெனநாலுதுர, கங்களும்விழுந்தனவே. |
(இ-ள்.) அங்கர் பதி தேரில்-அங்கநாட்டார்க்கரசனான கர்ணனது இரதத்தின்மேல், இவன்-அபிமன், வெம் கணைகள் நாலுவிட- கொடிய நான்கு அம்புகளைச் சொரிய, (அதனால்), நாலு துரகங்கள்உம்-(அக்கன்னது தேர்க்) குதிரைகள் நான்கும், மங்குல் என- உம்- (அக்கன்னனது தேர்க்) குதிரைகள் நான்கும், மங்குல் என - மேகங்கள்போல, விழுந்தன - (இறந்து கிழ்) விழுந்தன-: (எ - று.) வெள்ளைக்குதிரைகளாதலால், நீர்கொள்ளாத வெள்ளைமேகம் உவமையென்க:இவ்வாறே வியாசபாரதத்திலுங் கூறியுள்ளது. (202) 65. | தொடுத்தசிலைகோலியவ, னெடுத்தசிலையுங்கொடியு நடுத்தறியவெட்டிமுனை, கெடுத்தனனனந்தரமே. |
(இ-ள்.) அனந்தரம் - பின்பு, (அபிமன்), தொடுத்த சிலை கோலி - பிடித்த வில்லை வளைத்து, (எய்த அம்புகளால்), அவன் எடுத்த சிலைஉம் நடு தறிய வெட்டி - அக்கன்னன் ஏந்திய வில்லையும் (அவனது கச்சைக்) கொடியையும் நடுவிலே முறியும்படி துணித்து, முனை கெடுத்தனன்-(அவனது) போரை அழித்தான்:(எ - று.) தொடுத்த - அம்பு தொடுக்குந்தன்மையுள்ள எனினுமாம்; இனி, சிலை கோலித்தொடுத்த என மொழிமாற்றி, வில்லை வளைத்துத் தொடுத்த அம்புகளால் என்றலுமொன்று: இவ்வுரைக்கு, தொடுத்த - பலவின்பாற்பெயர். (203) |