பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்129

66. - இதுவும், மேற்கவியும் - குளகம்: துரியோதனன் தம்பிமார்
பொருது தோற்றமை கூறும்.

இரவிமகனேகுதலு, மரவதுசன்றுணைவர்
விரவினர் விளைந்துதம. புரவியணிதேர்படவே.

     (இ-ள்.) (இங்ஙனம் தோற்று), இரவி மகன் ஏகுதலும்-  சூரியபுத்திரனான
கர்ணன் சென்ற வளவில், -அரவ துவசன் துணைவர்- பாம்புக்கொடியனான
துரியோதனனது தம்பிமார், விளைந்து விரவினர் - மிகுயாகச் சூழ்ந்து,-தம புரவி
அணி தேர் பட-தங்களுடைய குதிரைகள் பூட்டிய தேர் அழிய,-(எ-று.)-
"கணைதைக்க முதுகிட்டனர்" என அடுத்த கவியில் முடியும. 'அரவதுவசன்'-
சந்தவின்பம் நோக்கியஇயல்பு.                                (204)

67.விட்டவிரதத்தினொடு, வட்டவரிவிற்குரிசி
றொட்டகணைதைக்கவவர், கெட்டுமுதுகிட்டனரே.

     (இ-ள்.) வட்டம் வரி வில் குரிசில் - வளைவான கட்டமைந்த வில்லையுடைய
அபிமன், தொட்ட - தொடுத்த, கணை - அம்புகள், தைக்க - தைத்தலால், அவர்-
அத்துரியோதனன் தம்பிமார், கெட்டு- தோற்று, விட்ட இரதத்தினொடு - விட்ட
தேருடனே (தேரை நீங்கியவர்களாய்), முதுகு இட்டனர்-புறங்கொடுத்தார்கள்;(எ-று.)

     மோனைக்குப் பொருத்தமாக, விட்ட விரதத்தினொடு எனப் பிரித்து, தாம்
வென்றே மீளுவோ மென்னும் விரதத்தை விட்டவர்களாய் எனினுமாம்: ஒடு-
மூன்றனுருபு, அடைமொழிப்பொருளது, வட்டம் - வருத்தம்: வடசொல்.    (205)

68. - மூன்றுகவிகள் - துரோணனும் குமாரனும் அபிமனையெதிர்த்துத்
தோற்றவை கூறும்.

சுகனிகர்துரோணனொடு, மகன்விசயன்மைந்தனெதிர்
முகனமரில்வந்துபுர, தகனனெனநின்றனரே.

     (இ-ள்.) சுகன் நிகர் துரோணனொடு-சுகமுனிவனை யொத்த துரோணனும்,
மகன்-(அவன்) மகனான அசுவத்தாமனும், விசயன் மைந்தன் எதிர் -
அருச்சுனபுத்திரனான அபிமந்யுவின் எதிரில், முகன் அமரில்-முற்போரில்,
புரதகனன்என-திரிபுரமெரித்த பரமசிவன் போல, வந்து நின்றனர்,-(எ - று.)

     சுகன் - வேதவியாச புத்திரன்; அவ்வியாசபகவானினும் மேம்பட்ட
அறிவொழுக்கங்களையும்;    வைராக்கியத்தையும் உடையவன்: பகவானது
அமிசமானவன்; பரமபாகவதர்களில் ஒருத்தன்; பாகவத புராண சரித்திரத்தைப்
பரீக்ஷித்து மகாராசனுக்குக் கூறியவன்: கிளியினிடமாகப் பிறந்ததனாலும்.
கிளிமூக்கையுடைமையாலும், சுகனெனப் பெயர். இவனைத் துரோணனுக்கு
உவமைகூறினது,ஞானசீலங்களின் மேன்மைக்கு. எதிர் முகன்-எதிர்முகத்தில்
என்றுமாம்.புரதகனனுவமை, உக்கிரத்தன்மையில்.                (206)

69.நிற்குநிலைநின்றுறுவரி, விற்களும்வளைத்தா
ருற்கைகளினூறுபல, பொற்கணைதொடுத்தார்.