முகனென வேறோரரசனுள னெனக்கொண்டால், தலைதுணிபட்டு விழுந்தா னென்னலாம். (210) 73. - நான்குகவிகள் - அபிமனோடு சல்லியனும் அவன் மகனும் பொருகையில் மகனிறக்கத் தந்தை புறங்கொடுத்தமை கூறும். சித்திரவில்வீரனெனு, மந்திரர்பிரானும் புத்திரரிலாதியுரு, மித்திரனும்வந்தார். |
(இ-ள்.) சித்திரம் வில் வீரன் எனும் - அழகிய வில்லில் (சிறந்த) வீரனெனப்படுகிற, மத்திரர் பிரான்உம்-மத்திரதேசத்தார்க்கு அரசனான சல்லியனும், புத்திரரில்-(அவனது) மக்களுள், ஆதி - முதல்வனான, உருமித்திரன்உம் - உருமித்திரனென்பவனும், வந்தார் - (எதிர்த்து) வந்தார்கள்; (எ - று.) துணைவரோடும் புத்திரரோடும் போர்புரி சேனையோடும், மத்திரபதி சுயோதனன் சூழ்ச்சியால் அவனுக்குப் படைத்துணையாயினான் ஆதலால், சல்லியபுத்திரனும் துரியோதனன்பக்கத்தவ னாவன். 74. | வந்தபிமனோடமரின், முந்தியிருவோருஞ் சிந்துகணைமாரிகளி, னந்தரமடைத்தார். |
(இ-ள்.) வந்து-, அபிமனோடு-, அமரில் முந்தி-போரில் முற்பட்டு, இருவோர்உம் -அவ்விரண்டுபேரும், சிந்து கணை மாரிகளின் - (தாம்) சொரிந்த அம்புமழைகளால்,அந்தரம் அடைத்தார் ஆகாயத்தை மறையச்செய்தார்கள்; (எ-று.) -பி - ம்:மறைத்தார். (212) 75. | அவரவரெடுத்தவிரு, தவருநடுவெட்டா விவர்கணைவிலக்குவன, கவர்கணைதொடுத்தான். |
(இ-ள்.) (உடனே அபிமன், தன் அம்புகளால்), அவர் அவர் எடுத்த இரு தவர்உம்- இவ்விரண்டுபேரும் எடுத்துவந்த இரண்டு விற்களையும், நடு வெட்டா - நடுவிலேதுண்டித்து, இவர் கணை விலக்குவன - இவர்களது அம்புகளைத் தடுப்பனவான,கவர் கணை (பகைவருயிரைக்) கவரவல்ல அம்புகளை, தொடுத்தான்-(இவர்கள்மேற்)பிரயோகித்தான்; (எ-று.)-கவர்கணை - நுனியிலே பிளப்புள்ள அம்பும், ஒன்றுபலவாகும் அம்புமாம். (213) 76. | மைந்தனொருவாளியினி, லந்தரமடைந்தா னொந்துபலவாளியொடு, தந்தைபுறகிட்டான். |
(இ-ள்.) (அப்பொழுது), மைந்தன் - சல்லியபுரத்திரன், ஒரு வாளியினில் - (அபிமனது)அம்புஒன்றால், அந்தரம் அடைந்தான்- வீரசுவர்க்கஞ் சேர்ந்தான் [இறந்தான்]:(பின்பு), தந்தை - அவன் தந்தையான சல்லியன், நொந்து- (புத்திரசோகத்தால்)வருந்தி, பல வாளியொடு- (தன்மேல் தைத்த) அநேக பாணங்களுடனே,புறகுஇட்டான் - முதுகுகொடுத்தான்; (எ - று.) (214) 77.- அபிமனது உறுதிநிலைமைகண்ட மகாரதர்பலர் உடைந்துபோதல். வென்றபிமன்வாளமரி, னின்றநிலைகண்டே யொன்றுபடமாவிரதர், சென்றனருடைந்தே. |
|