பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்135

வேறு.

84.- வென்றஅபிமன் புலிபோன்று மேற்செல்லுதல்.

அரவு யர்த்தவன் மதலையொ டடலுடை யரசர் புத்திர ரனை
                                  வரு மெழுபரி,
யிரவி பொற்கதிர் தெறுதலி னிரிதரு   மிருளெனத்
                       திசை திசைதொறு முதுகிட,
வுரனு டைப்பணை முழவுறழ் திணிபுய னொருச மர்த்தனு
                            மொருதனி யிரதமும்,
விரவி முற்பொரு களமழ குறும்வகை விறல்வ யப்புலி
                           யெனவெதிர் முடுகவே.

     (இ-ள்.) அரவு உயர்த்தவன் மதலையொடு-பாம்புக்கொடியை உயர எடுத்த
துரியோதனனுக்குக் குமாரனான இலக்கணனுடன் (வந்த), 'அடல்உடை அரசர்
புத்திரர் அனைவர்உம்-வலிமையையுடைய (மற்றைய) இராசகுமாரர்களெல்லோரும்,-
எழுபரி இரவி-ஏழு குதிரைகளையுடைய சூரியனது, பொன் கதிர்-பொன்னிறமான
அல்லது அழகிய கிரணம், தெறுதலின் - அழித்தலால், இரிதரும்- சிதறியோடுகிற,
இருள் என - இருள்போல, திசை திசைதொறும்- எல்லாத்திக்குக்களிலும், முதுகு
இட- புறங்கொடுத்தோடும்படி,-உரன் உடை-வலிமையையுடைய, பணை-பருத்த,
முழவுஉறழ்- மிருதங்கமென்னும் வாத்தியத்தை (வடிவத்தில்) ஒத்த, திணிபுயன் -
வலியதோள்களையுடைய, ஒரு சமர்த்தன்உம்-அசகாயசூரனான அபிமனொருத்தனே,
ஒருதனி இரதம்உம் வீரன்- ஒப்பற்ற (தன்) ஒருதேரின்மீது பொருந்தி, முன் பொரு
களம்அழகு உறும் வகை எதிரிற் போர்செய்கிற யுத்தகளத்தின் இடம் அழகுமிகும்
படி,விறல் வயம் புலி என- வெற்றியையும் வலிமையைமுடைய புலிபோல, எதிர்
முடுக-எதிர்த்துநெருங்க. (எ - று)- "இளையவித்தகன் எதிருறவருதலும்" (85)என
இயையும;்குளகம்.

     பெருந்திசையும் கோணத்திசையு மெனத் திசை இருவகைப் படுதலால்.
'திசைதிசைதொறும்' என்றார் மூன்றாம்அடியில், உம்மைகள் இரண்டும் -
இழிவுசிறப்பாய், தனித்திருக்குந்தன்மையைக் காட்டும். இவற்றில் குற்றெழுத்துக்கள்
பயின்றுவந்தது, குறுஞ்சீர்வண்ணம்; இவற்றில்வந்த சில ஐகாரங்களும்
குறுக்கமாதலால், குற்றெழுத்தோ டொக்கும்.

     இதுமுதல் ஏழு கவிகள் - ஒன்று ஐந்தாஞ் சீர்கள் புளிமாச்சீர்களும், இரண்டு
ஆறாஞ் சீர்கள் கூவிளச் சீர்களும், மற்றைநான்கும் கருவிளச்சீர்களுமாகிய
கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியச் சந்தவிருத்தங்கள். 'தனன தத்தன
தனதன தனதன தனன தத்தன தனதன தனதன' எனச் சந்தக் குழிப்புக் காண்க.
                                                              (222)

85.-ஆறுகவிகள் - அப்போது எதிர்ப்பட்ட இலக்கணகுமாரனொடுபொருது
அபிமன் அவனது தலையைத்துணித்தமை கூறும்.

வளையமுத்துதிர்விழியுடைவரிசிலைமதனன் மைத்துனனவனிபர்
                                         பலரையு,
மிளையெனப்புறமிடவமர்பொருதபினிளையவித்தகனெதி
                                      ருறவருதலு,
முனையெயிற்றிளநிலவெழவகல்வெளிமுகடுடைப்ப
                          தொர்நகைசெய்துகடவின,
னுளைவயப்பரியிரதமுமிரதமுமுரனொடொத்தினவுருள்களு
                                      மொடியவே.