பக்கம் எண் :

138பாரதம்துரோண பருவம்

ஒப்புமையாதலும் ஏற்கும். விழிகடை நிமிர்தர் 'கோபத்தோடு கடைக்கண்களால்
உறுக்கிவிழித்துப்பார்த்தல். நெறி கடைப் புருவம் மிகமுரிதல் - கோபத்தாற்
புருவத்தை மிகுதியாக நெறித்தல்.  மொகுமொகுத்தல் - ஈரடுக்கு ஒலிக்குறிப்பு;
இரட்டைக் கிளவி.                                          (224)

87.ஞெலிமரத்தினுமனனெரியெழவெழநிருபர்விட்டனகசரத
                                   துரகமு,
மெலிவெழப்பிறகிடவுநின்னொருதனிவிறல்குறித்திரதமு
                           மெதிர்கடவினை,
யொலிபடுத்தெதிர்வரின்விரிசுடரெதிருலவுவிட்டி
                       லினுயிரழிகுவையென,
வலியுறுத்தினனவனிபன்மதலையைவலியவச்
                   சிரன்மதலைதன்மதலையே.

     (இ-ள்.) ' ஞெலி மரத்தின்உம் - அரணிக்கட்டையினின்று உண்டாவதனினும்,
மனன் எரி எழ எழ-மனத்தில் கோபாக்கினி மிகுதியாக உண்டாக, நிருபர் -
அரசர்கள், விட்டன-(எதிர்) செலுத்தினவையான, கச ரத துரகம்உம் - யானைகளும்
தேர்களும் குதிரைகளும் (எல்லாம்), மெலிவு எழ - தளர்ச்சிமிக, பிறகு இடஉம்-
பின்னிட்டுஓடவும், (நீ), நின் ஒரு தனி விறல் குறித்து-(துணையில்லாமல்) தனிப்பட்ட
நின் ஒருத்தனது வலிமையை நன்குமதித்துக்கொண்டு, இரதம்உம் எதிர் கடவினை -
தேரையும் (என்) எதிரிற் செலுத்தினாய்; (இங்ஙனம்), ஒலி படுத்து எதிர் வரின் -
ஆரவாரத்தை மிகுதியாகச்செய்து எதிரில்வந்தால், விரி சுடர் எதிர் உலவு
விட்டிலின்- பரவியெழுகிற விளக்கி னெதிரிற்பட்ட விட்டிலென்னுஞ்சிறுபறவை
போல உயிர்அழிகுவை - இறப்பாய், என- என்று, அவனிபன் மதலையை -
துரியோதனராசன்மகனான இலக்கணனை (நோக்கி), வலிய வச்சிரன் மதலைதன்
மதலை -வலிமையையுடைய வச்சிராயுதத்தையுடைய இந்திரனது மகனான
அருச்சுனனுடைய புத்திரனாகிய அபிமன், வலி உறுத்தினன்-வலிமையோடு
உறுத்திக்கூறினான்: (எ-று.)-இது - அபிமனுடைய வீரவாதம்.

     ஞெலிமரம் - தீக்கடைந்தெடுக்கப்படும் மரம்; "அரணி ஞெலி கோல்
ஞெகிழிதீக்கடைகோல்" என்பது பிங்கலந்தை; "தீயைத்தரு கோலே ஞெலிகோ
லென்ப" என்றநிகண்டுங் காண்க. விட்டில்-பறந்து விளக்கில் வீழ்ந்து அழிவதொரு
செந்து.                                                       (225)

88.இவனுமப்பொழுதெதிரொலியெனநனியிகலருச்சுனன்மத
                            லையையுனதுயி.,
ரவனிபர்க்கெதிர்கவருவனொருநொடியளவையிற்
                 பொருதெனமுனையணுகினன்,
சிவன்வளைத்தபொன்மலையினும்வலியினசிலைவளைத்
                        தனரிருவருமெறிதரு,
பவனன்மைக்கடல்வடவையைமுனிதருபவனமொத்ததுபடுகள
                                முழுதுமே.

     (இ-ள்.) இவன்உம் - இலக்கணனும், அப்பொழுது-, எதிர் ஒலி என -
பிரதித்தொனிபோல, நனி - மிகுதியாக, இகல் அருச்சுனன் மதலையை-வலிய
அருச்சுனனுக்குக் குமாரனான அபிமனை (நோக்கி), '(யான்), பொருது - போர்
செய்து,ஒருநொடி அளவையில்- ஒருகைந் நொடிப்பொழுதினுள்ளே, உனது உயிர் -
உன்உயிரை, அவனிபர்க்கு எதிர்- அரசர்களெதிரில், கவருவன் - வாங்கிவிடுவேன்,'
என- என்று (வீரவாதஞ்) சொல்லிக்கொண்டு, முனை அணுகினன்-