பக்கம் எண் :

140பாரதம்துரோண பருவம்

திருமேனியையுடைய கண்ணனுக்கு, மருகன்-மருமகனான அபிமன், முட்டிஉம்-
(வில்லைப்பிடிக்குங்)கைப்பிடியும், நிலைஉம் - நிற்கிறநிலைமையும், மெய்
வலிமைஉம்-தேகபலமும், அழகு உற - அழகாகப் பொருந்த, தொடு-எய்த, கணை-அம்புகள்,குரு பதி மகன்-குருகுலத் தலைவனான துரியோதன புத்திரனாகிய
இலக்கணனது,அவயவத்தினில்-உடம்பின் உறுப்புக்களில், அடைவு உற -
பதியும்படி, முழுகின -முழுவதுந் தைத்தன; (அவற்றால், அவனது), கழல்கள்-
கால்கள், அற்றன -அறுப்புண்டன; இரு தொடை - இரண்டு தொடைகளும்,
நழுவின - கீழ்விழுந்தன;கவசம்-உடற்கவசம், அற்றது-அறுபட்டது: கரம் மலர் -
தாமரைமலர்போன்ற கைகள்,பயமுடன்-தோள்களுடனே, முழுதும் அற்றன -
முழுவதும் அறுபட்டன; ஒளிவிடுஒளியைவீசுகிற, நவமணி - நவரத்தினங்களைப்
பதித்த, முகுடம் -கிரீடம், முகிழ்நகை முகனொடே -அரும்புகிற (புன்)
சிரிப்பையுடைய முகத்துடனே, அற்றது-; (எ -று.)

     முட்டி-முஷ்டி யென்னும் வடசொல்லின் திரிபு, நவமணி - கோமேதகம், நீலம்,
பவழம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம்' முத்து, வைடூரியம். வைரம் என்பன.
முகுடமெனினும் மகுட மெனினும் ஓக்கும். 'முகிழ்நகை முகன் என்றதனால், போரில்
இலக்கணனுக்கு இருந்த உற்சாகம் விளங்கும். முகன் முகுடத்தொடு அற்றது என
உருபுபிரித்துக்கூட்டி யுரைக்க.                                      (228)

வேறு.

91. - புதல்வனிறந்ததுகேட்டுத் துரியோதனன் கண்ணீர்வடித்து வெம்பி
துரோணன் முதலியவரோடு சில கூறலுறுதல்.

இலக்கண குமரன் வெங்கா னெரித்தவன் குமர னேவா
லலக்கணுற் றாவி மாய்ந்தா னமரிடை யென்று கேட்டுக்
கலக்கணீர்சொரிய நின்று கண்ணிலி குமரன் வெம்பி
வலக்கணேர் முனிவ ரோடு மன்னவ ரோடுஞ் சொல்வான்.

     (இ-ள்.) (இவ்வாறு), 'இலக்கணகுமரன்-, வெம் கான் எரித்தவன் குமரன்
ஏவால்-கொடிய காண்டவவனத்தை எரியச் செய்திட்ட அருச்சுனனுக்குப்
புத்திரனானஅபிமன்யுவின் அம்புகளால், அமரிடை-போரில், அலக்கண் உற்ற-
துன்பமடைந்து,ஆவி மாய்ந்தான் - உயிரொழிந்தான்', என்று கேட்டு - என்று
கேள்விப் பட்டு, கண்இலி குமரன் - பிறவிக்குருடனான திருதராட்டிரனுக்குப்
புத்திரனான துரியோதனன்,கலம் கண் நீர் சொரிய நின்று- மிக்க கண்ணீர்
வடிய நின்று, வெம்பி -தாபங்கொண்டு, வலக்கண் நேர்-(தனக்கு)
வலக்கண்ணையொத்த, முனிவரோடுஉம்-(துரோணன் கிருபன் முதலிய),
அந்தணர்களுடனும், மன்னவரோடுஉம்-அரசர்களுடனும், சொல்வான் -
(ஒருவார்த்தை) சொல்பவனானான்; (எ - று.)-அதனை அடுத்த கவியிற் காண்க.

     கிருஷ்ணனும் அருச்சுனனும் ஒருநாள் பூம்பந்து விளையாடுகையிலே,
அக்கினிபகவான் மிகப்பசித்து அந்தணவடிவங் கொண்டு வந்து 'இந்திரனது
காவற்காடாய் யாவர்க்கும் அழிக்கவொண்ணாத