பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்141

படியாய் நிலவுலகத்திலிருக்கின்ற காண்டவவனமென்னும் பூஞ்சோலையை
அதிலுள்ளசராசரங்களுடனே எனக்கு  விருந்திடவேண்டும்' என்று வேண்ட,
கிருஷ்ணஅருச்சுனர்கள் அங்கேபுக்கு ஒதுங்கி யிருக்கின்ற அசுரர் முதலிய
துஷ்டர்களைஅழித்தருள வேண்டுமென்னும் நோக்கத்தால், ' நீ இதனைப் புசி'
என்று இசைந்துஅளிக்க, உடனே நெருப்புப்பற்றி யெரித்ததென்பது. (கதை).
அங்ஙனம்எரிக்கையில்,இந்திரன் சினந்து பெய்வித்த பெருமழையைச் சரக்கூடுகட்டித்
தடுத்தும், கோபித்துத்தேவர்கூட்டத்துடன் வந்து பொருத இந்திரனைப்
புறங்கொடுத்தோடச்செய்தும்.அவ்வனத்தினின்று தப்பியோடுகிற பிராணிகளை
அம்பெய்து கொன்று தழலில்விழுத்தியும் பலவாறு உதவிபுரிந்தமையால்,
அருச்சுனன் 'வெங்கானெரித்தவன்'எனப்பட்டான்.

     கலம் - ஒரு முகத்தலளவு; பன்னிரண்டுமரக்கால் கொண்டது: இதனை இங்கு,
மிகுதியை விளக்குதற்கு எடுத்துக்கூறினார். "கண்ணிற்சிறந்த வுறுப்பில்லை"
என்றபடிகண் சிறந்த உறுப்பாதலால், சிறந்த அங்கமாகியவ ரென்றற்குக் கண்ணை
உவமைக்கூறினார். ஆடவர்க்கு வலக்கண் சிறத்தலால். அதனைக் குறித்தார். இனி,
வலக்கண் என்பதற்கு- மேன்மையையுடைய கண்ணென்றல். பொருத்தம;்
"இடக்கணாகவலக்கணாக விரண்டு மொக்கும்" எனக் கீழ்ச்சஞ்சயன்றூதுசருக்கத்தில்
வந்தது காண்க.

     இதுமுதற் பதினாறு கவிகள் கீழ்ப் பதினொன்றாம்போர்ச்சருக்கத்தின்
முதற்கவிபோன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள்.

92.-துரியோதனன் 'என்மைந்தனைக் கொன்றவனைக்கொல்லாவிடின்
இவ்வரசு முதலியன வேண்டா' எனல்.

மன்னவர்மைந்தரோடென்மைந்தனைக்கொன்றமைந்தன்
றன்னையுமிமைப்பிற்சென்றுசயமுறச்செகுத்திலீரேற்
பின்னையிவ்வரசும்வேண்டேன்பெருமிதவாழ்வும்வேண்டே
னென்னுயிர்தானும்வேண்டேனென்றனனிராசராசன்.

     (இ-ள்.) 'மன்னவர் மைந்தரோடு-(பல) ராசகுமாரர்களுடனே, என் மைந்தனை
- என்மகனான இலக்கணனையும். கொன்ற-, மைந்தன் தன்னைஉம்-அருச்சுனன்
புத்திரனான அபிமந்யுவையும், இமைப்பில் - கண்ணிமைப்பொழுதிலே.
(நீங்கள்).சென்று-, சயம் உற-வெற்றியுண்டாக, செகுத்திலீர் ஏல்-பகையழித்திடீராயின்,
பின்னை-பின்பு. (யான்). இ அரசுஉம் வேண்டேன்-இந்த அரசாட்சியையும்
விரும்பேன்: பெருமிதம் வாழ்வுஉம் வேண்டேன் - பெருந்தன்மையையுடைய இன்ப
வாழ்க்கையையும் விரும்பேன்; என் உயிர் தான்உம் வேண்டேன்-என்று உயிரையும்
விரும்பேன், 'என்றனன்-என்று(தன்சேனைவீரர்களை நோக்கிக்) கூறினான்:
இராசராசன் - துரியோதனன்; (எ - று.)-பி-ம்: கொன்றுசயமுற.           (230)

        93.- அபிமனைக் கொல்வதாக அவர்கள் சபதஞ்செய்தல்.

தனித்தனியரசரெல்லாந்தாளிணை பணிந்துபோற்றிப்
பனித்துயிர்பொன்றிவீழப்பார்த்தன்மாமகனையின்னே