பறித்துக்கொண்டு சக்கரபாணியிடைத் தான் பயின்ற அபியோகத்தினால் ஆங்கு அதனை அபிமந்திரித்து அங்குலிப்படுத்தி அந்தரத்திடைத் திரித்துவிடுதலும்' என்பதுபாரதவெண்பாவின் உரைநடை அது கொடியாரையும்-உகரம் இகரமாயிற்று. (253) 116.- அபிமன் போர்த்திறமைகண்டு துரியோதனன் மனம்புழுங்குதல். ஒருகையினி லுருணேமிகொ டோடித்திசை தோறும் வருகையற வெறிவானுயர் வனமாலியை யொத்தான் இருக்கையொரு வரைமண்ணிலி றைஞ்சாமுடி யிறைவன் பொருகையற வபிமன்பொரு போர்கண்டு புழுங்கா. |
இதுவும், மேற்கவியும் - குளகம். (இ-ள்.) ஒருகையினில் - (தனது) கையொன்றிலே, உருள்நேமி கொடு- தேர்ச்சக்கரமாகிய சக்கரத்தை யெடுத்துக்கொண்டு, திசை தோறும்உம் ஓடி - எல்லாத்திக்குகளிலும் சுழன்று, வரு கை அற - பொருந்தின படைவகுப்பு அழிய, எறிவான் - துணிப்பவனான அபிமன், உயர் வனமாலியை ஒத்தான் - சிறந்த வநமாலையையுடைய (சக்கரபாணியான) திருமாலைப் போன்றான்; (அப்பொழுது), இரு கை ஒருவரை மண்ணில் இறைஞ்சா முடி இறைவன் - தன்இரண்டு கைகளைக்கொண்டு [அஞ்சலிசெய்து] ஒருத்தரையும் பூமியில் வணங்காத சிரசையுடைய மன்னனான துரியோதனன்,-பொருகை அற - (எவரும் எதிர்த்துப்) போர்செய்த லில்லாதபடி, அபிமன் பொரு-அபிமந்யு செய்கிற, போர்-யுத்தத்தை, கண்டு-, புழுங்கா-மனங்கொதித்து,-(எ-று.)-"சயத்திரதனையழையென" என்று மேற்கவியோடு தொடரும். கை - படைவகுப்பு- வநமாலீ என்ற வடமொழித்திருநாமம்- வநமாலையையுடையவனென்று பொருள்படும்; வநமாலை - ஒருவகைமாலை:இது - திருமாலுக்கு உரியது. சக்கரத்தைக் கையிலேந்திய அபிமனுக்கு, வியாசரும் சக்கரபாணியையே உவமைகூறினார். (254) வேறு. 117. துரியோதனன் சயத்திரதனையழைக்க அவன்வருதல். ஒருவ னம்படைத் தலைவர்க ளெவரையு மொருகை கொண்டடற் றிகிரியின்விழவெதிர். பொருவ தென்கொலிச் சிறுவனொடொருபடி பொழுது சென்றதெப்பொழுதமர் முடிவது, வெருவருந்திறற் றரணிபர் களிலிவன் விளிய வென்றிடத் தருமவ ரிலரினி, யருளு டன்சயத் திரதணை யழையென வவனும் வந்துபுக் கனனொரு நொடியிலே. |
(இ-ள்.) ஒருவன் - (இந்தஅபிமன்) ஒருத்தன், நம் படை தலைவர்கள் எவரைஉம் -நமது சேனையிலுள்ள சிறந்தவீரர்களெல்லோரையும், அடல் திகிரியின் விழ-வலியசக்கரத்தால் துணிந்து விழும்படி, ஒருகை கொண்டு-ஒருகையைக் கொண்டே, எதிர்பொருவது - எதிரிற் போர்செய்வது, என்கொல் - என்ன சாமர்த்தியமோ?இசிறுவனொடு-இந்தச் சிறுபிள்ளை யொருத்தனுடனே, ஒரு படி பொழுது சென்றது -இன்றையொருநாளைப் பொழுது |