பக்கம் எண் :

154பாரதம்துரோண பருவம்

முழுவதும் பெரும்பாலும் கழிந்துவிட்டது; எ பொழுது அமர் முடிவது - (இனி)
எப்பொழுது போர் முடியும்? (இங்குள்ள). வெருவரும் திறல் தரணிபர்களில்-
அஞ்சும்வலிமையையுடைய அரசர்களுள், இவன் விளிய வென்றிட தகுமவர்-
இவ்வபிமன்இறக்கும்படி சயிக்கத்தக்கவர், இலர் - (எவரும்) இல்லை: (ஆதலால்),
இனி-,அருளுடன்-கருணையோடு, சயத்திரதனை அழை-,'என- என்று
(துரியோதனன்துரோணனை நோக்கிக்) கூற, (அங்ஙனமே துரோணனால்
அழைக்கப்பட்டு),அவன்உம்-அச்சயத்திரதனும், ஒருநொடியில் வந்து புக்கனன்-
ஒருநொடிப்பொழுதிலே வந்து சேர்ந்தான்; (எ - று.)

     சேனைமுழுவதுக்குந்தலைவனாகிய துரோணனொழியக் கிருபன் கர்ணன்
முதலியோரும் சேனையின் ஒவ்வொருபகுதிக்குத் தலைவராதலால்,
'நம்படைத்தலைவர்கள்'எனப்பட்டார். கீழ் யாவரும் அபிமனுக்கு அஞ்சித்
திசைதோறும் ஓடியதனால், 'வெருவரும்' என்ற அடைமொழி, தரணிபர்களுக்குக்
கொடுக்கப்பட்ட தென்னலாம். 'அருளுடன் அழை' என்றதனால், துரோணனை
நோக்கித் கூறினனென்பது பெறப்படும்; இனி, அன்போடு (ஒருவனைநோககித்
துரியோதனன்) கூற எனக் கருத்துக்கொள்ளினுமாம்.

     இதுமுதல் பதினான்கு கவிகள்- இச்சருக்கத்தின் 84-ஆம் கவிபோன்ற
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தங்கள்;
ஆயினும், 'தனன தந்தனத்
தனதன தனதன தனன தந்தனத் தனதன தனதன' என இவற்றிக்குச் சந்தக்குழிப்பு
வேறுபடும்.                                                     (255)

118.- சிவபிரான் கதைகொண்டு அபிமனைச் உயிர்கவருமாறு
சயத்திரதனுக்குச் சொல்ல அவன் விடைபெற்றுப்போதல்.

அருகுநின்றகொற்றவர்களுமவரவரரியதிண்டிறற்குமரரும
                                     மரிலுன்,
மருகனும்படப்பொருதனன்மகபதிமகன்மகன்றனைப்பசு
                                 பதியருளிய,
வுருகெழுங்கதைப்படைகொடுகவருதியுயிரையென்
                       றெடுத்துரைசெயவரசனை,
யிருகையுங்குவித்தருளுடன்விடைகொளுமெழில்கொள்சிந்துவுக்
                           கொருதனிமுதல்வனே.

இதுவும், மேற்கவியும் - குளகம்.

     (இ-ள்.) (வந்துபுக்க சயத்திரதனை நோக்கித் துரியோதனன்), 'அருகு நின்ற-
சமீபத்தில் எதிர்த்துநின்ற, கொற்றவர்கள்உம்-அரசர்களும், அவர் அவர்-அந்தந்த
அரசரின், அரிய திண் திறல்குமார்உம்-அருமையான கொடிய வலிமையையுடைய
குமாரர்களும், உன் மருமகன்உம்-உனக்கு மருமகனான இலக்கணனும், அமரில்-
யுத்தத்தில், பட-அழியும்படி, பொருதனன்-போர்செய்தவனான மகபதி மகன் மகன்
தனை-இந்திரனது பௌத்திரனாகிய அபிமனை, பசுபதி அருளிய-
சிவபிரான்(உனக்குக்) கொடுத்தருளின, உரு கெழும் கதை படைகொடு-அச்சம்
விளங்குகிற கதாயுதத்தால், உயிரை கவருதி-உயிரைவாங்குவாய்,' என்று எடுத்து
உரை செய-என்று தொடங்கிச் சொல்ல, (அதற்கு உடன்பட்டு), அரசனை -
துரியோதனனை,