பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்155

இரு கைஉம் குவித்து-இரண்டு கைகளையுங் கூப்பித்தொழுது, அருளுடன் விடை
கொளும்- (அவனுடைய) கருணையுடனே அனுமதிபெற்றுப்போன, எழில் கொள்-
அழகைக்கொண்ட, சிந்துவுக்கு ஒரு தனி முதல்வன்-சிந்துதேசத்துக்கு ஒப்பற்ற
தனியரசனான சயத்திரதன்,-(எ - று.)- "உரைசெய்து***எடுத்தனன்" என மேற்கவியில்
முடியும். முதல்வன் விடைகொளும்என முடித்தலுமாம்.

    இவன்மனைவிக்கு மருமகனாகவே இவனுக்கும் மருமகனெனப் பட்டான்.
பசுபதிஎன்ற வடமொழித்திருநாமம் -இடபத்துக்குத் தலைவனென்றும்
உயிர்களுக்குத்தலைவனென்றும், பொருள்படும். "உருவுட்காகும்" என்பது,
தொல்காப்பியம்.                                             (256)

119. - சயத்திரதன் தேரை விரையச் செலுத்துமாறு சொல்லிச்
சிவபிரானைத் தியானித்து ஒருகதையை யெடுத்தல்.

உரகவெங்கொடித்தரணிபனலமருமுளமகிழ்ந்திடக்கதிபல
                                     படவரு,
துரகதம்பிணித்தணிகொளிரதமிசைதுவசமுந்தொடுத்தடலுடை
                                    வலவனை,
விரைவுடன்செலுத்துகவெனவரைசெய்துவிழிசிவந்துசிற்றிள
                                  மதிபுனைதரு,
கரகவண்புனற்சடைமுடியவனடிகருதிநின்றெடுத்தனனொரு
                                    கதையுமே.

     (இ-ள்.) உரகம் - பாம்பையெழுதிய, வெம் - பயங்கரமான, கொடி -
துவசத்தையுடைய,தரணிபன் - துரியோதனராசனது, அலமரும் உளம் - கலங்கிய
மனம், மகிழ்ந்திட-மகிழ்ச்சியையுடைய, (சயத்திரதன்), 'கதி பலபட வரு -
அநேகவகைக்கதிகள்பொருந்த வருகிற, துரகதம் - குதிரைகளை, பிணித்து - பூட்டி,
அணி கொள்-அழகைக்கொண்ட, இரதம்மிசை-தேரின்மேல், துவசம்உம் தொடுத்து -
கொடியையும்நாட்டி, விரைவுடன் செலுத்துக - வேகமாக (த்தேர்) செலுத்துவாய்'
என - என்றுஅடல் உடை வலவனை உரைசெய்து - வலிமையையுடைய (தன்)
சாரதியை(ப்பார்த்து)க் கூறி,-விழி சிவந்து-(கோபத்தாற்) கண்சிவந்து,-சிறு இள
மதிபுனை தரு-சிறிய இளஞ்சந்திரனைத் தரித்த, கரகம் கண் புனல்-(பிரமன்கைக்)
கமண்டலத்தினின்று உண்டான சிறந்த கங்கை நீரையுடைய, சடை முடியவன் -
சடைமுடியையுடையசிவபிரானது, அடி - திருவடிகளை, கருதி நின்று -
தியானித்துநின்று, ஒரு கதைஉம் எடுத்தனன்-ஒப்பற்ற கதாயுதத்தையும்
எடுத்துக்கொண்டான்; (எ - று.)

     பலகதி - ஐவகைநடை; அவை -"விக்கிதம் வற்கிதம் வெல்லுமுபகண்டம்,
மத்திமஞ்சாரியோ டைந்து" என்பன. ஆஸ்கந்திதம், தோரிதகம், ரேசிதம், வல்கிதம்,
புலுதம்-எனவும்படும்; இவற்றுள், நிச்சலமாக அதிவேகமும் அதிமந்தமு மாகாமல்
சமமானகதி-ஆஸ்கந்திதம்; அதனினும் அதிகமாய்ச் சதுரமான கதி-தோரிதகம்;
தாளகதியுடன்வட்டமிட்ட கதி - ரேசிதம்; வேகத்தினால் முன்னங்கால்களைத்தூக்கி
வரும் நடை-வல்கிதம்; அவ்வளவு வேகமாகவும் சமமாகவும் போகுகை - புலுதம்:
இனி, வேகமும்மெதுவுமின்றிச் சமமான நடை - ஆஸ்கந்திதம், வேகமான
சமத்காரமுள்ள நடை-தௌரிதகம், கோணலில்லாத நேர்நடை-ரேசிதம்,
நாலுகாற்பாய்ச்