சல்- வல்கிதம், குதித்துக்குதித்துப்போதல்-புலுதம்என்றும் கூறு வாருமுளர். இனி மல்லகதி, மயூரகதி, வியாக்கிரகதி, வாநரகதி, விருஷபகதி என்பனவுமாம். இவை- பஞ்சகதி யெனவும், பஞ்சதாரையெனவும்படும். இவற்றோடு பஞ்சளி, முரளி, சுடால வலநம் என்னும் நான்குங் கூட்டி நவகதி கூறுதலும் உண்டு. கரகம் - வடசொல். பரிசுத்திக்காகச் சலபாத்திரத்தை எப்பொழுதும் கையில் வைத்திருத்தல், வைதிக ரியல்பு. கங்கைப் புனலுக்கு வண்மை -தன்னில் ஒருகால்மூழ்கியவர்க்கும் அருவினையொழித்து உயர்பத மருளுவது. (257) 120. - அபிமனும் திகிரியையொழித்துக் கதாயுதத்தைக்கொண்டு கர்ச்சித்தல். மறலிதண்டேனக்கொலைபுரிதொழின்மிகவலியதண்டுகைக் கொளுமளவினிலிவன், விறல்புனைந்தகைத்திகிரியையொழியமுன்வினையழிந்துபற் றலர்முதுகிடவிழு, திறல்விளங்குபொற்கதைகொடுவிரைவொடு திருகிநின்கதைக் கிதுகதையெனவுரை, யுறவிளம்பியப்பொருகளமுழுவதுமுருமெறிந்ததொத் துவகையொடதிரவே.. |
இதுவும், மேற்கவியும் -குளகம். (இ-ள்.) மறலி தண்டு என - யமனது தண்டாயுதம்போல, கொலைபுரி தொழில் மிகவலிய-கொலைசெய்யுந்தொழிலிலே மிகவும்வலிமையையுடைய, தண்டு- கதாயுதத்தை,கை கொளும் அளவினில்-(அந்தச்சயத்திரதன்) கையிலெடுத்துக்கொண்டவளவிலே,-இவன்-அபிமன், விறல் புனைந்த கை திகிரியை ஒழிய-வெற்றியைக்கொண்டதன்கையிலுள்ள சக்கராயுதத்தை நீங்க(வீட்டு),- முன் - முன்னே[பலபோர்களில்],பற்றலரர் - பகைவர்கள், வினை அழிந்து- போர்த்தொழிலை யொழிந்து, முதுகுஇட -புறங்கொடுக்கும்படி, விழு - (அவர்கள்மேல்) விழுந்தன்மையதான, திறல் விளங்கு -வலிமைமிக்க, பொன் கதை கொடு - அழகியதொரு கதாயுதத்தை யெடுத்துக்கொண்டு, விரைவோடு திருகி - வேகமாகச் சுழற்றி, நின் கதைக்கு இது கதைஎன-'உனது கதாயுதத்துக்கு (ஏற்ற) கதாயுதம் இது' என்று, உரைஉற விளம்பி -விரவாதத்தை மிகுதியாகச் சொல்லி, அ பொரு களம் முழுவதுஉம்-அந்தப்போர்க்களம் முழுவதிலும், உரும் எறிந்தது ஒத்து - இடியிடித்தாற்போன்று,உவகையொடு அதிர-உற்சாகத்தோடு கர்ச்சிக்க,- (எ - று.)- "இருவரும் உடற்றினர்"என மேற்கவியில் முடியும். மறல் - கொலைத்தொழில்; அதனையுடையவன், மறலி, மறலிதண்டு- காலதண்டம். (258) 121.- அபிமன் சயத்திரதன் இருவரும் பொருதல். சினவுசிங்கமொத்திருவருமுறைமுறைதிருகிவெஞ்செருப்புரி தலினெழுமொலி, கனல்வளைந்துகட்டனிலமுமெறிதருகடலதிர்ந் தெனக்கனமதிர்வனவென, மினல்பரந்தெழத்திசைகளின்முடிவுறவெடிகொடண்டபித்தியு முடைதரவெழ, மனமழன்றுபொற்கிரிநிகர்தமபுயவலிமைகொண்டுடற்றினர் வயமலியவே. |
|