பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்157

     (இ-ள்.) சினவு சிங்கம் ஒத்து- கோபித்து (இரண்டு) சிங்கங்கள் போன்று,
இருவர்உம்-(அபிமன் சயத்திரதன் என்னும்) இரண்டு பேரும், முறை முறை திருகி-
மாறிமாறி(க்கதை) சுழற்றி, வெம் செரு புரிதலின்-கொடிய போரைச் செய்தலால்,
எழும் -உண்டான, ஒலி-ஓசை,-கனல் வளைந்து கட்டு-காலக்கினியாற் சூழ்ந்து
எரிக்கப்பட்டு,அனிலம்உம் எறி தரு-காற்றும் வீசப்பெற்ற, கடல்-, அதிர்ந்து என-
முழங்கினாற்போலவும், கனம்-மேகங்கள், அதிர்வன என-முழங்குவனபோலவும்,-
மினல் பரந்து எழு-மின்னல் பரவிக் காணப்படுமாறும், திசைகளின் முடிவு உற -
திக்குக்களின் எல்லையை அளாவ, வெடி கொடு-வெடித்தலைக் கொண்டு, அண்ட
பித்திஉம்-அண்டகோளத்தின் சுவர்களும், உடைதர-உடையுமாறும்,-எழ-
மிக்கொலிக்க,-மனம் அழன்று-மனங்கொதித்து, பொன் கிரி நிகர் தம் புயம்
வலிமைகொண்டு-மேருமலையை யொத்த தங்கள் தோள்களின் வலிமையினால்,
வயம் மலிய - வெற்றி மிக, உடற்றினர்-போர் செய்தார்கள்; (எ - று.) பி-ம்:
கட்டனிலமும். வெடிகொள்.

     ஒலிஎழ என இயையும். மின்னல்பரந்துஎழுதலும் அண்ட பித்தியுடைதலும்,
ஆரவாரமிகுதிபற்றிய அதிர்ச்சியாலாகும்.                           (259)

122.-அபிமன் வெற்றிபடக் கதாயுத மெறிந்தமை.

உரியசிந்துவுக்கரசனதிருபுயமொடியவென்புநெக் குடன்முரி
                                       தரவுட,
னெரியவெங்குடர்க்கொடிநெடுவளையமுநிமிரவன்றொ
                       டைப் புடைமிடைநடையுற,
வரியகண்கனற்பொறியெழமணிமுடியழகழிந்துபொற்பிதிர்
                                  படவுதிர்பட,
வெரியெழுஞ்சினத்தொடுதனதொருகையினிலகுதண்ட
                          மிட்டிகலுடனெறியவே.

இதுமுதல் நான்கு கவிகள் - குளகம்.

     (இ-ள்.) சிந்துவுக்கு உரிய அரசனது - சிந்துதேசத்துக்கு உரிமையையுடைய
அரசனான சயத்திரதனது, இரு புயம் - இரண்டு தோள்களும், ஒடிய - ஒடியவும்,
என்பு நெக்கு - எலும்புகள் நொருங்கி, உடன் முரிதர - உடனே பின்னப்படவும்,
உடல் நெரிய-உடம்பு நசுங்கவும், வெம் குடர் நெடு கொடி வளையம்உம் -கொடிய
குடலாகிய நீண்ட கொடிச்சுற்றும், நிமிர-(அத்தன்மைநீங்கி) நீட்சியடையவும், வல்
தொடை புடை-வலிய தொடைகளினிடம், மிடை நடை உற-(ஒன்றோடொன்று)
நெருங்கிய தோற்றத்தையடையவும், அரிய கண்- அருமையான கண்களினின்று,
கனல் பொறிஎழ-தீப்பொறி கிளம்பவும், மணி முடி-இரத்தினங்கள் பதித்த கிரீடம்,
அழகு அழிந்து-, பொன் பிதிர்பட உதிர்பட - பொற்பொடிகள் மயமாக உதிரவும்,
(அபிமன்), எரி எழும் சினத்தொடு - தீப்பற்றி யெழும்படியான கோபத்துடனே, தனது
ஒரு கையின் இலகு தண்டம் இட்டு-தனது ஒன்றாகிய கையிலே விளங்குகிற
கதாயுதத்தை வீசி, இகலுடன் எற்றிய - வலிமையோடுதாக்க,- (எ - று.)-
"சிந்துவுக்கரசனுங் கதையெறிய" என அடுத்த கலியோடு தொடரும். பி - ம்:
முரிதரவுரம்.