பக்கம் எண் :

158பாரதம்துரோண பருவம்

     'சிந்துவுக்கரசனது' என்பதை, என்பு முதலிய ஆறனொடுங் கூட்டுக.
தொடைப்புடை - தொடைகள் மோதுகின்ற என்றலும் ஒன்று. இப்பாட்டில் டகரம்
பலவிடத்துவந்தது, 'விருத்தியநுப்பிராசம்' என்னுஞ் சொல்லணி; அதாவது-
எழுத்துஒன்றேனும் பல வேனும் இடையிட்டுப் பல்கால் வருவது.      (260)

123.- சயத்திரதன் கதாயுதத்தால் எதிர்தாக்கினமை.

வசையறும்புகழ்க்குருகுலதிலகனைமருதிரண்டொடித்தவர்திரு
                                      மருகனை,
விசயன்மைந்தனைப்பணைமுகின்மிசைவருவிபுதர்தங்குலத்
                               ததிபதிபெயரனை,
யசைவில்வன்றிறற்பகைமுனைநிருபரையடைய
                     வென்றகட்டழகுடையபிமனை,
யிசைகொள்சிந்துவுக்கரசனுமொருகதையிருகைகொண்டெடுத்தி
                                கலுடனேறியவே.

     (இ-ள்.) வசை அறும்-பழிப்பு இல்லாத, புகழ் - கீர்த்தியையுடைய, குரு
குலதிலகனை - குருவென்னும் அரசனது குலத்துக்கு நெற்றித்திலகம் போல
அழகுசெய்பவனும், மருது இரண்டு ஓடித்தவர் திரு மருகனை -
இரட்டைமருதமரங்களை முறித்த கண்ணபிரானுக்குச் சிறந்த மருமகனும், விசயன்
மைந்தனை - அருச்சுனனுக்குப் புத்திரனும், பணை முகில்மிசை வரு - பருத்த
மேகமாகிய வாகனத்தின்மேல் வருகிற, வீபுதர்தம் குலத்து அதிபதி -
தேவர்களுடைய கூட்டத்துக்குத் தலைவனான இந்திரனுக்கு, பெயரனை -
பௌத்திரனும்,  அசைவு இல்-சோர்தலில்லாத, வல் திறல்-கொடியவலிமையையுடைய,
பகை நிருபரை அடைய-பகைவர்களான அரசர்களையெல்லாம், முனை-போரில்,
வென்ற - சயித்த, சுட்டு அழகு உடை - நிறைந்த அழகையுடையவனு மாகிய,
அபிமனை - அபிமந்யுவை, இசை கொள் சிந்துவுக்கு அரசன்உம் -
கீர்த்தியைக்கொண்ட சிந்து தேசத்துக்கு அரசனான சயத்திரதனும், ஒரு கதை இரு
கைகொண்டு எடுத்து - ஒப்பற்ற (தன்) கதாயுதத்தை இரண்டு கைகளாலும் எடுத்து,
(அதனால்), இகலுடன் எறிய - வலிமையோடு தாக்க,- (எ-று.)-
"களிறனையவன்***முதுகுகண்டபின்" என வருங்கவியோடு தொடரும்.     (261)

124,- அபிமன் கதாயுதத்தால் தன் தேர்முதலியன அழிக்க, சயத்திரதன்
சிவபிரானளித்தகதாயுதங்கொண்டு பூமியிற் குதித்துப் பொருதல்.

கரமிழந்து மற்றொருகரமிசை யொருகதைகொள் வெஞ்சினக்
                                 களிறனையவனிவ,
னிரதமுந்தகர்த்துறுகதியுடன்வருமிவுளியுந்துணித்தெதிர்
                                   முனைவலவனை,
முரணுடன்புடைத்தணிதுவசமும்விழமுதுகுகண்டபிற்சரபம
                                     தெனும்வகை,
யரன்வழங்குபொற்கதையுடனவனியிலவனுமுன்குதித்தடலுடன்
                                     முனையவே.

     (இ - ள்.) கரம் இழந்து-(முன்னே) ஒருகையை யிழந்து, மற்று ஒரு கரம்மிசை
- மற்றொருகையில், ஒரு கதை கொள் - ஒரு கதாயுதத்தை யேந்திய, வெம் சினம்
களிறு அனையவன் - கொடிய கோபத்தையுடைய ஆண்யானையைப்
போன்றவனான அபிமன், இவன் - சயத்திரதனது, இரதம்உம்-தேரையும், தகர்த்து-
உடைத்து, உறு கதியுடன் வரும் - மிக்கவேகத்தோடு வருகிற, இவுளிஉம்-