உந்தஉம் -(மிக்க விசையாய்ச்) செலுத்தப்படவும், பெய் கணை - (தம்மில் ஒருவரால்) சொரியப்பட்ட அம்பு, கணையுடன் பின்னி -(மற்றொருவரால் விடப்பட்ட) அம்பொடு சிக்கி, முன் வீழஉம் - எதிரில் விழுந்திடவும்,- எய் கணை - தொடுக்கிற அம்புகளையுடைய [அம்புத்தொடுக்கவல்ல என்றபடி], அபிமன்உம் - அபிமந்யுவும், இலக்கணகுமரன்உம்-லக்ஷணகுமாரனும், கை கணை தர - வலக்கை அம்பு (எடுத்துக்) கொடுக்க, நெடு கார்முகம் வாங்கினார் - நீண்ட (தம்) வில்லை வளைத்துப் போர்செய்தார்கள்; ( எ -று.) முதலடியில், கணை என்பதன் இறுதியில் உயர்வுசிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. அபிமன், இலக்கணகுமரன் - வடசொல் திரிபுகள். அபிமந்யு என்னும் வடமொழிப்பெயர், மிக்ககோபமுடையா னென்னும் பொருளுடையது. இப்பாட்டில் அடிதோறும் ' கணை' என வந்த சொல் ஒருபொருளையே குறித்தலால், சொற்பொருட்பின்வருநிலை. பி - ம்: தேருந்தியும். (20) 21.- | இன்சிலைமதனவேளெனவருங்குமரனவ் வன்சிலைவில்லிதான்மகிழ்வுறுங்குமரனை நன்சிலைநடுவுறாநாணொடுந்துணியவே தன்சிலைகொண்டுவெஞ்சாயகமேவினான். |
(இ-ள்.) (அப்பொழுது), இன் - இனிமையான, சிலை-(கரும்பு) வில்லையுடைய, மதனன் வேள் என - மன்மதன்போல, வரும் - வருகிற, குமரன் - லக்ஷணகுமாரன், அ- அந்த, வன் சிலை வில்லி தான் மகிழ்வுஉறும் - வலிய (மேரு) மலையை வில்லாகவுடைய சிவபிரான் மகிழ்ச்சிமிகுதற்குக் காரணமான, குமாரனை - அருச்சுனபுத்திரனான அபிமந்யுவை, நல் சிலை - (அவனது) சிறந்த வில், நாணொடுஉம்- நாணியுடனே, நடு உற துணியஏ - நடுவிலே பொருந்தத் துணி படும்படியாகவே, தன் சிலை கொண்டு - தனதுவில்லினால், வெம் சாயகம் ஏவினான் - கொடிய அம்புகளைச் செலுத்தி யெதிர்த்தான்; ( எ - று.) இன்சிலை - சுவையினிய வில்; எனவே, கரும்பாயிற்று. முருக வேளை விலக்குதற்கு, 'மதனவேள்' என்றார். மதனன் - ஆண் பெண்களை மதமடையச் செய்கிறவன்: வடசொல், லக்ஷணகுமாரனென்பது - அழகிய மைந்தனெனப் பொருள்படுதலால், அப்பெயரை 'மதனவேளெனவருங் குமரன்' எனக் குறித்தார். அக்குமரன் என இயையும். அவ் வன்சிலைவில்லி யென இயைத்தால், அ - உலகறிசுட்டாம். அருச்சுனன்போலவே அபிமன்யுவும் சிறந்த சிவபக்தனாய் அப்பிரானதுதிருவள்ளத்தை உவக்கச்செய்பவ னாதலால், 'வன்சிலை வில்லிதான் மகிழ்வுறுங் குமரன்' என்றார்; அத்தன்மையை இச்சருக்கத்தின் 23- ஆம் கவியிலும், பதின்மூன்றாம்போர்ச்சருக்கத்தின் 50- ஆம் கவியிலுங் காண்க. சிவபிரான் மகாமேருமலையை வில்லாகக்கொண்டது, திரிபுரசங்காரகாலத்தி லென அறிக. 'சாயகம்ஏவினான்' என்பது- எதிர்த்தான் என ஒருசொல்மாத்திரமாகி, 'குமாரனை என்றசெயப்படுபொருளுக்கு முடிக்குஞ் சொல்லாம்; இனி, குமரனது சிலை யென உருபுமயக்கமாக உரைப்பினும் அமையும் பி-ம்: நடுவற. (21) |