பக்கம் எண் :

160பாரதம்துரோண பருவம்

லித்து-மேல் பதினேழாம்போர்ச்ருக்கத்து வருகிற " இடம்புரிந்திடில் வலம்புரியு
மெண்ணின் முறையால், வலம்புரிந்திடி லிடம் புரியு மண்டலமுமாய்" என்பது
போலக்கொள்க. பி -ம்: மொத்தியவலி. இபமடங்க.                 (263)

126.- அபிமன்புயவலிமையைத் தேவரும் புகழ்தல்.

உலைவிறண்டினிற்பரிசனன்மதலையுமுவமையின்றெனப்பகழியின்
                                        மழைபொழி,
சிலையின்வன்றொழிற்றிறலுடைமகபதிசிறுவனுந்தனக்
                                  கெதிரிலனினியென,
மலையும்வெஞ்சமத்தொருதனிமுதுபுயவலிமைகண்டுபொற்புறு
                                      கழலபிமனை.
யலைநெடுங்கடற்றரணி பரனைவருமமரருந்துதித்தனர்
                                      முகடதிரவே.

     (இ-ள்.) உலைவு இல்-அழிதலில்லாத, தண்டினில்-கதாயுதத்தில், பரிசனன்
மதலைஉம்- வாயுகுமாரனான வீமனும், உவமை இன்று -(தனக்கு) ஒப்பாகான், என
என்று (காண்பவர்) சொல்லவும்,-பகழியின் மழை பொழி-அம்புமழையைச் சொரிகிற,
சிலையின் வல் தொழில்-வில்லினாற்செய்யுங் கொடிய போர்த்தொழிலில், திறல் உடை
மகபதி சிறுவன்உம் - வலிமையையுடைய இந்திரன் மகனான அருச்சுனனும், தனக்கு
இனி எதிர் இலன்-இவனுக்கு இனி ஒப்பாகான், என-என்று(காண்பவர்) சொல்லவும்,-
வெம் சமத்து-கொடிய போர்க்களத்தில், மலையும்-(அன்றைத்தினத்தில் அபிமன்)
போர்செய்த, ஒரு தனி முது புயம் வலிமை-ஒப்பில்லாத தனிப்பட்ட வலிய
தோள்களின்பலத்தை, கண்டு-, அலை நெடு கடல் தரணிபர் அனைவர்உம்-
அலைகளையுடையபெரிய கடல்சூழ்ந்த பூமியைக் காக்கிற அரசர்களெல்லோரும்,
அமரர்உம்-தேவர்களும்,பொற்பு உறு கழல் அபிமனை-அழகுமிக்க
வீரக்கழலையுடைய அந்த அபிமந்யுவை,முகடு அதிர - (ஆரவாரத்தால்
அண்டகோளத்தின்) மேல்முகடு அதிர்ச்சியடையும்படி,துதித்தனர் -
(உரத்தகுரலோடு) தோத்திரஞ் செய்தார்கள்; (எ - று.)

     வீமன் கதைத்தொழிலிலும், அருச்சுனன் வில்தொழிலும் மிகச்சிறந்தவரென்பது
பிரசித்தம். முதுபுயம்-போர்த்தொழிலில் முதிர்ந்த [மிகப்பயின்ற] புயம் என்றுமாம்.
                                                              (264)

127.-படுகளச் சிறப்பு.

கழுகுபந்தரிட்டனமிசைவிசையொடுகழுதினங்களிட்டனபலகரணமு.
மெழுகவந்தமிட்டனபலபரிவுகளிருபுறங்களிட்டனவெதிரழிபடை,
யொழுகுசெம்புனற்குருதியின்வருநதியுநதியுஞ்சிவப்புறும்
                                    வகைபெருகலின்.
முழுகியெஞ்சியிட்டனகழியிடையிடைமுகிலின்வெங்குரற்கசரத
                                          துரகமே.

     (இ-ள்.) (அப்பொழுது), கழுகு-கழுகுகள். (இறந்தவற்றைத் தின்னும்பொருட்டு),
மிசை-மேலே, விசையொடு-வேகத்தோடு, பந்தர் இட்டன-பந்தல்போகட்டாற்போல
இடைவிடாது பரவின, கழுது இனங்கள்- பேய்களின் வகைகள், பல கரணம்உம்
இட்டன - களிப்புமிகுதியால்) அநேக விதமான கரணங்களைப்