129.- இரண்டுகவிகள் - ஜயத்ரதன் சிவபிரானளித்த கதைகொண்டு அபிமனைத் தலைதுணித்துவீழ்த்துதலைக் கூறும். இவன்மயங்கிமெய்த்தளர்வுடன்மெலிவுறுமிறுதிகண்டினித்தெ றுவதுகடனென, வவனிகொண்டபற்குனன்மதலையையவனருகுவந்தடுத்தணி புயவலிகொடு, சிவனையஞ்செழுத்துரைசெய்துதொழுதொருசிகரதண்டம் விட்டெ. றிதலினெறிதரு, பவனனன்றுகுத்தினகிரியெனவிசைபடவிழுந்ததப்பருமணி மகுடமே. |
(இ-ள்.) இவன் - அபிமன், மயங்கி-,மெய் தளர்வுடன் - உடம்பின் சோர்வுடனே,மெலிவு உறும் -வாட்டம் மிகுகிற, இறுதி-அந்திமதசையை, கண்டு- ,(சயத்திரதன்), இனிதெறுவது கடன் என - 'இப்பொழுதே(இவனை) அழிப்பது செய்தொழில்' என்றுகருதி,அவனி கொண்ட பற்குனன் மதலையை - (பராக்கிரமத்தால்) பூமிமுழுவதையும்(தன்னுடையதாகக்) கொள்ளவல்ல அருச்சுனபுத்திரனான அபிமனை, அவன் அருகுவந்து அடுத்து- அவனது சமீபத்தில் வந்து நெருங்கி, சிவனை அஞ்சு எழுத்துஉரைசெய்து தொழுது- சிவபிரானை ஸ்ரீபஞ்சாக்ஷரமகாமந்திரத்தை உச்சரித்து வணங்கி,அணி புயம் வலி கொடு-அழகிய தோள்களின் வலிமையால், ஒரு சிகர தண்டம்விட்டு-ஒம்பற்ற நுனியையுடைய (தன்) கதாயுதத்தை வீசி, எறிதலின் - தாக்கியதனால்,- எறிதருபவனன்-வீசுகிற வாயு, அன்று-(ஆதிசேடனோடு பகைத்த) அக்காலத்தில், குத்தின - தாக்கிக் கொடிமுடி யொடித்த, கிரி என - மேருமலைபோல, அபரு மணிமகுடம்-அபிமனது பருத்த இரத்தினங்கள்பதித்த கிரீடம், விசை பட விழுந்தது-வேகமாகக் கீழ் விழுந்தது; (எ - று.) மதலையை எறிதலின் என்றும், சிவனைத்தொழுது என்றும் இயையும். புயவலிகொடு-தனதுதோள்களிரண்டுக்கும் எவ்வளவு வலிமை யுண்டோ அவ்வளவையுங் கொண்டு. அஞ்சு - முழுப்போலி. (267) 130. | தலைது ணிந்துதத் திடவிழ விவனொரு தனது திண்கை யிற் கதைகொடு தரியல, னிலைய றிந்துபுக் குரனுற வெறிதலி னெரி நெ ரிந்தத் தரணிப னுடலமு, மளைம றிந்ததொத் தபிமன துடலமு மகித லந்தனிற் றரியற விழுதலி, னலையெ றிந்துமைக் கடல்புர ளுவதென வரவம் விஞ்சியிட் டதுகள மடையவே. |
(இ-ள்.) (அப்பொழுது), இவன் - அபிமன், தனது ஒரு திண்கையில் கதை கொடு- தனது வலிய ஒற்றைக்கையிலுள்ள கதாயுதத்தால், தரியலன் நிலை அறிந்து புக்குஉரன் உற எறிதலின் - பகைவனான சயத்திரதனது (மார்புமுதலிய) உயிர்நிலைகளைஉணர்ந்து சென்று பலம்மிக வீசியடித்தலால், அ தரணிபன் உடலம்உம்-அந்தச்சிந்துராசனது உடம்பும், நெரிநெரிந்தது-மிக நொருங்கிற்று; அபிமனதுஉடலம்உம்-அபிமந்யுவின் உடம்பும், (சைந்தவன் கதை தாக்கலால்), தலை துணிந்துதத்திட விழ - தலைதுணிபட்டுச்சரியவிழ, மலை மறிந்தது ஒத்து-மலைசாய்ந்ததுபோன்று, மகிதலந்தனில் -தரையிலே, தரி அற விழுதலின் - நிற்றலின்றிவீழ்ந்ததனால், அலை எறிந்து - அலைவீசி, மை கடல் புரளுவது என - |