பக்கம் எண் :

164பாரதம்துரோண பருவம்

நன்குவிளக்கும். 'சேய்' என்னும் ஆண்பாற் சிறப்புப்பெயர் அன்விகுதிபெற்றது.
செயற்கை யென்ற தொழிற்பெயரில், அல்-சாரியை. பி-ம்: வெல்லும்விரகார்.

     இதுமுதல் பதினைந்து கவிகள்-பெரும்பாலும் ஈற்றுச்சீரிரண்டும் மாச்சீர்களும்,
மற்றைநான்கும் காய்ச்சீர்களு மாகிய அறுசீராசிரியவிருத்தங்கள்.          (269)

132.சேடன்முடிநெளியவருசெம்பொற்றேரழிவதோவந்தோ
                                   வந்தோ,
கேடகவாளணிவலயக்கிளர்புயத்தோளறுவதோவந்தோ
                                   வந்தோ,
கூடகவெங்கதையொன்றாற்சிந்துபதிகொல்வதோவந்
                               தோவந்தோ,
வாடமரிலருகொருவர்வாராமலிருப்பதோவந்தோ
                                  வந்தோ.

     (இ-ள்.) சேடன் - (கீழிருந்து பூமியைத் தாங்குகிற) ஆதி சேஷனது, முடி-
தலை,நெளிய-(பாரமிகுதியைப் பொறுக்கமாட்டாமல்) வளையும்படி, வரு-வருகிற,
செம் பொன்தேர்- (அபிமனது) சிவந்த பொன்மயமான தேர், அழிவதுஓ- அழிதல்
தகுதியோ!அந்தோ அந்தோ-ஐயோ ஐயோ!! கேடகம் வாள்-கேடகத்தையும்
வாளையும் ஏந்திய,அணி வலயம் - அழகிய வளையை அணிந்த, கிளர் புயம்-
விளங்குகிறதோள்களையுடைய, தோள் - (அபிமனது) கைகள், அறுவதுஒ-
அறுபடுதல் தகுதியோ!அந்தோ அந்தோ-!! கூடகம்-வஞ்சனையையுடைய, வெம்
கதை ஒன்றால் -கொடியதொரு கதாயுதத்தால், சிந்துபதி-சிந்துதேசத்தரசன்,
கொல்வதுஓ-(அபிமனைக்)கொல்லுதல் தகுதியோ! அந்தோ அந்தோ-!! ஆடு
அமரில் - செய்கிற போரில், அருகுஒருவர் வாரமல் இருப்பதுஓ- (இவ்வபிமனது)
சமீபத்தில் ஒருத்தரும்துணைவராதிருத்தல் தகுதியோ-! அந்தோ அந்தோ-!! (எ-று.)

     ஓகாரங்கள்-சிறிதுந்தகுதியன் றென்று இரங்குதலை உணர்த்தும். சேஷன்
என்றுவடசொல் -(பிரளயகாலத்திலும் அழியாமல்) மிகுந்து நிற்பவனென்று
காரணப்பொருள்படும். வரத்தா லமைந்ததாதலின், 'கூடகவெங்கதை'எனப்பட்டது;
இனி, கூடகம்-நுனியுமாம். பி-ம்: வந்துதவாமல்.                       (270)

133.கன்னனையுந்தேரழித்தான்கந்தனிலும்வலியனேயந்தோ
                                  வந்தோ,
மன்னவரைவருமிருக்கமைந்தனுயிரழிவதேயந்தோ
                                  வந்தோ,
பொன்னுலகோர்வியந்துருகிப்புந்தியினான்மலர்பொழிந்தாரந்
                                தோவந்தோ,
வன்னநெடுந்துவசனிவற்காயுமிகக் கொடுத்திலனேயந்தோ
                                   வந்தோ.

     (இ-ள்.) (அபிமன்), கன்னனைஉம் தேர் அழித்தான் - கர்ணனையுந்
தேரழியச்செய்தான்; கந்தனில்உம் வலியன்ஏ - முருகக் கடவுளினும்
பலசாலியேயாவன்! அந்தோ அந்தோ-!! மன்னவர்ஐவர்உம் இருக்க-
பாண்டவராசர்கள்ஐந்துபேரும் உயிருடனிருக்க. மைந்தன்-அவர்கள் மகனான
அபிமன், உயிர்அழிவதுஏ-இறப்பதோ! அந்தோ அந்தோ-!! பொன் உலகோர் -
பொன்மயமானசுவர்க்க லோகத்திலுள்ள தேவர்கள், வியந்து-(இவன்பராக்கிரமத்தை)