பக்கம் எண் :

166பாரதம்துரோண பருவம்

135. அபிமனிறந்ததுகேட்ட மாற்றலரின்செய்கை.

எட்டானைத்தம்பமுடன்  சயத்தம்பநாட்டியபேரிறைவன்
                                     மைந்தன், 
பட்டானென்பதுகேட்டுத்திருகினார் முகுகிட்டுப்பறந்தவீர,
ரொட்டாமற் செயிரமரிலுயிரிழந்த தன்புதல்வற்குருஞ் சோகம்
விட்டான்வெஞ்சமரமினி  வென்றோமென்றுட்கொண்டான்
                               வேந்தர்வேந்தன்.

     (இ-ள்.) எட்டு ஆனை தம்பமுடன் - எட்டுத்திசைகளிலும் திக்கஜங்களைக்
கட்டிநிற்கிற தூண்களுடனே, சயத்தம்பம் நாட்டிய-(தனது) வெற்றிக்கொடிக்
கம்பத்தைநிலைநிறுத்திய, பேர் இறைவன்-சிறந்த அரசனான அருச்சுனனுக்கு,
மைந்தன் -மகனான அபிமன், பட்டான்-இறந்தான், என்பது-என்கிறசெய்தியை,
கேட்டு-கேள்விப்பட்டு,-முதுகு இட்டு பறந்த வீரர் திருகினார் -(முன்பு
அபிமனெதிரிற்)புறங்கொடுத்துப் பறந்தோடியவீரர்கள் (மகிழ்ந்து தைரியத்தோடு)
திரும்பினார்கள்;வேந்தர் வேந்தன் - ராஜராஜனான துரியோதனன், செயிர்
அமரில்-கோபத்தோடுசெய்யும் போரில், ஒட்டாமல்-நிலைநிற்காமல், உயிர்
இழந்து-இறந்த, தன்புதல்வற்கு-தனக்குமகனான இலக்கணன்பொருட்டாக,
உருகும் - மனங்கரைகிற, சோகம்-விசனத்தையும், விட்டான்-நீங்கி, இனி-,
வெம்சமரம் வென்றோம் என்று உள்கொண்டான்-கொடிய போரில்
(பாண்டவரைச்) சயித்திட்டோமென்று கருதினான்;(எ - று.)

     'ஆனைத்தம்பமுடன்' என்பதற்கு - யானைகட்டுந்தறியோடு ஒப்ப என்று
பொருள்கொள்ளுதலும் பொருந்தும்; "தனித்தனியே திசையானைத் தறிகளாகச்
சயத்தம்பம் பலநாட்டி" என்ற கலிங்கத்துப்பரணியைக் காண்க. 'கேட்டு' என்றதனால்
நெடுந்தூரம் ஓடியமை விளங்கும். வென்றோம் - காலவழுவமைதி. ஒட்டாமல் -
வாழும் ஊழ்வினை இல்லாமலெனினுமாம். பி-ம்: போரிறைவன்.

136.- துரியோதனன் முதலிய நால்வர்தவிர யாவரும்
அபிமனிறந்தமைக்கு இரங்குதல்.

ஓரிரண்டுவயவர் முனைந்துடன்பொருதலுலகியற்கை யொரு
                                   வன்றன்மேற்,
போரிரண்டுபுறமும்வளைந்தொருகோடிமுடிவேந்தர்பொருது
                                     கொன்றார்.
தேரிரண்டுகிடையாதகுறையன்றோ களத்தவிந்தான்
                               சிறுவனென்றென்,
றீரிரண்டுபெயரொழியமற்றுள்ளாரழுதிரங்கியென்பட்டாரே.

     (இ-ள்.) ஓர் இரண்டு வயவர் - இரண்டுவீரர்கள், முனைந்து-பிரயத்தனப்பட்டு,
உடன் பொருதல் - (தம்மில் ஒருவரோடொருவர்) போர்செய்தல், உலகு இயற்கை-
உலகத்துஇயல்பாம்: (அங்ஙனமிருக்க), ஒருவன்தன்மேல்-(அபிமன்) ஒருத்தன்மேலே,
ஒரு கோடி முடி வேந்தர்-கிரீடந்தரித்த மிகப்பல அரசர்கள், இரண்டு புறம்உம்
வளைந்து-இரண்டுபக்கத்திலும் எதிர்த்துச்சூழ்ந்து, போர் பொருது- போர்செய்து,
கொன்றார்-(அவனைக்) கொன்றுவிட்டார்கள்; தேர் இரண்டு கிடையாத குறை
அன்றுஓ - இரண்டாவது ஒரு தேர்கிடைக்காத குறைவினா லன்றோ, சிறுவன் -
இளங்குமரனான அபிமன், களத்து அவிந்தான் - போர்க்களத்தில் இறந்தான்,
என்று