பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்169

தாந்தமானபொருளை, மரகதம்-மரகதம்: எழுத்துநிலைமாறுதல்: இலக்கணப்போலி,
மரகதம்-பச்சையிரத்தினம், மரகதமாமலை-உவமையாகுபெயர்;
"பச்சைமாமலைபோல்மேனி" என்றதுங் காண்க.                      (279)

140.நின்றனையேயெனைக்காத்துநீயேகென்றியானுரைப்பநெடுந்
                                    தேரூர்ந்து,
சென்றனையேயிமைப்பொழுதிற்றிகிரியையுமுடைத்
                           தனையேதெவ்வரோட,
வென்றனையேசுயோதனன்றன்மகவுடனேமகவனைத்தும்
                                விடங்காலம்பிற்,
கொன்றனையேநின்னாண்மைமீண்டுரைக்கக்
                          கூசினையோகுமரரேறே,

     (இ-ள்.) குமார் ஏறே - இராசகுமாரர்களுள் சிங்கம்போன்றவனே!  எனை
காத்து நின்றனைஏ-(நீ இதுவரையில்) என்னை(ப்போரில்) பாதுகாத்து நின்றாயே; நீ
ஏகு என்று யான் உரைப்ப- (சக்கரவியூகத்தைப் பிளத்தற்கு) 'நீ செல்' என்று நான்
சொல்ல, நெடு தேர் ஊர்ந்து சென்றனைஏ - பெரிய தேரைச்செலுத்திக்
கொண்டுபோயினாயே; இமை பொழுதில்-கண்ணிமைப்பொழுதிலே, திகிரியைஉம்
உடைத்தனைஏ - சக்கரவியூகத்தையும் பேதித்தாயே; தெவ்வர் ஓட வென்றனைஏ -
(பின்பு) பகைவர்கள் ஓடச் சயித்தாயே; சுயோதனன்தன் மகவுடனே-
துரியோதனன்புத்திரனான இலக்கணனுடனே, மகவு அனைத்துஉம்-(மற்றும்)
இராசகுமாரர் பலரையும், விடம் கால் அம்பின்-விஷத்தை வெளிச்சொரிகிற
பாணங்களால், கொன்றனைஏ-கொன்றிட்டாயே; நின் ஆண்மை- உனது
(இப்படிப்பட்ட) பராக்கிரமத்தை, மீண்டு உரைக்க-திரும்பி வந்து (என்னுடன்)
சொல்ல,கூசினைஓ - நாணங்கொண்டுவாராது சென்றாயோ? (எ - று.)

     "போர்வாய்ப்பச் செய்தவைநாடாச் சிறப்புடைமை,... நலமாட்சி நல்லவர்
கோள்" என்றபட, போரில்வெற்றியுண்டாம்படி தான் செய்த செயல்களைத் தானே
எடுத்துச்செல்ல நாணுதல்  சுத்த வீராது நற்குண மாதலின், 'நின்னாண்மை
மீண்டுரைக்கக் கூசினையோ' என்றான்.                             (278).

141.உனக்குதவியொருவரறவொருதனிநின்றமருடற்றியொ
                             ழிந்தமாற்றந்,
தனக்குநிகர்தானானதனஞ்சயனுங்கேட்கினுயிர்தரிக்
                                 குமோதா.
னெனக்கவனிதரவிருந்ததித்தனையோமகனேயென்
                           றென்றுமாழ்கி,
மனக்கவலையுடனழிந்துமணித்தேரின்மிசைவீழந்தான்
                             மன்னர்கோவே.

     (இ-ள்.) உனக்கு உதவி ஒருவர் அற- உனக்கு உதவிசெய்பவர்
ஒருவருமில்லாமல், ஒரு தனி நின்று-(நீ சக்கரவியூகத்தினுள்) தன்னந்தனியே
நின்று,அமர் உடற்றி-போர்செய்து, ஒழிந்த- இறந்த, மாற்றம்-செய்தியை,
கேட்கின்-கேட்டால்,தனக்கு  நிகர்தான் ஆன தனஞ்சயன்உம்-(வேறுஉவமை
பெறாமையால்)தனக்குத்தானேஒப்பான அருச்சுனனும், தான் உயிர்தரிக்கும்
ஓ-தான்பிழைத்திருப்பானோ? மகனே-!- (நீ), எனக்கு அவனி தரஇருந்தது- எனக்கு
இராச்சியத்தைக் கொடுக்க இருந்தது, இதனைஓ இவ்வளவு தானோ? என்று
என்றுமாழ்கி-என்றுபலவாறு சொல்லிப் புலம்பிச் சோகித்து, மன்னர் கோ-அரசர்க்கு
அரசனான தருமன், மனக்கவலை