பக்கம் எண் :

பதினோராம் போர்ச்சருக்கம்17

22.அற்றவிற்றுணிகளாலரியையும்பாகையுஞ்
செற்றனன் சென்றனன்றேரொடுந்தேருகக்
கொற்றவர்நூற்றுவர்க்குரியவக்குமரனைப்
பற்றினனுயிரொடும்பாண்டவர்குமரனே.

     (இ-ள்.) (அதன்பின்), பாண்டவர் குமரன் - பாண்டவர்களுக்கு
உரியகுமரானான அபிமன், அற்ற வில் துணிகளால் - (எதிரியின் அம்பால்)
அறுபட்ட (தனது) வில்லின் துண்டுகளிரண்டாலும், அரியைஉம் பாகைஉம்
செற்றனன்- (பகைவனது தேர்க்) குதிரைகளையும் பாகனையும் அடித்துஅழித்து,
தேரொடுஉம் தேர் உக - (தனது) தேரினால் (அவனது) தேர்சிந்தும்படி,
சென்றனன்- (தாக்கிச்) சென்று, கொற்றவர் நூற்றுவர்க்கு உரிய அ குமரனை -
வெற்றியையுடைய ( துரியோதனாதியராகிய) நூறு அரசர்களுக்கும் உரிய குமாரனான
அவ்விலக்கணனை, உயிரொடுஉம் பற்றினன் - உயிரோடு பிடித்துக்கொண்டான் ;
(எ-று.)

     அரி = ஹரி: வடசொல்திரிபு : இப்பலபொருளொருசொல் - இங்கு,  குறித்தது.
பாகு - பாகனுக்குப் பண்பாகு பெயர். நூற்றுவர் -தொகைக்குறிப்பு. துரியோதனாதியர்
நூறு பேருக்கும் இலக்கணனிடத்தும், பாண்டவரைவர்க்கும் அபிமனிடத்தும்
அபேதமாகவுள்ள அன்பு தோன்ற 'நூற்றுவர்க்குரிய அக்குமரன்' என்றும்,
'பாண்டவர்குமரன் 'என்றுங் குறித்தார்.                              (22)

23.வீயினால்வென்றபோர்வில்லியைக்கண்ணுதற்
றீயினால்வென்றவன்றிகழ்தருஞ்சிந்தையோன்
காயினான்வார்குழல்கைப்படுத்தெதிருறப்
போயினானவனொடும்பொன்னெடுந்தேரின்மேல்.

     (இ -ள்.) வீயினால் - மலரம்புகளால், வென்ற - (உலகமுழுவதையும்) சயித்த,
போர் வில்லியை - போரில்வல்ல (கரும்பு) வில்லையுடைய மன்மதனை, நுதல் கண்
தீயினால்-(தனது) நெற்றிக்கண்ணின் நெருப்பினால், வென்றவன்- சயித்திட்டவனான
பரமசிவன், திகழ்தரும் - விளங்கப்பெற்ற, சிந்தையோன் - மனத்தையுடைய அபிமன்,
காயினான் - (தன்னைக்) கோபித்து எதிர்த்தவனான இலக்கணனது, வார் குழல் -
நீண்ட தலைமயிரை, கை படுத்து - கையிற் பிடித்து, அவனொடுஉம் - அவனுடனே,
பொன் நெடு தேரின்மேல் - அழகிய பெரிய (தனது) இரதத்தில், எதிர் உற
போயினான் - (முன் வந்தவழிக்கு) எதிராக மீண்டுசெல்பவனானான்; (எ - று.)

     வீ-மலர். கடவுள் அன்பால் நினைவராது உள்ளக்கமலத்தில் அவர்
நினைந்தவடிவோடு விரைந்து சென்று வீற்றிருத்தலால், 'வென்றவன்திகழ்தருஞ்
சிந்தையோன்' என்றார். காயினான் என்ற தெரிநிலை வினையாயலணையும்பெயரில்,
இன் -இறந்தகால இடைநிலை. 'எதிரற' என்ற பாடத்துக்கு -
எதிர்ப்பவரில்லாமலென்க.                                         (23)

24.- அப்போது அபிமனைச் சயத்திரதன் தகைதல்.

முந்துவாளபிமனம்மூரிவிற்குமரனை
யுந்துதேர்மீதுகொண்டோடலுமொருபுடைச்