பக்கம் எண் :

178பாரதம்துரோண பருவம்

156. - இரண்டுகவிகள் - ஒருதொடர்: அருச்சுனன் மனம்நொந்து
கேட்க, ஸ்ரீகிருஷ்ணன் நடந்ததைக் கூறியதைத் தெரிவிக்கும்.

வன்கணனிளகிச்செங்கண்மாலடிவீழ்ந்துமேன்மே
லென்கணுந்தோளுமார்புமிடனுறத்துடிக்கைமாறா
நின்கணுமருவிசோரநின்றனையின்றுபோரிற்
புன்கணுற்றவர்கண்மற்றென்றுணைவரோபுதல்வர்தாமோ.

     (இ-ள்.) (அதனைக்கண்டு) வன்கணன்-வலிமையையுடைய அருச்சுனன், இளகி-
மனம்நெகிழ்ந்து, செம் கண் மால் அடி வீழ்ந்து-சிவந்த திருக்கண்களையுடைய
கண்ணபிரானது திருவடியில் விழுந்து நமஸ்கரித்து, 'என்-எனது, கண்உம்-கண்களும்,
தோள்உம்- தோள்களும், மார்புஉம்-, மேல் மேல்-, இடன் உற துடிக்கை மாறா-
இடப்பக்கம் மிகுதியாகத் துடித்தலை நீங்கா; நின் கண்உம் அருவி சோர நின்றனை-
உனது கண்களினின்றும் கண்ணீர்ப்பெருக்கு வழிய (நீ) நின்றாய்; இன்று -
இன்றைக்கு, போரில்-, புன்கண் உற்றவர்கள் - துன்படைந்தவர்கள், என்
துணைவர்ஓ- எனது உடன்பிறந்தவரோ? மற்று-அன்றி, புதல்வர் தாம்ஓ -
புத்திரரேயோ? (எ-று.)-"என்று" என மேற்கவியோடு தொடரும்.

     ஆடவருக்கு இடந்துடித்தல்-துர்நிமித்தம். இடையறாது மிக்குப் பெருகுதலைக்
காட்டுதற்கு, 'அருவி' எனப்பட்டது. இன்னாரென்று அறியாமையின், 'புன்கணுற்றவர்
துணைவரோ புதல்வர் தாமோ' எனப் பன்மையாற் கூறினான். புன்கண் - மரணம்.
பி-ம்: புதல்வரோ துணைவர்தாமோ.                              (294)

157.திருவுளத்துணராதில்லைசெப்புகென்றயர்வான்றன்னை
மருவுறத்தழுவித்திங்கண்மரபினுக்குரியசெல்வா
வெருவுறப்பகையைவென்றவீரனேமருகனென்றென்
றருவரைத்தோளினானுக்குற்றவாறனைத்துஞ்சொன்னான்.

     (இ-ள்.) திரு உளத்து உணராது இல்லை - (உனது) சிறந்த மனத்தில்
அறியப்படாதது(எதுவும்) இல்லை; செப்புக-(நிகழ்ந்த உண்மையைக்) கூறுவாயாக,
என்று-என்றுசொல்லி, அயர்வான் தன்னை-தளர்பவனான அருச்சுனனை,
(கண்ணன்),மருவுற தழுவி-சேர அணைத்துக்கொண்டு, 'திங்கள் மரபினுக்கு உரிய
செல்வா-சந்திரவமிசத்துக்கு உரிய செல்வத்துக்கு உடையவனே!  வெருவுற
பகையை வென்றவீரனே-அஞ்சும்படி பகைவர்களைச் சயித்த பராக்கிரமசாலியே!
மருகன்-(இன்றுஅழிவடைந்தவன் என்) மருமகனான அபிமன்,' என்று என்று-என்று
பலமுறைசொல்லி, அரு வரை தோளினானுக்கு உற்ற ஆறு அனைத்துஉம்-
அழித்தற்கரிய மலைபோன்ற தோள்களையுடைய அபிமனுக்கு நேர்ந்த
தன்மைமுழுவதும், சொன்னான்-(விவரமாக எடுத்துக்) கூறினான்;

     'திருவுளத்து உணராதில்லை' என்றதனால், எம்பெருமானது சர்வஜ்ஞதை
வெளியிடப்பட்டது. அயர்வானாகிய வன்கணனை எனக் கீழ்க்கவியோடு
தொடர்ப்படுத்துக, 'அருவரைத்தோளினா