பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்179

னுக்கு' என்பதற்கு அருச்சுனனுக்கு என்று உரைத்தால், 'சொன்னான்' என்பதோடு
கூட்டவேண்டும். செப்புகென்று- தொகுத்தல். பி-ம்: வீரனென்மருகனென்றென்று.
                                                             (295)

158. - அதுகேட்ட அருச்சுனன் புத்திரசோகத்தால் தேரினின்று
தரையிலயர்ந்து வீழ்தல்.

மைத்துனனுரைத்தமாற்றமைத்துனன்செவிக்குத்தீக்கோ
லொத்திருபுறனும்வேவவுள்ளுறச்சுட்டபோது
புத்திரசோகமென்னுநஞ்சினாற்பொன்றினான்போ
லத்தடந்தேரினின்றுமவனிமேலயர்ந்துவீழ்ந்தான்.

     (இ-ள்.) மைத்துனன் உரைத்த மாற்றம்-மனைவியினுடன் பிறந்தவனான
கண்ணன்சொன்னவார்த்தை, மைத்துனன் செவிக்கு-அத்தைமகனான அருச்சுனனது
காதுகளுக்கு, தீ கோல்ஒத்து-கொள்ளிக்கட்டை போன்று, இரு புறன்உம் வேவ-
இரண்டு பக்கங்களிலும் வேகும்படி, உள் உற சுட்ட போது-மனத்திலே பொருந்தத்
தபித்தபொழுது, (அருச்சுனன்), புத்திரசோகம் என்னும் நஞ்சினால்
பொன்றினான்போல்-புத்திரன் இறந்ததனாலாகிய விசன மென்கிற விஷத்தினால்
இறந்தவன்போல, அ தடதேரினின்றும்- அந்தப் பெரிய இரதத்தினின்றும்,
அவனிமேல்-பூமியில், அயர்ந்து வீழ்ந்தான் - மூர்ச்சித்து விழுந்திட்டான்; (எ - று.)

    சேர்ந்தமாத்திரத்தில் வருத்துதலால், கொடுஞ்சொல்லுக்குத் தீக்கோலை
உவமைகூறினார். செவி இரண்டாதலின், 'இருபுறன்' எனப்பட்டது.          (296)

159. -ஸ்ரீக்ருஷ்ணன் சைத்தியோபசாரத்தால்தெளிவிக்க,
தெளிந்த அருச்சுனன் அழுதலுறுதல்.

அயர்ந்தனன்விழுந்தகோவையச்சுதன்பரிவோடேந்திப்
புயந்தழீஇயெடுத்துவாசப்பூசுநீர்தெளித்துமாற்றப்
பயந்தருகோடிக்கூடபாகலந்தணிந்துமெல்லக்
கயந்தெளிவுற்றதென்னக்கண்மலர்ந்தழுதலுற்றான்.

     (இ-ள்.) அயர்ந்தனன் விழுந்த-மூர்ச்சித்துக் கீழ்விழுந்த, கோவை-
அருச்சுனராசனை,அச்சுதன்-கண்ணபிரான், பரிவோடு ஏந்தி - அன்போடு தாங்கி,
புயம் தழீஇ எடுத்து-கைகளால் அணைத்து எடுத்து, வாசம் பூசு நீர் தெளித்து-
பரிமளத்தையுடையபூசுதற்குரிய பனிநீரை (அவன்மேல்) தெளித்து, மாற்ற-(அவனது
மூர்ச்சையைப்)போக்க,-(அவ்வருச்சுனன்), பயம்தரு-அச்சத்தைத்தருகிற, கோடி-
புதுமையான,கூடபாகலம்-கூடபாகலமென்னும்ந் தீராப்பெருநோய், தணிந்து -
குறைய, கயம்-யானை, மெல்ல தெளிவு உற்றது என்ன-மெல்லத்தெளிவை
யடைந்தாற் போல, கண்மலர்ந்து-கண்களை விழித்து[தெளிந்து], அழுதல் உற்றான்-
புலம்பத் தொடங்கினான்;(எ - று.)-அதனை மேல் எட்டுக் கவிகளிற் காண்க.

     தணிந்து-தணிய; செயவெனெச்சம் செய்தெனெச்சமாகத் திரிந்தது. பரிவோடு
ஏந்தியதற்கு ஏற்ப, அச்சுதனென்றார். அச்சுதன்-தன்னைச் சரணமடைந்தவர்களை
நழுவவிடாதவன.