பக்கம் எண் :

184பாரதம்துரோண பருவம்

நீ-, அ பொன் உலகு அடைந்த காலை-பொன்மயமான அந்தத்தேவ லோகத்தைச்
சேர்ந்தபொழுது, (அங்கு), அமரர் - தேவர்கள், ஊர்உம்- (தங்களுடைய)
அமராவதிநகரத்தையும், கற்பகம் காஉம் கற்பகவிருட்சங்களையுடைய
(நந்தனவனமென்னும் பூஞ்சோலையையும், வானில் கங்கைஉம் -
ஆகாயகங்காநதியையும், காட்டினார்ஓ- (உனக்குக் காண்பித்தார்களோ? (எ - று.)

     புதியராய்வந்தாரை அழைத்துக்கொண்டுபோய் அவர்க்குத் தமது நகரம்
முதலிய சிறப்புக்களைக் காண்பித்தல், உலககவியல்பு-  கல்பகம் என்பதற்கு-
(தன்னிடம் வந்து நினைத்த பொருள்களை அவரவர்க்குக்) கல்பிப்பது
[உண்டாக்குவது] என்று காரணப்பொருள்; இது-சந்தாநம், மந்தாரம், பாரிஜாதம்,
கல்பகம், ஹரிசந்தநம் என்ற ஐந்துதேவதருக்களுள் ஒன்றற்கு உரிய பேராத லன்றி,
ஐந்துக்கும் பொதுப்பெயராகவும் வழங்கும். தேவ கங்கைக்கு 'மந்தாகிநீ' என்று
பெயர்; (பாதாளகங்கை-'போகவதீ' எனப்படும்.)                      (304)

167.வளைத்தவின் னிமிரா வண்ணம் வாளியான் மாவுந்தேருந்
துளைத்துமுன் காலா ளாகத் துரோணனைத் துரந்த வீரா
தினைத்தவெஞ் சமரி னொந்து தனஞ்சயன் சிறுவன் மேனி
யிளைத்ததென் றிந்தி ராணி யின்னமு தூட்டி னாளோ.

     (இ-ள்.) வளைத்த வில் நிமிரா வண்ணம்-வணக்கின வில் நிமிராதபடி,
வாளியால்-அம்புகளை எய்ததனால், மாஉம் தேர்உம் துளைத்து-குதிரைகளையும்
தேரையும் பிளந்து, காலாள் ஆக-பதாதியாய்ச் செல்லும்படி, முன்-முதலில்,
துரோணனை-, துரந்த - ஓட்டிய, வீரா வீரனே! 'தனஞ்சயன் சிறுவன் மேனி -
அருச்சுனன்  மகனது உடம்பு, திளைத்த-இடைவிடாது செயத, வெம் சமரில்-
கொடிய போரில், நொந்து-சிரமப்பட்டு, இளைத்தது-மெலிவடைந்து விட்டது, என்று
என்றுஎண்ணி, இந்திராணி - இந்திரன் மனைவி, (தனதுபௌத்திரனாகிய உனக்கு),
இன் அமுது ஊட்டினாள்ஓ- இனிய அமிருதத்தை உண்பித்தாளோ? (எ - று.) (305)

வேறு.

168. - இங்ஙன் புலம்புகையில் வியாசமுனிவன் வருதல்.

என்னமக வான்மகனி ரங்கினன ரற்ற
முன்னவர்கள் பின்னவர்கண் முறைமுறைபு லம்பச்
சென்னிகரம் வைத்தனைவ ருங்கலுழி செய்ய
வன்னபொழு தாரணம ளித்தமுனி வந்தான்.

     (இ-ள்.) என்ன-என்று, மகவான் மகன் - இந்திரகுமாரனான அருச்சுனன்,
இரங்கினன்அரற்ற - சோகித்துக் கதற,-முன்னவர்கள்-(அவனது) முன்பிறந்தவரான
தருமனும்வீமனும், பின்னவர்கள்-பின்பிறந்தவரான நகுலசகதேவர்களும், முறை
முறை புலம்ப-மாறிமாறி (அடுத்தடுத்து) அழ,- அனைவர்உம்-எல்லோரும், சென்னி
கரம் வைத்து,-தலைமேற் கைகளைவைத்துக்கொண்டு, கலுழிசெய்ய-
கண்ணீர்வெள்ளஞ்சொரிதலைச்செய்ய, அன்னபொழுது-