பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்187

விதிவசத்தால் நீங்கிய காலத்திற் சோகிப்பது, அறிவுடையோர்க்கு உரியதன்று
என்பதாம். மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கையும்
அபேதமாகக்கூறுவது கவிசமயமாதலால், இங்கே மனம் 'புந்தி' எனப்பட்டது. (309)

172..உம்மையினும்யாருறவுணர்ந்திலமினிப்போம்
அம்மையினும்யாவருறவாவரெனவறியேம்
இம்மையினிகழ்ந்தவுறவித்தனையிரங்கன்
மும்மையுமுணர்ந்துவருமூதறிவினீரே.

     (இ-ள்.) உம்மையின்உம் - கழிந்து பிறப்பிலும் யார் உறவு - (நமக்கு) எவர்
சுற்றத்தவராயிருந்தவர்? (என்று) உணர்ந்திலம், - (நாம்) அறிந்தோமில்லை; இனி
போம் - இனிமேல் வரப்போகிற, அம்மையின்உம் - மறுபிறப்பிலும், யாவர் உறவு
ஆவர் என - (நமக்கு) எவர் சுற்றத்தவராகுபவர் என்று, அறியேம் - (நாம்)
அறியமாட்டோம்: (அங்ஙனமிருக்க), இம்மையில் நிகழ்ந்த உறவு இத்தனை -
இப்பிறப்பில்மாத்திரமுள்ள சுற்றமாகிய இவ்வளவுக்கு? இரங்கல்- வருந்துதல்,-
மும்மைஉம் உணர்ந்து வரும் - மூன்று காலத்துச் செய்கைகளையும் அறிந்துவருகிற,
மூது அறிவின்-பழமையான ( சிறந்த) அறிவுக்கு (உரிய), நீர்எ - தன்மையாகுமோ?
(ஆகாது எனறபடி); ( எ- று.)

     உலகத்தில் உயிருக்கு அநாதியான கருமத்தின் தொடக்கத்தால் அளவிறந்த
பிறப்புக்கள் உள; அவற்றில் ஒவ்வொருபிறப்பிலும் உறவினர் பலர் அமைதல்
இயல்பே: அவற்றில் இப்பிறப்பில் உறவினராகவுள்ளவரைமாத்திரம் அறிதல்
கூடுவதேயன்றி முன்பின் பிறப்பின் உறவினரை யுணர்தல் இப்பொழுது
சாத்தியமில்லை:என்றதனால், உறவு நிலையில்லாததாகிய உடம்பைப்பற்றினதேயன்றி
நிலையுள்ளதாகிய உயிரைப் பற்றின தன்று என்றும், முன்பும், பின்பும் உறவல்லாத
உயிர் இப்பொழுது உறவாகவும், உறவாகவிருந்த உயிர் உறவன்றாகவும்,
ஓருறவாகவிருந்தது மற்றோருறவாகவும் எல்லாவித விகாரங்களுக்கும் இடமுண்டு
என்றும் தெரிகிறது: இப்படியிருக்க, இவ்வொருபிறப்பில் உறவாகவிருந்த உயிரின்
ஒழிவுக்கு விசனப்படுவது நல்லுணர்வன்று என்பதாம். இன்னும்,
இப்பாட்டின்முன்னிரண்டடிகளால், உடம்பின் நிலையில்லாமையையும், உயிர்
என்றைக்கேனும் உடம்பினின்று நீங்குதலையே இயல்பாகவுடைய தென்பதையும்
குறிப்பித்தார். இம்மை அம்மை உம்மை என்றவற்றில், பகுதியாகிய
மூன்றுசுட்டெழுத்துக்களும்-முறையே சமீபம் தூரம் முன் என்னும் பொருளை
யுணர்த்தின. இரண்டாமடியில் 'ஆவரென' என்பதற்கு ஏற்ப, முதலடியில்
'ஆனாரென' என்பது வருவிக்கத்தக்கது. மும்மை-மூன்றுகாலத்துச் செய்கைகளுக்கு,
இருமடியாகுபெயர். நீர்மை யென்னும் பண்புப்பெயர், ஈறுபோய் 'நிர்' என நின்றது.
இரங்கல் - தொழிற்பெயர்.                                        (310)

173.ஆற்றிநுமதாண்மையழியாமலிருமென்றென்
றேற்றியடைவேசுருதியாவையுமெடுத்துத்
தேற்றியுரைசெய்துதனசேவடியிறைஞ்சிப்
போற்றியமகீபரைநிறுத்திமுனிபோனான்.