மித்திரர்உம் யாவர்உம் விலக்கவும் அதனூடு விலங்கான்-தனது) நண்பர்களும் (மற்றும் உறவினர் முதலிய) எல்லோரும் தடுக்கவும் அக்கினிப்பிரவேசமாகிய அத்தொழிலிலே தடைப்படாதவனாய், 'சித்திரம்வில்லூடு - அக்கினியிலே, உயிர் செகுப்பன் - (என்) உயிரை ( நானே) மாய்த்துக்கொள்வேன்,' என - என்றுகூறி, நின்றான் - (அக்கினிப்பிரவேசத்துக்குச்) சித்தனாய் நின்றான்: புத்திரர் இலா இடர் - புதல்வரையொழிந்தமையாலான சோகம், பொறுத்திடல்உம் ஆம்ஓ-பொறுத்தற்குங் கூடுமோ? ( எ- று.) இப்பாட்டில், நான்காமடி-பொதுப்பொருள்: இதனால், அருச்சுனனது செய்கையாகிய சிறப்புப்பொருளை விளக்கியது- வேற்றுப்பொருள்வைப்பணி. ஒருவன்மனத்தை அதுபோகிறவழியினின்று வேறு வழியில் மீட்டுக்கொணர்தலில் நண்பர் சிறத்தலால், அவரைமுதலிற் கூறினார். சித்திரவில்-பலவகையான ஒளியையுடையது என அக்கினிக்குப் பண்புத்தொகையன்மொழி; (வில்-ஒளி). சித்திரபாநு என்ற வடமொழிப்பெயரையுங் காண்க. மத்திரை - மத்திரதேசத்து அரசனது மகள், பி- ம்: சித்திரவில்லோடு. (313) 176.- இரண்டுகவிகள் - ஒருதொடர் : ஸ்ரீக்ருஷ்ணன் அழைக்க இந்திரன் முனிவன் வடிவாய்வந்து அருச்சுனனைத் தடுத்தமை கூறும். அன்பொடுதுழாய்முதல்வனப்பொழுதழைக்க முன்புதழன்மூழ்கலொழிமுனிவிரைவின்வாரா நின்புதல்வனோடெரியினீபுகுதனெறியோ வென்புதல்வனோடெனையிறப்பதுதவிர்த்தோய். |
(இ-ள்.) துழாய் முதல்வன் - திருத்துழாய்மாலையையுடைய தலைவனான கண்ணபிரான், அன்பொடு - (அருச்சுனன்பக்கல்) அன்புடனே, அப்பொழுது அழைக்க - அச்சமயத்தில் (மனத்திற் சிந்தித்துக்) கூப்பிட, முன்பதழல் மூழ்கல் ஒழிமுனி - முன் (அருச்சுனனது தடையால்) அக்கினிப்பிரவேசம் நீங்கின (இந்திரனாகிய)முனிவன், விரைவின் வாரா-துரிதமாக (அருகில்) வந்து, (அருச்சுனனை நோக்கி),'என்புதல்வனோடு எனை இறப்பது தவிர்த்தோய் - என் புத்திரனுடனே யான் இறக்கஇருந்ததைத் தடுத்தவனே! நீ அக்கினிப்பிரவேசஞ் செய்தல் நீதியாகுமோ? (ஆகாதுஎன்றபடி), முதல்வன் - எல்லாப்பொருள்களுக்கும் முந்தினவரான திரிமூர்த்திகளுள்ளும் மற்றையிருமூர்த்திக்கும் முதலாய் நிற்பவன்: உலகத்துக்கு முதலானவன், 'எனை யிறப்பது தவிர்த்தோய்' - என்னை யிறப்பதைத் தவிர்த்தோய் என இரண்டு செயப்படு பொருளாகவாவது, யான் இறப்பதைத்தவிர்த்தோய் என உருபுபிரித்துக் கூட்டலாகாவது உரைக்க. (314) 177.- முனிவன்சொல்லினால் அக்கினிப்பிரவேசந் தவிர்ந்து அருச்சுனன் நிலைகெட்டிருத்தல். வழிப்படவழக்கின்வழிவருகவெனமுனிவன் மொழிப்படிபொறுத்தழலின்மூழ்குதொழின்மாறி |
|