1சைந்தவனது முயற்சி சிறிதும் பயன்படாமையின், இவ்வுவமை கூறினார். தோளுரம் - புஜபலம். திடம்-த்ருடம் என்னும் வட சொல்லின் திரிபு. பரமசிவனது நெற்றிக்கண் நெருப்புக்கு இரையாகி எரிபட்ட மன்மதனது அங்கம் [உடம்பு] விழுந்த இடத்துக்கு, அக்காரணத்தால் 'அங்கதேசம்' என்ற பெயர். (25) 26.- எதிர்த்துவந்தவர்களை அபிமன் முதுகுகொடுத்தோடச் செய்தல். வந்தவர்வந்தவர்வாணுதனிலைதொறுஞ் சிந்துரத்தூளியாற்றிலகமிட்டனனெனக் கொந்துறுகணைமுனைக்குருதிநீர்மல்கவே வெந்திறல்வில்லின்வென்கண்டனன்வீரனே. |
(இ -ள்.) வந்தவர் வந்தவர் - (அங்ஙனம் தன்னை) மேன்மேல் எதிர்த்துவந்த அரசர்களது, வாள் நுதல் நிலை தொறுஉம் - பிரகாசமான நெற்றியினிடந்தோறும், சிந்துரம் தூளியால் திலகம் இட்டனன் என - சிந்துரச்செம்பொடியால் திலகமிட்டவன்போல், கொந்து உறு கணை முனை - குத்துதல் பொருந்திய அம்புகளின் நுனியால், குருதி நீர் மல்க - இரத்தப்பெருக்கு நிறைய (ச்செய்து), வீரன்- அபிமன், (அவர்களையெல்லாம்), வெம் திறல் வில்லின் - கொடிய வலிமையுடைய விற்போரால், வென் கண்டனன் - முதுகு கொடுக்கச்செய்தான்; (எ -று.) வந்தவர் வந்தவர் - அடுக்க, மிகுதிகாட்டும். சிறந்த இலக்காதலின், நெற்றி கூறப்பட்டது; மேல் 28- ஆங் கவியில் முகங் கூறுவதுங் காண்க. கொந்து - முதனிலைத்தொழிற்பெயர். 'கொத்து' என்பதன்மெலித்தலெனக் கொண்டால், கொந்துறு- திரட்சிபொருந்திய என்க. பி - ம் : இட்டனரென. (26) 27.- அப்போது சல்லியன்வந்து அபிமனை முன்வளைதல். சென்றதேர்யாவையுந்தன்னொருதேரினால் வென்றுமாமன்னவன்மகனையுமீதுகொண் டன்றுபோம்வெஞ்சிலையாண்மைகணடபிமனை வன்றிறற்சல்லியன்வந்துமுன்வளையவே. |
இதுவும்,மேற்கவியும் - குளகம். (இ-ள்.) (இவ்வாறு அபிமன்), சென்ற தேர் யாவைஉம் - (எதிர்த்து) வந்த தேர்களெல்லாவற்றையும், தன் ஒரு தேரினால் - தனது ஒரு தேரினாலே, வென்று - சயித்து, மா மன்னவன் மகனைஉம் - பெரிய துரியோதனராசனது குமாரனான இலக்கணனையும், மீது கொண்டு - (அத்தேரின்) மேல் வைத்துக்கொன்டு, அன்று - அப்பொழுது, போம்-(மீண்டு) சென்ற, வெம் சிலை ஆண்மை - கொடிய வில்லின் திறத்தை, கண்டு - பார்த்து, வல் திறல் சல்லியன் - கொடிய வலிமையையுடைய சல்லியன், வந்து-, அபிமனை-, முன் வளைய - எதிரில் வளைந்துகொள்ள,- ( எ-று.)"விசயன்மதலை ... அடைசினான்" என அடுத்த கவியோடு முடியும். |