பக்கம் எண் :

198பாரதம்துரோண பருவம்

     (இ-ள்.) மண்டு - (வலிமை) மிக்க, இலை வேலினாய்-அரசிலைவடிவமான
வேலாயுதத்தை யுடையவனே! அடிசில்உம்- சோற்றையும், உண்டிலை-புசித்தாயில்லை;
உண்ணும்-குடிக்கதக்க, தீம்புனல் - இனிய நீரை, கொண்டிலை-
உட்கொண்டாயுமில்லை; பசி கனல் கொளுந்தி - பசியாகிய தீப்பற்றி, வீழ்ந்தனை -
(கீழ்) விழுந்தாய்; உலகு இயல்-(யாக்கைநிலையாமையாகிய) உலகத்தின் இயல்பை,
காட்ட காட்ட-(முனிவர்கள்) நன்றாக எடுத்துக் காண்பிக்கவும், மகவின் அன்பினால்-
புத்திரவாற்சல்லியத்தால், கண்டிலை-(அதனைநீ) அறிந்தாயில்லை; (எ - று.)

     'சோற்றாலெடுத்தசுவர்' என்னும்படி உடம்பிற்குஉறுதிதருகிற உணவை
முற்கூறினான். 'உண்ணும் புனல்' என்ற இடத்து 'உண்ணல்' என்பது-பொதுவினை.
பசி என்பது ஜாடராக்நியெனப்படுகிற வயிற்றினுள் உள்ளதொரு தீயின் செயலே
யாதலாலும், நெருப்புப் போலப் பசி சேர்ந்துவிடத்தை மிக வருத்தலாலும்,
'பசிக்கனல்'எனப்பட்டது. காணுதல்-அறிதல், காட்டுதல்-அறிவித்தல்.    (330)

193.மாங்கனிவாழையின்கனிவருக்கையின்
றீங்கனிகன்னலிற்செய்யநீருள
வேங்கனற்பசியுநின்விடாயுமாறவே
யீங்கினிதருந்துதியேந்தலென்னவே.

     (இ - ள்.) மா கனி-மாம்பழங்களும், வாழையின் கனி - வாழைப்பழங்களும்,
தீம் வருக்கையின் கனி-இனிய பலாப்பழங்களும், கன்னலின் செய்ய நீர்-
கருப்பஞ்சாற்றினும் செம்மையான (மிகஇனிய) நீரும், உள-(இங்கு) உள்ளன;
(அவற்றை), ஏந்தல்-பெருமையிற் சிறந்தவனே! நின்-உனது, வேம் கனல் பசிஉம்-
எரிகிற நெருப்புப்போன்ற பசியும், விடாய்உம்-இளைப்பும், ஆற- தணிய, ஈங்கு-
இப்பொழுது (இவ்விடத்தில்), இனிது அருந்துதி- இனிமையாக உண்பாய், என்ன-
என்ற,- (எ- று.)-"இவையுரைத்தலும்" என அடுத்த கவியோடு தொடரும்.

     மா+கனி=மாங்கனி: மரப்பெயர் முன்னர்இனமெல்லெழுத்து வரப்பெற்றது; (நன்-
உயிர்-16.) மா, வாழை. வருக்கை என்பன-முக்கனியெனச் சிறப்பித்துக் கூறப்படும்.
கன்னலென்னுங் கரும்பின் பெயர்-அதன் இரசத்துக்கு ஆகுபெயராம். ஏந்தல்-
உயர்ந்தவன்; ஆண்பாற்சிறப்புப்பெயர்; அல்- கருத்தாப்பொருள்விகுதி; இங்கே,
அண்மைவிளி; ஆதலின், இயல்பு. பி-ம்: கன்னலிற் செழும்புனலுள,
கன்னலிற்செய்தமாவுள. நீர்விடாயும்.                             (331)

194.- அருச்சுனன் இன்னுஞ் சிவபூசை செய்யவில்லையே யெனல்.

சரிந்தவர்சரிவறத்தாங்குநாயகன்
பரிந்திவையுரைத்தலும்பாவைபங்கன்மேற்
புரிந்திலனின்னமும்பூசையென்றனன்
வரிந்தவெஞ்சிலைக்குமண்மதித்தவீரனே.

     (இ-ள்.) சரிந்தவர் - தளர்ச்சியடைந்தவர்களது, சரிவு-தளர்ச்சி, அற- நீங்க,
தாங்கும்-(அவர்களைப்) பாதுகாத்தருளுகிற,