பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்205

கொங்கவிழ்செழுமலர்க்கொன்றைவாசமுங்
கங்கைநுண்டுவலையுங்கலந்துவீசுமால்.

     (இ-ள்.) சங்கரன் - சிவபிரானது, மணி - அழகிய, வரை- கைலாசகிரியின்.
சாரல் - பக்கங்களிலே (வீசுகிற), மாருதம்-காற்று,- திங்களின் நிலவி உமிழ் -
சந்திரனது நிலாவைச் சொரிகிற, செக்கர் வேணி மேல் - செந்நிறமுள்ள
(சிவபிரானது)சடையின்மேல் (தரித்த), கொங்கு அவிழ் - வாசனை வீசுகிற, செழு -
செழிப்பான,கொன்றை மலர் - கொன்றைப்பூவின், வாசம்உம் - பரிமளத்தையும்,
கங்கை நுண்துவலைஉம் - (அச்சடையிலுள்ள) கங்காநதியின் சிறிய
நீர்த்துளிகளையும், கலந்துவீசும் - ஒருங்கு வெளிவீசும்.               (344)

207.- அரவங்களின் மாணிக்கவொளி

அங்குளவிடரகத்தநேகமாயிரம்
பொங்கழலுமிழ்விழிப்புயங்கமாமணி
யெங்கணுமிருளறவிலங்குசோதியாற்
கங்குலும்பகலவன்கரங்கள்காட்டுமால்.

     (இ-ள்.) அங்கு உள - அவ்விடத்திலுள்ள, விடர் - மலை வெடிப்புக்களின்,
அகத்து - உள்ளேயிருக்கிற, அநேகம் ஆயிரம் - பல ஆயிரக்கணக்கான, பொங்கு
அழல் உமிழ் விழி புயங்கம் - மிக்க கோபாக்கினியைச் சொரிகிற கண்களையுடைய
நாகங்களின், மா மணி- சிறந்த மாணிக்கங்கள்,- எங்கண்உம் இருள் அற -
எவ்விடத்திலும் இருள் நீங்கும்படி, இலங்கு - விளங்குகிற, சோதியால் -
ஒளியினால்,- கங்குல்உம் - அந்த இராப்பொழுதிலும், பகலவன் கரங்கள்
காட்டும் -சூரியனது கிரணங்கள்போலத் தோன்றும்; (எ - று.)

     ஆங்குள்ள சிறந்தசாதிப்பாம்புகளின் மாணிக்கங்களுடைய ஒளியால் எங்கும்
இருள்நீங்கிப் பகல்போல்விளங்கிற்றென்பதாம்.

208.-நந்தி ஸ்ரீ க்ருஷ்ணன்வருகையைத் தெரிவிக்க,
சிவபெருமான் நன்றென்றுவந்து எதிர்போந்து தழுவுதல்.

செந்திருமடமயிற்கேள்வன்சென்றமை
யந்திவானிறத்தவனறிந்துமுன்னமே
நந்தியுமுரைசெயக்கேட்டுநன்றெனப்
புந்தியான்மகிழ்ந்தெதிர்போந்துபுல்லினான்,

     (இ-ள்.) செந் திரு மடமயில் - செவ்விய திருவென்னும் பேரையுடைய
மடப்பமுள்ள மயில்போலுஞ்சாயலையுடைய இலக்குமிக்கு, கேள்வன் -
கணவனாகியஸ்ரீ க்ருஷ்ணன், சென்றமை - வந்துள்ள செய்தியை,-அந்திவான்
நிறத்தவன் -செவ்வானம்போலுந் திருமேனியையுடைய சிவபெருமான்,- முன்னம்ஏ
அறிந்துஉம் -முன்னமே அறிந்திருந்தும், நந்திஉம் உரைசெய - நந்திதேவரும்
திருமுன் வந்துதெரிவிக்க, கேட்டு-, நன்று என புந்தியால் மகிழ்ந்து - நன்றென்று
மனத்தினாற்சந்தோஷித்து, எதிர் போந்து - எதிர் கொண்டு, புல்லினான் -
(அப்பிரானைத்)தழுவினான்; (எ - று.) - செல்லுதல் - தன்னிடத்தினின்று நடத்தல்