திருமால் கண்ணனாகத் திருவவதரித்தபொழுது திருமகள் உருக்குமணிப்பிராட்டியாகத் தோன்றின ளென்று புராணங்கூறம், 'அந்திவண்ணன்' என்று சிவபிரானுக்கு ஒரு திருநாமம். நந்தி - சிவனைச்சூழ்ந்து நிற்கிற அடியவர் கூட்டமாகிய பிரமதகணங்களுக்குத்தலைவர்; திருவாயில்காப்பவரும், சிலசமயங்களில் வாகனமுமாய் நிற்பவர். முன்பு அச்சிட்டுள்ள பிரதியில் இங்கு, "செந்திருமடமயில்" (208) என்ற இந்தப்பாடலுக்குப் பதிலாகக் காணப்படும் பாடல் வருமாறு:- * (1) செந்திருமடமயில்கேள்வன்சென்றுசெவ் வந்திவானிறத்தினனருள்செய்வாய்மையா னந்தியுள்விடுத்திடநரன்றனோடுதன் புந்தியின்மகிழ்ந்துமந்திரத்துட்போயினான். (இ-ள்.) இளமையான மயில்போன்ற சாயலையுடையசெந்நிறமுள்ள இலக்குமிக்குக் கணவனான கண்ணன், அருச்சுனனுடனே (அந்தக் கைலாசகிரியிற்) சேர்ந்து, மாலைப்பொழுதிற் காணப்படுகிற செவ்வானம்போன்ற செந்நிறமுடைய சிவபிரான் கருணையோடு கூறிய கட்டளைமொழியின்படி (அச்சிவபிரானது வாயில்காவலராகிய) திருநந்திதேவர் உள்ளே அனுப்ப, (தனது) மனத்தில் மகிழ்ச்சிகொண்டு, ஆலயத்தினுட் சென்றான்; (எ - று.)] (346) +209 - திருமாலை ஓராசனத்திருத்தி, அப்பிரானுடைய திருவவதாரம் முதலியவற்றைக்குறித்துச் சிவபெருமான் வினாவுதல். ஆங்கொராசனத்திடையிருத்தியையனைப் பாங்கினால்வினவினான்பவளமேனியான் ஈங்கிவன்பிறந்ததுமிளைத்தபார்மகள் தீங்கறப்புரிதருஞ்செயலுமியாவுமே. |
(இ -ள்.) ஆங்கு - அங்கே, ஐயனே - தலைவனா ஸ்ரீக்ருஷ்ணனை, பவளம் மேனியான் - பவழம்போற் செந்நிறத்தவனான சிவபெருமான்,- ஓர் ஆசனத்து இருத்தி - ஓராசனத்திலே வீற்றிருக்குமாறு செய்து, ஈங்கு - இங்கே [இவ்வுலகத்திலே],இவன் பிறந்தது
* இதுவும் இன்னும் 10 - பாடல்களும் இந்தச்சருக்கத்தில் 220 - ஆம் பாடலுக்குள் முன்பு அச்சிட்டபிரதிகளில் மாத்திரம் உள்ளன. ஏட்டுப்பிரதிகளுள் எதிலுமில்லை. இவை முறையே இலக்கமிட்டு இந்த [] இருதலைப்பகரத்தினுள் பொழிப்புரை முதலியவற்றோடு காட்டப்படும். ஏட்டுப்பிரதியிலுள்ளனவே இந்தப்பதிப்பிற் பிரதானமாகக் கொள்ளப்பட்டன. + இதுமுதல் 220 - வரையிலுமுள்ள பாடல்கள் இங்குக்காட்டிய முறைப்படியே ஏட்டுப்பிரதிகளிலெல்லாம் உள்ளன: அச்சிட்ட சங்கப்பிரதியிலும் உள்ளன. இவற்றுள் 212, 213 - இலக்கங்களிலுள்ள இரண்டுபாடல்கள்தவிர, மற்றவை மற்றை அச்சிட்ட |