எண்ணுடைக்காமனையெரித்தபேரழற் கண்ணுடைக்கடவுளேகாலகாலனே. |
(இ-ள்.) விண்ணிடை - அந்தரத்திலே, திரி புரம் - மூன்று பட்டணம், வெந்து-எரிபட்டு, நீறு எழ-சாம்பலாய் மேலெழும்படி, பண் உடை - செய்யுந்தன்மையையுடைய, செம் தழல் பரப்பும் மூரலாய் - சிவந்த நெருப்பை வெளிவிட்ட புன்சிரிப்பையுடையவனே! எண் உடை - (யாவர்) மனத்தையும் (இடமாக) உடைய, காமனை - மன்மதனை, எரித்த - கொளுத்திய, பேர் அழல் கண்-பெரிய தீயின் வடிவமான நெற்றிக்கண்ணை, உடை - உடைய, கடவுளே-! கால காலனே-யமனுக்கு யமனானவனே! (எ - று.) (5) தருவதுமுயிரெலாங்காக்குந்தன்மையு முருவறவொழித்தலுமுன்றனாடலே கருவராதொழிந்தவர்கருத்திற்கண்டுதே றொருவனேயெம்மனோர்க்குரைக்கற்பாலையோ (இ-ள்.) எல்லாச்சீவன்களையும் படைப்பதும், பாதுகாக்கிற இயல்பும், வடிவமில்லாதபடி [அடியோடு] அழித்துவிடுதலும், உனது திருவிளையாட்டேயாம்; (மீண்டும்) கருப்பத்தில் வராதபடி பிறப்புத்துன்பத்தை நீங்கின முக்தர்கள் மனத்திலேதரிசித்து [ஞானத்தினாலறிந்து] தெளியும்படியான ஏகமூர்த்தியே! எங்களைப்போன்றவர்களுக்கு (நீ) புகழ்ந்துசொல்லுந் தரமுடையையோ? [அல்லையென்றபடி]; (எ - று.) (6) நித்தனேநிமலனேநிகழ்நின்னாமனே யத்தனேயடியவர்க்கெளியவண்ணலே பித்தனேயாதியந்தங்கள்பேசொணா முத்தனேயுயிர்தொறுமுலாயமுன்பனே. (இ-ள்.) முக்காலத்திலும் ஒரேவிதமாகவுள்ளவனே! ஆணவம் கன்மம் மாயைஎன்னும் மும்மலங்களின் தொடர்ச்சியில்லாதவனே! விளங்குகிற நிர்நாமனாக வுள்ளவனே! தலைவனே! அடியவர்க்கு எளிய அண்ணலே! பித்துடையவனே! முதலும் இறுதியும் சொல்லமுடியாத முத்தியுலகத்துக்கு உரியவனே! எல்லாவுயிர்களிடத்தும் பொருந்திய முதல்வனே ! (எ - று.) நின்னாமன் - நிர்நாமன் என்ற வடசொல் திரிந்தது; அதற்கு - பேரில்லாதவனென்று பொருள். வியவகாரநிலையில் கடவுளுக்கு அநந்தமான திருநாமங்கள் உளவாயினும், தத்துவநிலையில் ஏற்றதொரு திருநாமமும் இல்லை யென்பதுகொள்கை; "ஊரும் பேருமுருவு மில்லான்" என்றதுங்காண்க. வில்லாலும் கல்லாலும் பிரம்பாலும் செருப்பாலும் அடியும் உதையும் படுதல் மண்சுமத்தல் விறகுவிற்றல் முதலிய இழிதொழில்களை அடியார்பொருட்டுச் செய்ததனால், கடவுள் அடியவர்க்கு எளியவனாதல் அறிக; "அடியார்க்கெளியன் சிற்றம்பலவன்" என நடராசப்பெருமான் தன்னைத் தானே குறித்தவாறுங்காண்க. அப்பிரானது சௌலப்பியத்தோடு பரத்துவமுந்தோன்ற, 'அடியவர்க்கு எளிய அண்ணலே’ என்றார்.பித்து - ஆசைமிகுதி ; அதனை அடியார்களிடத்தும், |