பக்கம் எண் :

பதினோராம் போர்ச்சருக்கம்21

வரை இழிதரும் யாளி போல்- உயர்ந்த மலையினின்று இறங்குகிற யாளிபோல,
இரதம் விட்டு இழிய - தேரை விட்டு இறங்க,- (எ - று.)-" அவன் வருதலும்,
அணிலன்மாமதலை மொத்தினான்" என அடுத்த கவியில் முடியும்.

     'மீளவும்' என்றதனால் 'அம்புசெலுத்தி' என்பது வருவிக்கப்பட்டது. இனி,
இப்பாட்டை அடுத்த கவியோடு தொடர்வ தென்னாமல், சல்லியன்
நீளவெங்கதையுடன் நீள்வரையிழிதரும் யாளி போல் இரதம்விட்டு இழியுமாறு,
(அபிமன்), தோளிரண்டிலும் நடுத் துளைபடப் பாகன்மேல் மீளவும் கொடியதோர்
வீரவேலவினான் என இயைத்துப் பொருள்கூறி முடிக்கவுமாம்.           (29)

30.- அதுகண்டு வீமன் சல்லியனைத் தரையிற் சாயக் கதைகொண்டு
மொத்துதல்.

வன்புடனபிமன்மேன்மற்றவன்வருதலும்
அன்புடன்கண்டுபேரனிலன்மாமதலைபோய்
என்புடன்புயநெரிந்தினமணிமகுடமு
முன்புடன்சாயவேதண்டினான்மொத்தினான்

     (இ -ள்.) (இங்ஙனம் தேரினின்று இறங்கி), அவன்- அச்சல்லியன், வன்புடன் -
கொடுமையுடன், அபிமன்மேல்-, வருதலும் - வந்தவளவிலே, பேர் அணிலன் மா
மதலை - பெருமையையுடையவாயுவின் சிறந்தகுமாரனான வீமன், கண்டு
(அவன்வருதலைப்) பார்த்து, அன்புடன்- (அபிமனிடத்து) அன்போடு, போய் -
(அச்சல்லியனை யெதிர்த்துச்) சென்று,- என்புடன் புயம் நெரிந்து - (அவனது)
எலும்போடு தோள்களும் நொருங்கி, இனம் மணி மகுடம்உம் சாய- பலவகைப்பட்ட
இரத்தினங்களைப் பதித்த (அவனது) கிரீடமும் சரியும்படி, முன்புடன் -
வலிமையோடு, தண்டினால் மொத்தினான் - (தனது சத்துருகாதினியென்னும்)
கதாயுதத்தால் அடித்தான்; (எ - று.)

     முன்பு உடன் மொத்தினான் எனப்பிரித்து, அவனை அபிமன்
அடிப்பதற்குமுன்பு விரைவில் தான் அடித்தானென்றலும் ஒன்று. மற்று- அசை ;
மற்றவன் என எடுத்து, எதிரியான அவனெனினுமாம். வாயுவுக்குப் பெருமை -
எல்லாச் சரப்பொருள்களுக்கும் பிராணரூபமாயிருத்தல்.                 (30)

31.-தனக்கு  இழுக்கென்று அபிமன்யு அயர்வுறுகையில்,
இலக்கணகுமாரன் தப்பியோடித் தன்தேரி லேறுதல்.

தலக்கணேசல்லியன்வீழ்தலுந்தந்தையோ
டலக்கணுற்றடியனேனாண்மையென்னாமெனக்
குலக்கணியானவிற்குமரனின்றயர்தலும்
இலக்கணகுமரனுந்தனதுதேரேறினான்.

     (இ -ள்.) (இப்படி வீமனால் மொத்தப்பட்டு), சல்லியன்-, தலக்கண்ஏ-தரையிலே,
வீழ்தலும் - விழுந்தவளவில், குலக்கு அணி ஆன வில் குமரன் - (பாண்டவரின்)
குலத்துக்கு ஓர் அலங்காரமான வில்வித்தையில் வல்ல அபிமன், அலக்கண் உற்று -
(தன்னை எதிர்த்துவந்த சல்லியனைத்தான் வெல்லுமுன் வீமன் இடையில் வந்த
வென்றதற்கு) வருத்தமடைந்து, தந்தையோடு - (தன்பெரிய)