பக்கம் எண் :

212பாரதம்துரோண பருவம்

     (இ-ள்.) ஐயுற - (உனது பாரக்கிரமத்தைக் கண்டு யான் திகைத்துச்)
சந்தேகிக்குமாறு, உடன் - உடனே [விரைவாக], கை உறு சிலையுடன் -
கையிலேபொருந்திய வில்லுடனே, கானம் வேடன் என்று - காட்டிலேதிரிகின்ற
வேடனுருவத்தைக்கொண்டு, வந்து-, அணுகி- (என்னைச்) சமீபித்து, என்னுடன்-
என்னுடனே, மெய்உற - உண்மையாக, அமர் புரி - போர்புரிந்த, வினோத -
வினோதச்செயலையுடையவனே! மைஉறு கண்டனே-(நஞ்சுண்டதனாற்) கறுத்த
கண்டத்தையுடையவனே! நாள்தொறுஉம் - ஒருநாளும், (நான் உன்னை,),
மறப்பதுஇல்லை-; (எ-று.)                                   (352)

215.உமையவள்கணவனேயுகாந்தகாலனே
யிமையவில்வீரனேயென்றுகொண்டிவ
னமையுறத்துதித்தலினவனுமற்றிவன்
சமைவுகண்டையனோடுவகைசாற்றினான்.

     (இ-ள்.) உமையவள் கணவனே-! யுகாந்தகாலனே-யுகாந்த காலத்துக்கு
உரியவனே! [சங்காரமூர்த்தியே!] இமையம் வில்வீரனே - மேருமலையை
வில்லாகக்கொண்ட வீரனே ! என்று-, கொண்டு - (வாயினாற்) சொல்லிக்கொண்டு,
இவன் - இந்தஅருச்சுனன், அமைஉற - மனவமைதிதோன்ற
[மனவொருமைப்பாட்டோடு என்றபடி], துதித்தலின் - தோத்திரஞ் செய்ததனால்,
அவன்உம் - அந்தச்சிவபெருமானும், மற்று - பின்பு, இவன் - இந்த
அருச்சுனனுடைய, சமைவு கண்டு - சாந்தமான மனநிலைமையைக் கண்டு,
ஐயனோடு - தலைவனான ஸ்ரீக்ருஷ்ணனோடு, உவகை-மகிழ்ச்சியோடு, சாற்றினான்
- சொல்லலானான்; (எ - று.)- சிவபெருமான் கூறுவதை, அடுத்தகவியிற் காண்க.

     மேரு மந்திரம் இமயம் முதலிய மலைகளை அபேதமாகக்கூறுதல் கவி சமயம்;
"இமையவில்வாங்கிய வீர்ஞ்சடையந்தணன்" என்ற கலித்தொகையையுங் காண்க.
இனி, இமையவில் - இமயமலையில் தோன்றிய மூங்கிலை வில்லாகவுடைய என்று
உரைப்பாரு முளர்.

216.-சிவபெருமான் க்ருஷ்ணனைக் கொண்டாடுதல்.

ஆற்றினைதுயர்மயலனைத்துமெய்யுறத்
தேற்றினைசிந்தையைத்தெளிந்தவாய்மையான்
மாற்றினைமும்முறைபிறப்பும்வந்துநின்
கூற்றினையடைதலாற்பிறவிகொள்ளுமே.

     (இ-ள்.) துயர் மயல் அனைத்துஉம் - (இவனுக்குஉள்ள) துயரினாலாகிய
[புத்திரசோகத்தினாலாகிய] மயக்கத்தையெல்லாம், ஆற்றினை - (இப்போதே)
தணிப்பித்தாய்: தெளிந்த வாய்மையால் - தெளிவாகவுள்ள (உன்னுடைய)
வாய்ச்சொற்களால் [கீதையையுபதேசித்ததனால்], சிந்தையை- (இவன்) மனத்தை,
மெய்உற - உண்மை நன்குபட, தேற்றினை- தெளிவுறச்செய்தாய்: (இவ்வகையினால்),
மும்முறை பிறப்புஉம் வந்து-மூன்றுமுறைப் பிறவியிலும் (உன்னுடன்) வந்து, நின்
கூற்றினை-உன்னுடைய அமிசத்தை, அடைதலால்- அடைந்திருத்தலினால்,(இவன்),
பிறவிகொள்ளும்ஏ- பிறவியையடைவனோ? மாற்றினை - (நீ இவன்
பிறவியையடையாத