பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்213

வாறு) மாற்றிவிட்டாய்; (எ -று.)-பி-ம்: துயரமுமறுத்து, மெய்ம்மையான்.

     மும்முறைப்பிறப்பில் அருச்சுனன் திருமாலோடுகூடவந்ததனை "நரனும்
நாரணனுமானோம்," "பின்னொருபிறப்பின் யாமே யிராமலக்குமப் பேர்பெற்றோம்,
இந்நெடும்பிறப்பில்நீயும் யானுமாயீண்டு நின்றோம்" என்று முதற்போர்ச்சருக்கத்து
வந்ததனாலு முணர்க. கொள்ளுமே, ஏகாரம் - வினாவகையால், எதிர்மறைகுறித்தது.
உன்னுடைய அமிசம் இவனுக்கு அமைந்திருத்தலினால், இனி
இவனுக்குப்பிறப்பில்லையென்றானென்க.                             (354)

217.-'வேண்டுவது யாது?' என்று சிவபெருமான் கேட்க. அருச்சுனன்
பகையறுக்கும்படையை வேண்டுதல்.

* வேண்டுவதென்கொல்மற்றென்னவீரனும்
  பூண்டதோர்பறையறைந்தன்றிப்போகலேன்
  ஆண்டருள்படைகளாலவுணர்க்காய்ந்தனன்
  ஈண்டுநல்குதிவிறலெய்தும்வண்ணமே.

     (இ-ள்.) மற்று - இனி, வேண்டுவது-விரும்புவது, என்கொல்- யாது? என்ன-
என்று வினாவ,-வீரன்உம் - வீரனாகிய அருச்சுனனும், பூண்டது - (யான்)
மேற்கொண்ட போர்த்தொழிலை, பறை அறைந்து அன்றி - (வென்று)
வெற்றிப்பறையை எறிந்தல்லாமல், போகலேன்- இதனினின்று நீங்கேன்: ஆண்டு -
(நான் தவம்புரிந்த) அக்காலத்து, அருள் - ( ) கருணையோடுதந்த, படைகளால் -
ஆயுதங்களினால், அவுணர் - (நிவாதகவசர்முதலிய) அசுரர்களை, காய்ந்தனன்-
கொன்றேன்; ஈண்டு-இப்போது, விறல் எய்தும் வண்ணம் - (நான்)
வெற்றியையடையும் வகையை, நல்கு - அருள்புரிவாய் ; (எ - று.)-என்று தான்
வேண்டுவதை அருச்சுனன் சிவபெருமானிடம் கூறினான் என்க. வீரனும் என்பதற்கு
- ஸ்ரீக்ருஷ்ணனும் என்பாரு முளர். பி - ம்: பூண்டதோர்பகையறுத்தன்றி.
விறலெண்ணும்.                                                 (355)

218.-ஸ்ரீக்ருஷ்ணன் சிவபெருமானை நோக்கிக் கூறுதல்.

* தானவர்ப் பொரும்படை கொண்டு தாரணி
  மானவர்ப் பொருவது வழக்கு மல்லவால்
  கூனல்விற் கணைகளுங் குறைவுறாததோர்
  தூநிழற் பொய்கையுங் கொடுத்தி தோன்றலே.

நான்குகவிகள் - ஒருதொடர்.

     (இ - ள்.) 'தோன்றலே - விளங்குபவனே! தானவர் பொரும் படைகொண்டு-
அசுரரைக்கொல்லுதற்கு உரியபடையைக்கொண்டு, தாரணி- பூமியிலேயுள்ள,
மாணவர்-மனிதரை, பொருவது - போர் செய்வது, வழக்குஉம் அல்ல -
முறைமையுமன்று: ஆல் - ஆதலால், கூனல் வில் - வளைவுபொருந்திய
வில்லிற்பூட்டுதற்குஉரிய, கணைகள்உம்-அம்புகளும், குறைவு உறாதது ஓர்
தூநிழல்பொய்கை


     * இச்செய்யுள்கள் சிறிது பாடபேதத்துடன் (10, 11)-ஆம் பாடல்களாக 211-
ஆம் பக்கத்துக் காட்டப்பட்டுள்ளன.