பக்கம் எண் :

214பாரதம்துரோண பருவம்

உம்-(எடுக்க எடுக்க அந்தக்கணைகள்) குறைதலில்லாத ஒப்பற்ற பரிசுத்தமான
சாயை பொருந்துதலுடைய பொய்கையையும், கொடுத்தி- கொடுப்பாய்,' (எ - று.)-
"என்றலும்" என மேலே தொடரும்.

     தெளிவான நீரில் சாயைநன்கு விழுமாதலால், 'தூ நிழற் பொய்கை' என்றது.
பி-ம் :தோழநீ.                                               (356)

வேறு.

219.-இரண்டுகவிகள்-ஸ்ரீக்ருஷ்ணனைச் சிவபெருமான் புகழ்தலைக்கூறும்.

என்றலுமீசன கைத்துரை செய்தனன் யானென நீயெனவே
றன்றிவை யாவும ளித்திடு தற்குனை யல்லது வல்லவர்யார்
நின்றதொர் தூணிடை வந்தனை யானைமு னின்றனை
                                   கஞ்சனையுங்
கொன்றனை மன்னவை யூடிரி யப்பல கூறைகொ டுத்தனையே.

     (இ-ள்.) என்றலும்-என்று (ஸ்ரீக்ருஷ்ணன்) கூறியவுடனே,- ஈசன்-
சிவபெருமான், நகைத்து - சிரித்து, உரைசெய்தனன் - (பின் வருமாறு)
சொல்லுபவனானான்; யான் என - யானென்றும், நீ என - நீ என்றும், வேறு
அன்று- வேறு இல்லை: இவையாஉம்-இப்போது வேண்டிய வில்முதலிய
எல்லாவற்றையும்,அளித்திடுதற்கு - கொடுத்திடுதற்கு, உனை அல்லது -
உன்னையல்லாமல், யார்வல்லவர்-? நின்றது ஒர் தூணிடை - (எதிரிலே)
நின்றதாகிய ஒருதூணினிடத்திலே,வந்தனை - (இரணியனைச் சங்கரிக்க)
நரசிங்கரூபியாகத்திருவவதரித்தாய்: யானைமுன் நின்றனை-('ஆதிமூலமே!' என்று
கூவின) யானைக்குமுன்னே (அதனைப்பாதுகாக்குமாறு) வந்து நின்றாய் :
கஞ்சனை கொன்றனை - கஞ்சனைக் கொன்றாய்:மன் அவையூடு - இராசசபையிலே,
இரிய-(திரௌபதியின் துயரம்) நீங்க, பல கூறைகொடுத்தனை - பல ஆடைகளைச்
சுரக்குமாறு அருள்புரிந்தாய்;

     இதுமுதற் பதினான்கு கவிகள் - இச்சருக்கத்தின் முதற்கவி போன்ற
அறுசீராசிரியவிருத்தங்கள்.                                    (357)

220.முன்னுருவாயினைநின்றிருநாபியின்முளரியின்வாழ்முனிவன்
றன்னுருவாகியிருந்துபடைத்தனைபலசகதண்டமுநீ
நின்னுருவாகியளித்திடுகின்றனைநித்தவிபூதியினா
லென்னுருவாகியழிக்கவுநின்றனையெம்பெருமானெனவே.

     (இ - ள்.) எம்பெருமான்-எமது பெருமானே! முன்-முதலில், உருஆயினை -
(உலகத்தையெல்லாம் வெளிப்படுத்தத் திருவுளங் கொண்டு அவ்யக்த ஸ்வரூபியாகிய
நீ) உருவமுள்ளவனாகி, நின் திருநாபியின் - உன்னுடைய திருவுந்தியிலே,
முளரியின்வாழ் முனிவன்தன் - தாமரையில் வாழ்பவனாகிய இருடியின்
[நான்முகனுடைய],உருஆகி இருந்து - உருவத்தையுடையவனாயிருந்து, பல சகத்
அண்டம்உம் -பலலோகங்களையும் (தன்னிடத்துக்) கொண்ட
அண்டங்களையெல்லாம், நீ-,படைத்தனை-சிருஷ்டித்தாய்: நித்தவிபூதியினால்
நித்தியவிபூதியாகியஸ்ரீவைகுண்டத்தில், நின் உரு ஆகி-உன்னுடைய
உருவத்தையேகொண்டு[விஷ்ணுரூபத்துடனிருந்து] அளித்திடுகின்றனை -
பாதுகாத்தல் தொழிலைச்செய்கின்றாய்: என் உருஆகி -