என்னுடைய உருவத்தை [சிவவடிவத்தை] அடைந்தவனாகி, அழிக்க உம் நின்றனை - அழிப்பதற்கும் நின்றருளினாய்; என - என்று (புகழ்ந்து) - (எ-று.)- "ஆயிடைநின்ற கிரீடியை மூழ்கென" என மேற்கவியோடு இயையும். எம்பெருமானுடைய ஸ்ரீவைகுண்டலோகம் என்றும் அழியாது நித்தியமாக இருப்பதாதலால், நித்தியவிபூதியெனப்படும் : அதை யொழிந்த இந்த உலகங்களெல்லாம் அப்பெருமானுடைய விளையாடலுக்கு இடனாயிருத்தலால், லீலாவிபூதி யெனப்படும் என்ப. (258) 221.-அருச்சுனனை அங்கொருபொய்கையில் 'நீராடுக' என்ன, அப் பொய்கையிலே ஒருநாகத்தின் வாயினின்று வில் அம்புகளுடன் ஒருமுனிவன் தோன்றுதல். ஆயிடைநின்றகிரீடியைமுக்கணனங்கொருபொய்கையிலே போயிடைமூழ்கெனவப்புனலூடொர்புயங்கமெழுந்தததன் வாயிடைவந்தனன்மாணுருவாயொருமாமுனியம்முனியச் சேயிடைநீரிலெடுத்தனன்மற்றொருசிலையுடன்வாளியுமே. |
(இ-ள்.) (பிறகு), முக்கணன் - மூன்றுதிருக்கண்களையுடைய சிவபிரான், ஆயிடை நின்ற கிரீடியை - அவ்விடத்தில் நின்ற அருச்சுனனை (ப்பார்த்து), அங்குஒரு பொய்கையில்போய் இடை மூழ்கு என - அவ்விடத்திலுள்ளதொரு சரசிலேசென்று அதனில் நீராடுவாய் என்று சொல்ல,- (அங்ஙனம் அருச்சுனன் ஸ்நாநஞ்செய்த வளவிலே), அ புனலூடு - அந்தத்தடாகத்தின் நீரினின்று, ஓர் புயங்கம் எழுந்தது - ஒரு நாகம் மேல்வந்தது; அதன் வாயிடை - அதனுடைய வாயிலே, மாண் உரு ஆய் - பிரமசாரிவடிவமாய், ஒரு மா முனி - ஒரு சிறந்த முனிவன், வந்தனன் - தோன்றினான்; அ முனி - அந்தமுனிவன், அ சேய் இடை நீரில் - நெடுங்தூரம்பரவிய இடத்தையுடைய அந்நீரினின்று, மற்று ஒரு சிலையுடன் வாளிஉம் - வேறொரு வில்லையும் அம்பையும், எடுத்தனன்-: (எ - று.) சிந்தாமணியுரையில் நச்சினார்க்கினியர் 'பொய்கை-மானிடராக்காத நீர்நிலை' என்றதை இங்கே யறிக. மாண் உரு ஆய் - (பிரமதேஜசு விளங்குகிற) சிறந்த வடிவமாய் என்றுமாம். முன் அருச்சுனன் தவநிலைச்சருக்கத்தில் "ஐயனுமம்மையோ டருள்புரிந்து பின், வெய்ய பொற்றூணியும் வில்லுமந்த்ரமுந், துய்ய பாசுபத மெய்த் தொடையு முட்டியும், ஒய்யென நிலையுடனுதவினானரோ" என்றதை நோக்கி 'மற்றொருசிலையுடன்வாளியும்'என்றார். (359) 222.-வந்தமுனிவன் முட்டிநிலைகளைப்பயிற்றி உருத்திரமறை யுபதேசிக்க, அருச்சுனன் பெற்றுக்கொள்ளுதல். முப்புரநீறெழுநாளினியற்றியமுட்டியுநன்னிலையு மப்புரசூதனனேவலினந்தணனமரர்பிரான்மதலைக் கொப்புறவோடுபயிற்றியுதங்கொடுருத்திரமாமறையுஞ் செப்பினனாலவைபெற்றனன்வென்றுசெயத்திரதற்றெறுவான். |
(இ-ள்.) மு புரம் - திரிபுரம், நீறு எழும் நாளின் - எரிந்து சாம்பரான காலத்தில், இயற்றிய - (சிவபிரான்) கொண்டருளிய, முட்டிஉம் - கைப்பிடியையும், நல் நிலைஉம் - நல்ல நிற்கும்விதத்தை |