யும், அ புர-சூதனன் ஏவலின்-திரிபுரமழித்த அந்தப்பரமசிவனது கட்டளையால், அந்தணன்-அம்முனிவன், அமரர் பிரான் மதலைக்கு-தேவராசனான இந்திரனது புத்தினாகிய அருச்சுனனுக்கு, ஒப்புறவோடு-தகுதியோடு, பயிற்றி-கற்பித்துக்கொடுத்து, இதம்பொடு - (அவனிடத்து) அன்புகொண்டு, உருத்திர மா மறைஉம் - உருத்திரமென்னுஞ் சிறந்தமந்திரத்தையும், செப்பினன்-உபதேசித்தான்; அவை - அவற்றை, (அருச்சுனன்), செயத்திரதன்-சயத்திரதனை; வென்று-சயித்து, தெறுவான் - அழிக்கும்பொருட்டு, பெற்றதனன்-பெற்றுக்கொண்டான்; (எ-று). 'ஒப்புரவோடு' என்ற பாடத்துக்கு - உபகாரமாக என்க. 'இதம் கொடு' என்பதற்கு நன்மைகளைக் கொடுக்கிற என்றும் உரைக்கலாம். வென்றுதெறுவான்=தெற்று வெல்வான் என விகுதி பிரித்துக் கூட்டினுமாம். (360) 223.-பிறகு வேண்டிபோது இவையெய்து மென்றுகூறிச் சிவபெருமான் திருமாலைநோக்கிப் பூமிபாரத்தைத் தீர்த்துச்செல்க எனல். யாதொருபோதுநினைத்தனையவ்வழியெய்துமுனக்கிவையென் றோதியநேகவரங்கள்கொடுத்தபினுமையொருகூறுடையோன் பூதலமாதிடர்தீரவருஞ்சமர்புரிதொழின்முற்றியபின் சீதரநின்பதமேவுகமென்றருள்செய்துவிடுத்தனனே. |
(இ-ள்.) 'யாது ஒரு போது-எந்தச் சமயத்தில், நினைத்தனை-(நீ இவற்றை) நினைத்தாயோ, அ வழி - அந்தச் சமயத்தில் (அவ் விடத்தில்), உனக்கு-, இவை - இந்த வில்லும் அம்பும், எய்தும் - வந்து சேரும்,' என்று ஓதி - என்று சொல்லி, அநேக வரங்கள் கொடுத்தபின் - பலவரங்களை (அருச்சுனனுக்கு)க் கொடுத்தருளிய பின்பு, உமை ஒருகூறு உடையோன் - உமாதேவியை ஒருபக்கத்திலுடைய சிவபிரான், (கண்ணனை நோக்கி), 'சீதர-ஸ்ரீதரனென்னும் பெயருடையவனே! பூதலம் மாது இடர் தீர - பூமிதேவியின் துன்பம் நீங்கும்படி, அரு சமர் புரி தொழில் முற்றிய பின்-செய்தற்கரிய போர் செய்யுந்தொழிலை முடித்த பின்பு, நின்பதம் மேவுக-உனது இடத்தை அடைவாயாக" என்று அருள் செய்து - என்று கருணையோடு சொல்லி, விடுத்தனன்-(இருவரையும்) அனுப்பினான்: துஷ்டஅசுரர்கள் அநேகரும் கெட்ட அரசர்கள் பலரும்ஒருங்கே கூடி வசிப்பதனா லுண்டான பூமிபாரத்தை நிவிருத்திசெய்யும் பொருட்டு அப்பூமிதேவியின் பிரார்த்தனையின்படி தேவர்கள் வேண்டுகோளால் திருமால் வசுதேவகுமாரனாய்க் கிருஷ்ணனாகத் திருவவதரித்ததனால், அவ்வவதார காரியம் முடிந்தபின் தன்னடிச் சோதிக்குச் செல்லும்படி சிவபிரான் கூறினனென்க. 'நின்பதம்' என்றது - ஸ்ரீவைகுண்டத்தை. பி-ம்: சீதரநீவரகென்று தழீஇயுரை செய்தனன்மீளவுமே. (361) 224.-க்ருஷ்ணர்ச்சுனர் மலையினின்றுபுறப்படுகையில் சுக்ரோதயமாதல். எண்ணியகாரியமெய்தியிறைஞ்சியவிந்திரன்மாமகனுந் திண்ணியநேமிவலம்புரிவாள்கதைசிலையுடைநாயகனும் |
|