பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்217

புண்ணியன்மால்வரைநின்றுரகாரிபுயங்களும்வன்கரமு
நண்ணியகாலையில்வெள்ளியெழுந்ததுஞாயிறெழுந்திசையே.

     (இ-ள்) எண்ணிய காரியம் எய்தி இறைஞ்சிய - நினைத்த தொழிலைப்
பெற்றுவணங்கின, இந்திரன் மா மகன்உம் - அருச்சுனனும், திண்ணிய - வலய,
நேமி - சக்கரம், வலம்புரி - சங்கம், வாள்-, கதை-, சிலை-வில், (என்னும்
பஞ்சாயுதங்களை), உடை-உடைய, நாயகன்உம் - தலைவனான திருமாலும்,
புண்ணியன் மால் வரை நின்று - பரிசுத்தமூர்த்தியான சிவபிரானது பெரிய
கைலாசகிரியினின்று, உரக அரி-நாகங்களுக்குப் பகைவனான கருடனது, புயங்கள்
உம்-தோள்களையும், வல் கரம்உம் - வலிய கைகளையும், நண்ணிய
காலையில்-ஏறிச்சேர்ந்த பொழுதில், ஞாயிறு எழும் திசை - சூரியனுதிக்கும் திக்கில்,
வெள்ளி எழுந்தது-சுக்கிரன் உதித்தது; (எ-று.)

     திருமாலின் சக்கரம் சுதர்சந மென்றும், சங்கம் பாஞ்சஜந்ய மென்றும், வாள்
நந்தகமென்றும், கதை கௌமோதகீ யென்றும், வில் சார்ங்கமென்றும் பெயர்
கூறப்படும். உரகாரி - வடமொழித் தொடர். நாயகன் தோளிலும் இந்திரன்மகன்
கரத்திலும் நண்ணிய என மாறி இயைதலால், எதிர்நிரனிறைப்பொருள்கோளாம்.
வெண்ணிற முடைமையால், சுக்கிரனுக்கு 'வெள்ளி' என்று பெயர். 'வெள்ளியெழுந்து
ஞாயிறெழுந்திசை' என்றதனால், வைகறைப் பொழுதாயிற்று என்றவாறு;
சுக்கிரோதயம், இரவின் இறுதிப்பாகத்திலே உளதாவது. பி-ம்: புண்ணியமால்,  (362)

225.-அருச்சுனன்செய்த சபதம் முதலியவற்றைச் சொல்லிவருமாறு
தருமபுத்திரன் கடோற்கசனைத் துரியோதனாதியரிடம் அனுப்புதல்.

இங்கிவர்மூவருமேகினர்மீளுமுனெறிமுரசக்கொடியோ
னங்குரையாடியதுரைசெயின்மண்மிசையார்வியவாதொழிவார்
பங்குனனோதியவஞ்சினமும்பசுபதியிடையேகியதுங்
கங்குலினேவினனுரைசெய்கவென்றுகடோற்கசமீளியையே.

     (இ-ள்.) இங்கு-இவ்விடத்து, இவர் மூவர்உம்-(கண்ணன் அருச்சுனன் கருடன்
என்னும்) இம்மூன்றுபேரும், ஏகினர் மீளும் முன்-சென்று திரும்பி வருவதற்கு
முன்னே, எறி முரசம் கொடியோன்-அடிக்கப்படுகிற பேரிகையின் வடிவத்தை
யெழுதின கொடியையுடைய தருமன், அங்கு-அவ்விடத்தில் (பாசறையில்) உரை
ஆடியது - சொல்லியதை, உரை செயின்-சொன்னால். மண்மிசை-பூலோகத்தில்,
வியவாது ஒழிவார் - (கேட்டு) ஆச்சரியப் படாதொழிபவர், யார்-யாவர் (உளர்)?
(எவருமில்லை): (அது யாதெனில்):-'பங்குனன்-அருச்சுனன், ஓதிய-(நாளை
அஸ்தமனத்திற்குள் சயத்திரதனைத் தான் கொல்லாவிட்டால் அக்கினிப்
பிரவேசஞ்செய்வதாகச்) சொன்ன, வஞ்சினம்உம் - சபதத்தையும், (அந்தச்
சபதத்தை நிறைவேற்றுதற்கு ஏற்றகருவி பெறும் பொருட்டு), பசுபதியிடை
ஏகியதுஉம்-(அவ்விரவிற்) சிவபிரானிடத்து(க் கண்ணனோடு) சென்றதையும், உரை
செய்க-(துரியோதனாதியர்க்கு நீ சென்று) சொல்வாயாக,' என்று-,கடோற்கசன்மீளியை
- கடோற்கசனாகிய வீரனை, கங்குலின்-(அந்தப்பதின்மூன்றாநாள்) இராத்திரியிலே,
ஏவினன்-(தருமன்) கட்டளையிட்டான்.                               (363)