முன் சிலசமயங்களில் வீமன் செய்வன தவிர்வன ஆராயாமலும் சாந்த குணத்தை மேற்கொள்ளாமலும் கோபத்தையே பிரதானமாகக் கொண்டு தருமன்கருத்துக்கு மாறுபாடாகக் கூறியுள்ளதனால், 'தந்தைபோல்வான் மைந்தன்' என்ற முறைப்படி நீ உன் தந்தையான வீமன்போலவே பேசினாயென்று கடோற்கசனைக் தருமன் கூறினான். அங்ஙனம் வீமன் பேசுதலைக் கீழ்க் கிருட்டிணன் தூது சருக்கத்தில் "விரிகுழற் பைந்தொடி நாணி வேத்தவையின் முறையிடுநாள் வெகுளே லென்று, மரபினுக்கு நமக்கு முலகுள்ளளவுந் தீராத வசையே கண்டாய், எரிதழற் கானக மகன்று மின்னமும் வெம்பகை முடிக்க விளையா நின்றாய், அரவுயர்த்தோன் கொடுமையினு முரசுயர்த்தோ யுனதருளுக் கஞ்சி னேனே" என்றது முதலியவற்றால் அறிக. மறநெறியன்றி வயித்தவர் சொல்வதுஎன்ற பாடத்துக்கு - வீரமார்க்கத்தைவிட்டு (உன்போல) முன்கோபங் கொண்டவர்கள் கூறுவது வஞ்சனையாகுமே யன்றி அறிவாகாது எனக் கருத்துக்கொள்ளுக. (365) 228.-கடோற்கசன் சென்று துரியோதனன்வாயிலையடைந்து ஒன்றுசொல்லிக் கூப்பிடுதல். நிருதனகைத்துவணங்கிநிணங்கமழ்நீளிலைவேலினொடுங் கருதலர்துற்றியபாசறையான்றொர்கணப்பொழுதிற்புகுதா வொருதனிலக்கணமைந்தனிறந்தனனென்றழுதுள்ளழியும் விருதுடைவித்தகன்வாயிலின்றுவிளித்தனனோருரையே. |
(இ-ள்.) (அதுகேட்டவுடன்), நிருதன் - இராக்கதனாகிய கடோற்கசன்,-நகைத்து- சிரித்து, வணங்கி - (தருமனை) நமஸ்கரித்து,- நிணம் கமழ்-(முன்பு குத்தப்பட்ட பகைவர்களது) உடற் கொழுப்பு நாறுகிற, நீள்-நீண்ட, இலை-அரசிலைவடிவமைந்த, வேலினொடுஉம்- வேலாயுதத்துடனே, அன்று - அப்பொழுது, ஓர் கணம் பொழுதில் - ஒரு க்ஷணப்பொழுதிலே, கருதலர் துற்றிய பாசறை - பகைவர்கள் நிறைந்த (எதிர்ப்) படைவீட்டை, புகுதா - சார்ந்து,- ஒரு - ஒப்பற்ற, தன் இலக்கண மைந்தன் - தனது லக்ஷணகுமாரன், இறந்தனன் - (போரில்) அழிந்தான், என்ற - என்றகாரணத்தால், அழுது,- உள் அழியும்-மனம் வருந்திய, விருதுஉடை வித்தகன்- (அன்றைப்போரிலேயே அபிமனைக் கொல்வித்ததனால்) வெற்றியையுடைய சதுரனான துரியோதனனது, வாயிலில் - (இருப்பிடத்தின்) வாசலிலே, நின்று-, ஒர் உரை விளித்தனன் -ஒருவார்த்தைசொல்லிக் கூப்பிட்டான் ; (எ - று.)-தருமன் கூறியதை மடமையாகக் கருதியதனால், நிருதன் நகைத்தான். (366) 229.-வாயில்காவலரிடம் தான் வந்த காரணத்தையும், தன்னை இன்னானென்பதையும் கடோற்கசன் தெரிவித்தல். எதிரெதிர்கொற்றவன்வாயிலினின்றவர்யாரெனவெய்துதலும் அதிர்முரசக்கொடியோனரவக்கொடியரசனிடைப்பகர்வான் முதிரவுரைத்ததொர்மொழியுளதம்மொழிமொழிதரவந்தனன்யா னெதிரறுவெற்றியரிக்கொடியோன்மகனென்றனன்விக்ரமனே. |
|