பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்223

வருச்சுனன்தான் இறப்பது, உறுதி - நிச்சயம், என - என்று, சாற்று வாய்-
(அவனுக்கு நீ போய்ச்) சொல்லுவாய்; (எ-று.)

     பிறர் பலர் கூறுங்கொள்கையைப்பற்றி, கண்ணனைத் துரியோதனன் 'மால்'
என்றான். மகரம் - இயல்பிற் கடலில்மாத்திரமே வாழும் பெருமீன் கயம் -
ஆழமான இடம். இப்பாட்டில், திரிபு என்னுஞ் சொல்லணி காண்க.   (372)

235.என்னினும்பார்தனக்குரியன்சிலைத்தொழிலிற்சிலைக்குரு
                           வாயெவரும்போற்று,
மன்னினுந்தான்மிகவலியன்றண்டெடுத் தாலுந்தையினும்
                                 வலியன்சால,
வுன்னினுந்தோளுரனுடையன்மதி யாமலிப்படி
                             நீயுரைக்கலாமோ.
தன்னினும்போர்க்கெளியனோசயத்திரதன்றானென்று
                                சாற்றுவாயே.

     (இ-ள்.) தான் - சயத்திரதன், பார்தனக்கு - உலகத்தை அரசாளுந்திறத்தில்,
என்னின்உம் - (இராசராசனான) என்னைக்காட்டிலும், உரியன் -
உரியவல்லமையுடையான்; சிலை தொழிலில்-வில்லினாற்செய்யும் போர்த்தொழிலில்,
சிலை குரு ஆய் எவர்உம் போற்றும் மன்னின்உம்- வில்லாசிரியனாய்
எல்லாராலுஞ்சிறப்பித்துக்கூறப்படுகிற தலைவனான துரோணனைக்காட்டிலும்,
மிகவலியன் - மிகவலிமையுடையான்; தண்டு எடுத்தால் - கதாயுதத்தை யேந்தி
வந்தால்,உந்தையின்உம் சால வலியன் - உன் தந்தையான வீமனிலும் மிக
வலிமையுடையான்; உன்னின்உம் - (அரக்கனான) உன்னைக் காட்டிலும், தோள்
உரன் உடையன் - மிக்கதோள்வலிமையுடையான், (இங்ஙனமிருக்க), மதியாமல் -
(அவனை) லட்சியஞ்செய்யாமல், நீ -, இ படி உரைக்கல் ஆம்ஓ- இவ்வாறு
கூறுதல்தகுதியோ? சயத்திரதன்-, தான்-, தன்னின்உம் - அருச்சுனனினும்,
போர்க்கு-யுத்தஞ்செய்தலில், எளியன்ஓ - கீழ்ப்பட்டவனோ? [அல்லன்], என்று-,
சாற்றுவாய்-(நீ சென்றுஅருச்சுனனுக்குச்) சொல்லுவாய்.   

     'என்னினும் பார்தனக் குரியன்' என்றதனால் , துரியோதனனது
அரசாட்சிச்செருக்கு விளங்கும். 'சிலைத்தொழிலில் சிலைக்குருவாய் எவரும்
போற்றும் மன்னினும் தான் மிகவலியன்' என்றதனால், அருச்சுனனை வில்லுக்கு
ஒருவனாக மதியாமையோடு குருவையும் அலட்சியஞ்செய்தல் வெளிப்படும்.
வலியில்மிக்கவனானான வீமனைக் கதைப்போருக்குச் சிறப்பாக எடுத்து,
அவன்மைந்தனானகடோற்கசனுக்கு அவமானமுண்டாகுமாறு, அவனினுஞ்
சயத்திரதனைவலியனென்றான். 'உன்னினுந் தோளுரனுடையன்' என்றது,
அவனைக் கீழ்ப்படுத்த.'இப்படி நீ உரைக்கல்' என்றது - கீழ் அவன்' எஞ்சினன்
நாளை உன்மைத்துனன்என்றுகொள்" என்ற தனை. பி-ம்: மிகப்பெரியன்.  (373)

236.ஆளையாணிலையறிவதல்லதுமற்றறிபவர்யாரணிந்தபோரி,
னாளையார் வெல்வரெனத் தெரியுமோவென நவின்று
                          நகைத்தான்மன்னோ,
பாளைவாய்நெடுங் கமுகின் மிடறொடியக் குலைத்தெங்
                            கின்பழங்கள்வீழ, வாளைபாய்குருநாடு மெந்நாடுமுழுதாளுமன்னர்
                                  கோமான்.