சின்றி அலைதற்கே யுரிய அபிம னிறந்ததற்கு அருச்சுனன் அரற்றுதல் ஆச்சிரிய மென்றபடி. (375) 238. | அங்கிருந்துசயத்திரதனாவிகவர்ந்திடுவலெனவாண்மை கூறிப், பங்கிருந்தவுமாபதிபாற்பணிந்துவரம்பெறச்சென்றான் பார்த்தனாகிற், கொங்கிருந்ததாராய்நின்குடைநிழற்கீழிதுகாலங் கூட்டங்கூடி, யிங்கிருந்தவேழையரேமென்செயமற்றிருக்கின்றே மென்றுஞ்சொன்னான். |
(இ-ள்.) கொங்கு இருந்த தாராய் - வாசனை தங்கிய மாலையையுடைய துரியோதனனே! பார்த்தன் - அருச்சுனன், அங்கு இருந்து - எதிர்ப்பக்கத்திலிருந்து, சயத்திரன் ஆவி கவர்ந்திடுவல் என ஆண்மை கூறி - 'சயத்திரதனது உயிரைக் கவர்ந்திடுவேன்' என்று வீரவாதஞ்சொல்லி, பங்கு இருந்த உமாபதிபால் - (தனது) வாமபாகத்திலுள்ள உமாதேவிக்குக் கணவனான சிவபிரானிடத்து, பணிந்து வரம் பெற- வணங்கி வரம்பெறும்பொருட்டு, சென்றான் ஆகில் - போயினனானால்,- இங்கு-இந்தப்பக்கத்தில், நின் குடை நிழல் கீழ் - உனது குளிர்ந்த அரசாட்சியின் கீழ், இதுகாலம் - இவ்வளவு காலமாய், கூட்டம் கூடி இருந்த - திரண்டிருந்த, ஏழையரேம்-எளியவரான நாங்கள், மற்று என் செய இருக்கின்றேம் - (அவ்வருச்சுனனைஅழிப்ப தல்லாமல்) வேறு யாதுசெய்ய இருக்கிறோம்? என்றுஉம் சொன்னான் -என்றும் கூறினான், (கர்ணன்); (எ -று.) - கீழ்ப்பாட்டு - சபையிற் பொதுவாகவும்,இப்பாட்டு - துரியோதனனை நோக்கியுங் கூறியதெனக் காண்க. கர்ணனும் அருச்சுனனும் இளமைதொடங்கி ஒருவர்க்கொருவர் வைரங் கொண்டவ ராதலாலும் ஒருவரையொருவர் போரிற் கொல்வதாகச் சபதஞ் செய்திருத்தலாலும், இங்ஙனம் கர்ணன் அருச்சுனன்விஷயத்தில் அலட்சியமாகப்பேசினான். 'ஏழையரேம்' என்று தம்மை யிழித்துக்கூறி, அதனால் தமது சிறப்பை வெளியிடுகிறான்; இது செருக்கின் காரியம். பி - ம் :இதுகாறும். (376) 239.-மூன்றுகவிகள் - அதுகேட்டுக் கடோற்கசன் கூறுதலைக் தெரிவிக்கும். இவன்மொழிந்தவிகழுரைகேட்டிடிம்பன்மருமகன்வெகுளுற் றென்சொன்னாலு, மவனிதலமுழுதுமினியரசாளநினைந்திருந்தீரறி விலீர்காள், சிவனெரிசெய்புரம்போலும்பாடிவீடழலூட்டிச்சேனை யாவும், பவனன்மகன்மகனென்னும்பரிசறியத்தொலைத்தீடுபடுத்து வேனே. |
இதுமுதல் நான்குகவிகள் - குளகம். (இ-ள்.) இவன் மொழிந்த - கர்ணன் (இவ்வாறு) சொன்ன, இகழ்உரை - நிந்தைமொழியை, கேட்டு-, இடிம்பன் மருமகன்- இடிம்பனது மருமகனான கடோற்கசன், வெகுளுற்று - கோபங் கொண்டு , (கூறுவான்;-) அவனிதலம் முழுதுஉம் - பூலோகம் முழுவதையும், இனிஅரசு ஆள நினைந்து இருந்தீர் - இனிஅரசாட்சி செய்ய எண்ணியிருந்தவர்களான அறிவு இலீர்காள் - புத்தியில்லாதவர்களே ! என் சொன்னால்உம் - (நீங்கள்) எதைச்சொன்னாலும், |