(லக்ஷ்யஞ்செய்யாமல் நான்), சிவன் எரி செய் புரம் போல் - சிவபிரான் எரித்திட்ட திரிபுரத்தைப்போல, உம் பாடி வீடு - உங்களுடைய படைவீட்டை, அழல் ஊட்டி - தீயுண்ணச்செய்த, சேனையாஉம்- (உங்கள்) சேனைகளெல்லாவற்றையும், பவனன் மகன் மகன் என்னும் பரிசு அறிய - வாயுகுமாரனான வீமனது புத்திரன் நானென்னுந்தன்மையை (யாவரும்) அறியும்படி, தொலைத்து - நாசஞ்செய்து, ஈடு படுத்துவேன் - பெருமையழிப்பேன்; (எ-று.)- இப்பாட்டில் 'வெகுளுற்று' என்றது, மேல் 242 - ஆம் பாட்டில் "உரைக்கும்" என்றதோடு இயையும். பி -ம்: இடிம்பிமகன்மிக. என்சொன்னாலும் என்பதற்கு-(நாங்கள்) என்னசொன்னாலும் (நீங்கள் கேளாமல்) என்றும் உரைக்கலாம். அக்கினியை மூட்டி வளர்க்கத் துணையாந்தன்மைவாயுவினிடத்திலும், அரக்குமாளிகையையும் இலங்காபுரியையுந் தீயிட்டழித்ததன்மைஅவ்வாயுவின் குமாரனான வீமனிடத்திலும் அனுமனிடத்திலும் உள்ளதனால்,'பவனன்மகன்மகனென்னும் பரிசறிய' என்றான். (377) 240. | தசைகுருதிமிசையொழுகத்தனித்தனியேயெதிர்த்தவரைத் தலைகள்சிந்த, விசையன்வரவேண்டுமோமற்றுள்ளார்திரண்டுவர வேண்டுமோதோ, னிசைபுலருமுனமுனைந்துநீறாக்கிவிடுகுவனெந்நிரு பன்சொன்ன, வசைவின்மொழிமறுத்துடற்றலாகாதென்றிருக்கின் றேனறிகிலீரே. |
(இ -ள்.) எதிர்த்தவரை - எதிர்த்துப் போர்செய்தவர்களை, தசை குருதிமிசை ஒழுக-சதையும் இரத்தமும் மேல்வழியும்படி, தனி தனியே -, தலைகள் சிந்த - தலைகளைச் சிதறடித்தற்கு, விசையன் வரவேண்டும்ஓ - அருச்சுனன்தான் (போருக்கு) வருவது அவசியமோ? மற்று உள்ளார் திரண்டு வரவேண்டும்ஒ தான் - மற்றுமுள்ள (வீமன் முதலிய) வீரர்கள் ஒருங்குகூடிவருதல்தான் அவசியமோ? (யான்ஒருவனே), நிசை புலரும் முனம் - இவ்விரவு விடியமுன்னே, முனைந்து - போர்செய்து, நீறு ஆக்கி விடுகுவேன்- (உங்களையெல்லாம்) பொடியாக்கிவிடுவேன்; (ஆனால்), எம் நிருபன் சொன்ன - எங்களது அரசனான தருமன் கூறின, அசைவு இல் மொழி - தளர்ச்சியில்லாத வார்த்தையை, மறுத்து - விலக்கி, உடற்றல் - (இப்பொழுது) போர் செய்தல், ஆகாது - தகுதியன்று, என்று - என்றகாரணத்தாலேயே, இருக்கின்றேன்- (நான் சும்மா) இருக்கிறேன்; அறிகிலீரே -(இதனை நீங்கள்) அறியமாட்டீர்களா?(எ-று.)-அறிகிலீரே, ஏ - அசையுமாம். பி -ம்: குருதிநிணம். அறிவிலீரே. தூதுசென்று தான் கூறிய செய்தியைச்சொல்லி வரும்படியே கட்டளையிட்ட தருமனது வார்த்தைக்கு மாறாக யான் பொருதலாகா தென்கிறான். (378) 241. | இருவரெதிவதிர்தம்மிலிகல்பொருதலுலகியற்கையாருங் கூடிப், பருவமுறாத்தனிக்குதலைப்பாலகனுக்காற்றாமற்பறந்து போனீ, ரொருவனெடுந்தேரழிக்கவொருவன்மலர்க்கைதுணிக்க வொருவன்பின்னைப், பொருவனெனவறைகூவிப்பொன்றுவித்தானிதுகொண்டோ புகல்கின்றீரே. |
|