கருவண்டின் உருவங்கொண்டு கழுமுனைதோறும் உட்கார்ந்திருக்க, வீமன் அதனைநோக்கி 'இது என்ன? நீரோட்டத்தில் வண்டுகள் உட்கார்ந்திருக்கின்றனவே' என்று உற்றுப் பார்க்கும்போது மூன்று அங்குலத்தின்கீழ் வசிகள் நாட்டியிருக்கக் கண்டு தன் சந்தேகப்படி அவை நாட்டியிராத இடம்பார்த்துக் குதித்துக் கரையேறி மீண்டானென்பதும்; வேறொருநாள் துரியோதனன் வீமனுக்கு விருந்து வியாஜமாகச் சமையற்காரரைக் கொண்டு மிக்க விஷத்தைக் கொடுத்து உண்பித்து அதனால் மயங்கியிருக்கிற சமயத்தில் அவனைக் கயிற்றாற் கட்டிக் கங்கை நீரிலே போகட்டுவிட, அதில் வீழ்ந்து பாதாளஞ்சேர்ந்த அவ்வீமனை அங்குள்ள சிறுநாகங்கள் கடிக்க, முந்தினவிஷம் இவ்விஷத்தால் நீங்கினவளவிலே, கயிற்றுக்கட்டையும் மெய்வலியால் துணித்திட்ட அவனுக்கு, வாசுகி வாயுகுமாரனென்ற அபிமானத்தோடு மிக உபசரித்து ஆங்குள்ள அமிருதகலசங்களிற்சிலவற்றையுண்பிக்க, வீமன் உண்டு மீண்டனன் என்பதும், கீழ்வாரணாவதச்சருக்கத்தில் வந்த கதைகள். ஒரூரில் இருப்பகற்றியது-அஸ்தினாபுரத்திலிருந்து வாரணாவத நகரத்திற் சென்றுவாழும்படியும், இந்திரப்பிரஸ்தநகர மேற்படுத்திக்கொண்டு செல்லும்படியும், வனம்புகுத்தியும், பாண்டவரைத் துரியோதனன் பலகால் துரத்தியது. உரைதப்பியது -வனவாசஅஜ்ஞானவாசங்கள் கழித்தபின்னும் நாடுதராதது. பி - ம்; அவன். சொல்லார். (381) 244. | செழுந்தழல்வாழ்மனைக்கொளுவார்செய்ந்நன்றிகொன்றறி யார்தீங்குபூணா, ரழுந்துமனத்தழுக்குறாரச்சமுமற்றருளின் றிப்பொ ய்ச்சூதாடார், கொழுந்தியரைத்துகிலுரியார்கொடுங்கானமடை வித்துக்கொல்லவெண்ணா, ரெழுந்தமரின்முதுகிடாரிவையெல்லாமடிகளுக்கேயேற்ப வென்றான். |
(இ -ள்.) ( என்சாதியார் அரக்கரேயானாலும் உம்மைப் போல), வாழ்மனை - (உடன்பிறந்தவர்கள்) வாழ்ந்துகொண்டிருக்கிற வீட்டில், செழு தழல் கொளுவார் - மிக்க நெருப்பைப் பற்றவைக்க மாட்டார்கள்; செய் நன்றி கொன்று அறியார் - (தமக்குப் பிறர்) செய்த நன்றியைச் சிதைத்தறியமாட்டார்கள்; தீங்கு பூணார்- (அவ்வுபகாரஞ் செய்தவர்களுக்கு) அபகாரஞ்செய்தலை மேற்கொள்ள மாட்டார்கள்;அழுந்து மனத்து - கீழ்ப்பட்ட (தங்கள்) மனத்திலே, அழுக்குறார்- பொறாமைகொள்ளமாட்டார்கள் ; அச்சம்உம் அற்று- (பழிபாவங்களுக்குப்) பயப்படுதலுமில்லாமல், அருள் இன்றி - கருணையில்லாது, பொய் சூது ஆடார்- (உடன்பிறந்தவர்களோடு) வஞ்சனைக் கிடமான சூதை ஆடமாட்டார்கள்; கொழுந்தி - உடன்பிறந்தவர் மனைவியின், அரை துகில் - இடையிற்கட்டிய சேலையை, உரியார் - அவிழ்க்கமாட்டார்கள்; (அவ்வுடன்பிறந்தவர்களை), கொடுகானம் அடைவித்து - கொடிய காட்டை யடையச் செய்து, கொல்ல எண்ணார் - (பின்பு அவர்களைக்) கொலைசெய்யக் கருத மாட்டார்கள்; எழுந்து - (முன்னே போருக்குப்) புறப்பட்டுவந்து, அமரில்- அப்போரில் . முதுகு இடார் - புறங்கொடுக்கவும் மாட்டார்கள்; இவை எல்லாம் - இங்குக்கூறிய எல்லாத்தீயொழுங்கங்களும் அடிகளுக்கு |