பாண்டவர் வனத்தில் வசிக்கையில், துரியோதனன் காளமா முனியைக்கொண்டு அபிசாராயாகமொன்று செய்வித்து அவ்வோமத்தீயினின்று எழுந்த பெரும்பூதத்தைப் பாண்டவரைக்கொல்லுமாறு செலுத்தினமையும், போரிற் பாண்டவரைக்கொல்ல முயல்கின்றமையுந் தோன்ற, 'கொல்லவெண்ணார்' என்றான். திரௌபதி சுயம் வரகாலத்திலும், நிரைமீட்சியிலும், மற்றும் பதினெட்டுநாளிலும் போரிற் பாண்டவர்க்குமுன் துரியோதனன் புறங்கொடுத்தல் காண்க. 'அடிகள்' என்றசொல் - 'பாதா:' என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் வழங்குவது; இதற்குச் சிறந்தவ ரென்று பொருள். உயர்வுக்குஉரிய இச்சொல்லால் கடோற்கசன் துரியோதனனைக்கூறியது, சந்தர்ப்பத்தால் இகழ்ச்சிவிளக்கும்; பிறகுறிப்பு. (382) 245. | தேனிடறிப் பாண்முரலுஞ் செழுந்தாம விசயனுடன் செருவில்வந்தால், மானிடரிற் பொரவல்லார் சிலருண்டோ தெரியாது வானுளோரிற், கோனிடையுற் றருகிருந்த திறல்வேந்தர் காத்திடினுங் குறித்தவீரன், றானிடருந் றுயிரழிகை தப்பாதென் பதுமுரைத்துத் தனயன்மீண்டான். |
(இ-ள்.) தேன் - வண்டுகள், இடறி - நெருங்கிமொய்த்து, பாண் முரலும் - இசைப்பாட்டை யொலிக்கப்பெற்ற, செழு தாமம்- செழிப்பான பூமாலையையுடைய, விசயனுடன் - அருச்சுனனுடனே, செருவில் வந்தால்- போர்க்களத்தில் எதிர்த்துவந்தால், மானிடரில் - மனிதருள், பொர வல்லார் - போர் செய்ய வல்லவர்,சிலர் உண்டுஓ - சிலரேனும் உளரோ? [எவரும் இலரென்றபடி]; வான் உளோரில் -மேலுள்ள தேவர்களுள், தெரியாது - (அருச்சுனனுடன் பொரவல்லார் உளர்என்பதுந்) தெரியாது; கோன் இடை உற்று - சிந்து தேசத்தரசனிடத்திற் பொருந்தி,அருகு இருந்த திறல் வேந்தர் காத்திடின்உம் - (உன்) பக்கத்திலுள்ள வலிமையுடையஅரசர்கள் (எல்லோரும்) பாதுகாத்திட்டாலும், குறித்த வீரன் - (அருச்சுனன்கொல்வதாக) உத்தேசித்த வீரனான அச்சைந்தவன், இடர் உற்று உயிர் அழிகை -அருச்சுனனால் துன்பமடைந்து இறத்தல், தப்பாது -தவறாது, என்பதுஉம் உரைத்து -என்பதையுஞ் சொல்லிவிட்டு, தனயன் - (வீமன்) மகனான கடோற்கசன், மீண்டான் -திரும்பி வந்தான்; (எ-று.) (383) வேறு. 246.-இரண்டுகவிகள் - பிறகு துரோணனை நோக்கித் துரியோதனன் நாளைச்சயத்திரதனைக் காத்துவிடின் அருச்சுனன் தீக்குளிப்பானெனல். அரக்கனனப் பேரவை யகன்ற பின்பகை துரக்கும்வெங் குனிசிலைத் துரோணன் றன்னொடும் பரக்கும்வெண் டிரைக்கடற் பாரெ லாமுடன் புரக்கநின் றவன்சில புகழ்ந்து கூறுவான். |
(இ-ள்.) அரக்கன்- கடோற்கசன், அ பேர் அவை - அந்தப் பெரிய சபையை, அகன்றபின் - நீங்கிச்சென்றபின்பு, - பரக்கும்- பரவுகிற, வெள்திரை - வெண்மையான அலைகளையுடைய, கடல்- |