பிரமனுமுட்பட அரிதாதலின், அருச்சுனன் சொன்ன சபதத்தை நாளைநிறைவேற்றி விடுவானானால் அவனுக்கு ஒப்பில்லையென்பதாம். மற்று - வினைமாற்று. (388) 251.- | மல்லினான்மல்லரைமலைந்தமாலவட் புல்லினானென்னினுஞ்சிந்துபூபனை வில்லினால்வெல்லரிதென்றுமீளவுஞ் சொல்லினான்மறைமொழித்துரோணன்றானுமே. |
(இ-ள்.) (இங்ஙனஞ்சொன்ன), மறை மொழி துரோணன் - வேதவாக்கியங்களைவல்ல துரோணாசாரியன்,' மல்லினால் - மற்போரினால், மல்லரை- மற்போர்வீரரை, மலைந்த - அழித்த, மால் - கண்ணபிரான், அவண் - அவ்விடத்தில் [எதிர்ப்பக்கத்தில்], புல்லினான் என்னின்உம் - சேர்ந்துள்ளானாயினும்,சிந்து பூபனை - சிந்துநாட்டரசனான சயத்திரதனை, வில்லினால் வெல்அரிது -விற்போரினால் வெல்லுதல் அரியதே, ' என்று மீளஉம் சொல்லினான் - என்றுதிரும்பவும் சொன்னான்; ( எ -று.)- தான், உம் - அசை. துரோணன்தானும் என்ற உம்மையை உயர்வுசிறப்பு எனக் கொண்டு, இங்ஙன் அறிஞனான துரோணன் சொல்லியது தகாது என்றபொருளைக் குறிப்பதெனினுமாம். பி -ம்: துரோணசாதனே. மல்லினால் மல்லரை மலைந்தகதை; - கம்ஸனது சபையிற் கிருஷ்ணபலராமர் செல்லுகையில், அவனால் ஏவப்பட்ட சாணுாரன் முஷ்டிகன் முதலிய பெருமல்லர்கள் சிலர் அவர்களைக் கொல்லும்பொருட்டு வந்து எதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர் செய்ய, அவர்களையெல்லாம் இவ்யாதவ வீரரிருவரும் மற்போரினாலேயே கொன்று வென்றிட்டனரென்பது. (389) 252.- கர்ணன் தான் நாளைச் சயத்திரதனைக் காப்பதாகக் கூறுதல். கோப்பலருடன்பலகூறமற்றவர் நாப்பலநவிலினுவாளைவான்பகற் றாப்புலிநிகர்சயத்திரதன்றன்னுயிர் காப்பல்யானென்றனன்கதிரின்மைந்தனே. |
(இ -ள்.) கதிரின் மைந்தன் - சூரிய புத்திரனான கர்ணன்,- 'கோ - துரியோதனராசன், பலருடன் - அநேகராசர்களுடனே, பல கூற - (சயத்திரதனைக் காக்கும்படி) அநேகவார்த்தைகளைச் சொல்ல, (அவற்றிற்கு), அவர் - அவ்வீரர்கள், நா - (தம்) நாவினால், பல நவிலின்உம் - அநேக உத்தரங்களைச் சொன்னாலும்,- நாளை வான் பகல்- நாளைச் சிறந்த பகலில், தா புலி நிகர் சயத்திரதன் உயிர் யான்காப்பல் - வலிமையையுடைய புலியை யொத்த சயத்திரதனது உயிரை நான் பாதுகாப்பேன்,' என்றனன் - என்று (உறுதிமொழி) கூறினான்; ( எ -று.) - பாண்டவரது ஆக்க அழிவுகள் நாளையொரு பொபதின் தொழிலிலே நின்றுள்ளன வாதலின், 'வான்பகல்' என்றான். தாப்புலி - தாவுதலையுடைய புலியுமாம். பி-ம்: பலகூறல். (390) |