253.- துர்மர்ஷணன் கூறுதல். அன்மருடிமிரமெய்தளவுநாளையிற் றென்மருடெரியல்வேற்சிந்துவேந்தனைக் கன்மருடிகிரியிற்காப்பன்யானென்றான் றுன்மருடணனெனுந்துணைவன்றானுமே. |
(இ-ள்.) துன்மருடணன் எனும் - துர்மர்ஷணனென்கிற, துணைவன்தான்உம் - (துரியோதனன்) தம்பியும்,-' அல்- இரவுக்குரிய, மருள் - மயக்கத்தைத் தருகிற, திமிரம் - இருள், எய்து அளவுஉம் - வரும்வரையிலும்[சூரியாஸ்தமனமட்டிலும்], நாளையின் - நாளைக்கு, தென் மருள் தெரியல் வேல் சிந்து வேந்தனை - வண்டுகள் (தேனை மிகுதியாகக்குடித்து) மயங்குதற்குக்காரணமான பூமாலையைத் தரித்த வேலாயுதத்தையுடைய சிந்துதேசத்தரசனை, மருள் -(காண்பவர்) அஞ்சுதற்குக்காரணமான, திகிரி கல்லின் - சக்கரவாளமலை போல் (வளைந்துகொண்டு), யான்காப்பன் - நான்பாதுகாப்பேன்,' என்றான் -; -தென் - தேன்என்பதன்குறுக்கல். பி -ம்: இரவிவீழ். 254.-இதுவும், அடுத்தகவியும் - அசுவத்தாமன் கூறுதலைக் தெரிக்கும். விரற்புனைகோதைவல்வில்லின்வல்லவர் குரற்படச்சேவகங்கூறுகிற்பரோ வுரற்புரைநீடடியோடையானையாய் சரற்புயலானதுதனிதஞ்செய்யுமோ. |
இது முதல் மூன்றுகவிகள் - குளகம். (இ -ள்.) உரல் புரை - உரலை யொத்த, நீடு - அடி - பெரிய கால்களையும், ஓடை - நெற்றிப்பட்டத்தையு முடைய, யானையாய் - யானை போன்றவனே ! விரல் - கைவிரலினால், புனை- அழகாகத்தெறிக்கிற, கோதை - நாணியையுடைய, வல் - வலிய, வில்லின் - வில்லின் தொழிலிலே, வல்லவர் - வல்லவர்கள், குரல் பட - உரத்தகுரலுண்டாக, சேவகம்- (தம்) பராக்கிரமத்தை, கூறுகிற்பர்ஓ - எடுத்துச்சொல்லுவார்களோ ? சரத் புயல் ஆனது - சரத்காலத்து மேகமானது, தனி தம் செய்யும் ஓ - இடிமுழக்கத்தைச் செய்யுமோ? எடுத்துககாட்டுவமையணி. இதனை, ஒரு சாரார் மறுபொருளுவமை யென்பர். ஸரத், ஸ்தநிதம் என்னும் வடசொற்கள் திரிந்தன. சரத்காலம் - கூதிர்ப்பருவம் : ஐப்பசி கார்த்திகை மாதங்கள். (392) 255. | பொருதொழில்விதம்படப்புரிந்தகாலையில் விருதர்களிருவரும்வேறல்கூடுமோ வொருதலைநின்றவனுடற்றும்வின்மையுங் கருதலன்வின்மையுங்காண்டிகாவலா. |
(இ -ள்.) காவலா - அரசனே! பொரு தொழில் - போர்த்தொழிலை, விதம் பட- ஒழுங்காக, புரிந்த காலையில் - செய்த பொழுது, விருதர்கள் இருவர்உம் - இரண்டு வீரர்களும், வேறல் - சயித்தல், கூடும்ஓ-சாத்தியமோ? [ஒருத்தர்வெல்ல மற்றொருத்தர் அழிதலே கூடுவது என்றபடி]; ஒரு தலை நின்றவன் - ஒருபக்கத் |