தில் நின்ற சயத்திரதன், உடற்றும் - போர் செய்யும், வின்மைஉம் - வில்லின் திறமையையும், கருதலன் - பகைவனான அருச்சுனனது, வின்மைஉம் - வில்லின் திறமையையும், காண்டி - (நாளைக்குப்) பார்ப்பாய், ( எ -று.) இருதிறத்தவரும் தாம்தாம் பிறரைத் தவறாது வெல்வதாகத் தனித்தனி சபதஞ்செய்தால், அச்சபதத்தில் ஒன்று பங்கப்பட்டே தீரும்; ஆதலின், வாயாற்சொல்லுதலில் பயனில்லை: காரியத்திற் காட்டுதலே சிறப்பு என அசுவத்தாமன்நிஷ்பக்ஷபாதமாக நீதி கூறினான். பி - ம்: நின்றிவன். (393) 256.- யாவரும் துரியோதனனிடம் விடைபெற்றுச்செல்லுதல். என்றுசேனாபதிமகனியம்பினான் நின்றகாவலர்களுநிசைபுலர்ந்துழிச் சென்றுபோர்புரிந்துநின்றெவ்வர்யாரையும் வென்றுமீளுதுமெனவிடைகொண்டாரரோ. |
(இ-ள்.) என்று-, சேனாபதி மகன் - சேனைத்தலைவனாகிய துரோணனது புத்திரனான அசுவத்தாமன், இயம்பினான் - கூறினான்; (பின்பு), நின்ற காவலர்கள்உம்- (அங்கு) உள்ள அரசர்களெல்லோரும், 'நிசை புலர்ந்தஉழி- இவ்விரவு கழிந்தபொழுது [நாளை உதயத்தில்], சென்று போர் புரிந்து - எதிர்த்துப்போய்ப் போர்செய்து, நின் தெவ்வர் யாரைஉம் - உன் பகைவர்களெல்லோரையும், வென்று மீளுதும் - சயித்துத்திரும்புவோம்,' என - என்றுசொல்லி, விடை கொண்டார்- (துரியோதனனிடம்) அனுமதிபெற்றுச் சென்றார். (394) 257.- கிருஷ்ணர்ச்சுனரும் கடோற்கசனும் மீள, சூரியனுதித்தல். பூதனைமுலைநுகர்பூந்துழாய்முடி நாதனும்விசயனுநலத்தொடேவிய தூதனுமருக்கனுந்துயிலுணர்த்தினார் சேதனர்புகழ்மொழித்திகிரிவேந்தையே. |
(இ -ள்.) பூதனை முலை நுகர்- பூதனையென்னும் பேய்மகளது தனத்தையுண்ட, பூ துழாய் முடி நாதன்உம் - அழகிய திருத்துழாய் மாலையைத் தரித்த திருமுடியையுடைய கண்ணபிரானும், விசயன் உம்- அருச்சுனனும், நலத்தொடுஏவிய தூதன்உம் - நல்லெண்ணத்தோடு ( தருமன் துரியோதனனிடம்) அனுப்பினதூதனான கடோற்கசனும், அருக்கன்உம்- சூரியனும்,- சேதனர் புகழ் மொழி திகிரிவேந்தை - அறிவுடையார் புகழ்ந்துகூறுகிற சொற்களையுடைய ஆஜ்ஞாசக்கரத்தையுடைய தருமராசனை. துயில் உணர்த்தினார் - தூக்கத்தினின்று எழுப்பினார்கள்; ( எ -று.) கைலைக்குச் சென்ற கிருஷ்ணார்ச்சுனரும், துரியோதனன் பாசறைக்குத் தூதுசென்ற கடோற்கசனும் மீளுமளவில், சூரியனுதிக்க, தருமன் துயிலுணர்ந்தனனென்பதாம். பி -ம்: ஏகிய. பூதனைமுலைநுகர்ந்த கதை:- தன்னைக் கொல்லப் பிறந்தவன் ஒளித்து வளர்கிறா னென்று உணர்ந்த கம்சனால் விசேஷமான பலம். |