உலக மழிதலால் அழித்தலும் ஆக முத்தொழில்களும் கடலுக்கு உரியனவாயின. வீமனை வாயுவாக உருவகப்படுத்தினார்; இது- வீமனது வலிமை மிகுதியை விளக்கும். சண்டபவநம் - வடமொழித்தொடர். என்னப்பட்டது எல்லாம்- ஒருமைப்பன்மை மயக்கம். வெரீஇ - சொல்லிசையளபெடை. பண்டு - ஏழாம்வேற்றுமையிடப் பொருளுணரநின்ற பழமைகுறிக்கும் இடைச்சொல். இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பன்னிரண்டுகவிகள் - பெரும்பாலும் மூன்றாஞ்சீரும் ஆறாஞ்சீரும் காய்ச்சீர்களும், மற்றை நான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள். (34) 35.- பாண்டவர் பக்கத்தார் யாவரும் படைவீட்டில் இரவு இனிது கண் துயிலல். சென்றநிருபர்புறநாணத்திண்டோளபிமன்முதலான வென்றிநிருபர்குழூஉக்கொண்டுவிறலார்சேனைவேந்தருடன் மன்றல்கமழுந்துழாய்மவுலிமாலுந்தாமும்பாடிமனை யொன்றியினிதிற்கண்டுயின்றாருரனுந்திறலுமுடையோரே. |
(இ-ள்.) உரன்உம் - பலத்தையும், திறல்உம் - பராக்கிரமத்தையும், உடையோர்-உடையவர்களான, திண் தோள் அபிமன் முதல் ஆன - வலிய தோள்களையுடையஅபிமந்யு முதலிய, வென்றி நிருபர் - வெற்றியையுடைய அரசர்கள், சென்ற நிருபர்புறம் நாண-(எதிர்த்து) வந்த பகையரசர்கள் புறங்கொடுத்து வெட்கமடைய,-குழூஉகொண்டு- தாம் ஒருதிரளாகக்கூடி, விறல் ஆர் சேனை வேந்தருடன் - வெற்றிமிக்க சேனைகளோடும் மற்றையரசர்களோடும், மன்றல் கமழும் துழாய் மவுலிதாம்உம் - வாசனைவீசுகிற திருத்துழாய்மாலையைச்சூடிய திருமுடியையுடையகண்ணபிரானும் தாங்களுமாக, பாடி மனை ஒன்றி- படைவீட்டை யடைந்து, (அங்கு),இனிதின் கண்துயின்றார் - மகிழ்ச்சியோடு கண்மூடித் தூங்கினார்கள்; (எ - று.) சென்ற நிருபர் புறம் நாண - துரியோதனனுடன் சென்ற அரசர்கள் மற்றொருபுறத்தில் நாணமடைய என்றுங் கொள்ளலாம். மௌலி என்னும் வடசொல், மவுலி யெனப் போலிபெற்றது. (35) 36.- துரியோதனன் பாதிராத்திரியளவும் உடன்சேர்ந்தாரோடு இலக்கணகுமாரன் அபிமனிடம் அகப்பட்ட தாழ்வுக்கிரங்கி உளம் நோதல் பானாளளவுந்துயிலாமற்பாந்தட்டுவசன்றனக்குயிர்நண் பானார்பலரும்வாள்வேந்தரமைச்சர்பலருமிளையோருஞ் சேனாபதியுஞ்சூழவிருந்தபிமன்கையிற்றிருமைந்தன் தானாடமரிலகப்பட்டதாழ்வுக்கிரங்கியுளநொந்தார். |
(இ-ள்.) பாந்தள் துவசன் தனக்கு - பாம்புக்கொடியையுடைய துரியோதனனுக்கு, உயிர் நண்பு ஆனார் - பிராணசினேகிதரான, வாள் வேந்தர் பலர்உம் - ஆயுதப்பயிற்சியில்வல்ல அரசர்கள் அநேகரும், அமைச்சர் பலர்உம் - (அவனது) மந்திரிமார் எல்லோரும், இளையோர்உம் - (அவன்) தம்பிமார்களும், சேனாபதிஉம் - சேனைத்தலைவனான துரோணனும், (ஆகிய எல்லோரும்), பால் நாள் |