பக்கம் எண் :

240பாரதம்துரோண பருவம்

     இதுமுதற் பதினொருகவிகள் - பெரும்பாலும் இரண்டு நான்கு ஏழாஞ்சீர்களும்,
மாச்சீர்களும மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எழுசீராசிரியவிருத்தங்கள்.                                    (398)

2.- தருமபுத்திரன் சேனையுடன் போர்க்குப் புறப்படுதல்.

காலையாதபனைத் தருமன்மாமதலைகைதொழுகடன் முடித்தருளிச்,
சாலையார்தழல்செய் வேள்வியந்தணர்க்குத் தானமுந் தகுவன
                                             வழங்கி.
மாலையாமளவிற் றனஞ்சயன்மொழிந்த வஞ்சினம்
                                    வழுவறமுடிப்பான்,
வேலையாரரவப் பலபணைமுழங்க வெம்முரட்
                                சேனையோடெழுந்தான்.

     (இ-ள்.) காலை - (பதினான்காநாட்) சூரியோதயகாலத்தில்,- தருமன் மா
மதலை- யமதருமராசனது சிறந்தகுமாரனான யுதிட்டிரன், - ஆதபனை கை தொழு
கடன்முடித்தருளி - சூரியனைக் கை கூப்பிவணங்கிச் செய்யவேண்டிய
கடமைத்தொழில்களை அன்புடன் செய்து முடித்து, - சாலை - யாகசாலையில்,
ஆர்-பொருந்திய, தழல் - அக்கினியில், செய் - செய்கிற, வேள்வி -
யாகங்களையுடைய,அந்தணர்க்கு - பிராமணர்களுக்கு, தகுவன தானம்உம் -
தக்கனவாகியதானங்களையும், வழங்கி - மிகுதியாகக் கொடுத்து,- மாலைஆம்
அளவில் -(அன்றைத்தினம்) மாலைப்பொழுது வருமளவிற்குள், தனஞ்சயன்
மொழிந்தவஞ்சினம் வழு அற முடிப்பான் - அருச்சுனன் ( முதல்நாளிற்) சொன்ன
சபதத்தைத்தவறுதலில்லாமல் நிறைவேற்றும் பொருட்டு,- வேலை ஆர்-
கடலொலியையொத்த,அரவம் - ஆரவாரத்தையுடைய , பலபணை-
அநேகவகைவாத்தியங்கள், முழங்க -மிக ஒலிக்க, வெம் முரண் சேனையோடு -
கொடிய வலிமையையுடைய ( தன்)சேனையுடன், எழுந்தான் - (போர்க்குப்)
புறப்பட்டான்; ( எ -று.)

     மாலையாமளவில் முடிப்பான் என்க. இனி, மாலையாமளவில்மொழிந்த என
இயைத்து, முந்தினநாளைமாலைப்பொழுதிற் சொன்ன என்றலுமாம்.        (399)

3.- அருச்சுனன் போர்க்குப் புறப்படுதல்.

அடைந்தவரிடுக்க ணகற்றுதற்கெண்ணி யாடகப் பொருப்பி
                                   னாற்கடலைக்,
கடைந்தமுதளித்த கருணையங்கடலே கடும்பரிச்சந்த
                                      னங்கடவ,
மிடைந்தொளியுமிழும் வேற்படைத்தடக்கை வீமனு
                             மிளைஞரும்பலருங்,
குளைந்திருபுறனுங் கைவரமகவான் குமரனு
                               மமர்க்களங்குறுக.

இதுவும், வருங்கவியும் - குளகம்.

     (இ-ள்.) அடைந்தவர் - (தன்னைச்) சரணமடைந்த தேவர்களின் இடுக்கண்-
துன்பத்தை, அகற்றுதற்கு - போக்குதற்கு, எண்ணி- நினைத்து, ஆடகம்
பொருப்பினால் - பொன்மயமான மந்தர மலையைக் கொண்டு , கடலை கடைந்து -
பாற்கடலைக் கடைந்து, அமுது அளித்த - (அத்தேவர்கட்கு) அமிருதத்தைக்
கொடுத்த, கருணை அம் கடலே - அருளுக்கு அழகிய ஒருகடல்போல
இடமாகவுள்ளவனாகிய கண்ணபிரான்தானே, கடும் பரி சந்தனம் கடவ-
வேகத்தையுடைய குதிரைகள் பூட்டிய (தனது) தேரைச் செலுத்தவும்,-