பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்247

யென்றும் பொருள்படக்கூடிய தாயினும், அடுத்தகவியின் இரண்டாமடியையும்,
முதனூலையும்நோக்கி இவ்வாறு பொருள் கொள்ளப் பட்டது. இரண்டாமடியில்
'கார்முகம்' என்ற சொல் - முன்னர்த் தொடர்மொழியாயும் பின்னர்த்
தனிமொழியாயும் வெவ்வேறு பொருளில் வந்தது, மடக்கு.            (407)

11.- அருச்சுனன் எதிர்ச்சேனையையழித்துத் துரோணனைநெருங்குதல்.

புரவிமுப் பதினா யிரங்கொடு முனைந்துபொருதிறற்
                               கிருதவன்மாவுங்,
கரவிறற் கரிநூ றாயிரங் கொண்டு காதுதுச் சாதனன்றானு,
மிரவியைக்கண்டமின்மினிக் குலம்போ லீடழிந் திடவுடன்
                                     றெங்குஞ்,
சரவிதப் படையால்விண்டலந் தூர்த்துத்தானைகா
                          வலன்முனை சார்ந்தான்.

     (இ -ள்.) முப்பதினாயிரம் புரவி கொடு - முப்பதினாயிரங் குதிரைகளை
யுடன்கொண்டுவந்து, முனைந்து பொரு - மிகமுயன்று போர்செய்த, திறல் -
வல்லமையையுடைய, கிருதவன்மாஉம் - கிருதவர்மா என்ற அரசனும், கரம்
விறல்கரி நூறாயிரம் கொண்டு- துதிக்கையின் வலிமையையுடைய லக்ஷம்
யானைகளையுடன்கொண்டு, காது - எதிர்த்துப்போர்செய்த, துச்சாதனன்தான்உம் -
துச்சாசனனும், இரவியை கண்ட மின்மினி குலம்போல் - சூரியனைக்கண்ட
மின்மினிப் பூச்சிக்கூட்டம்போல, ஈடு அழிந்திட - (தமது) வலிமை கெடும்படி,
எங்குஉம் உடன்று - எவ்விடத்தும் போர்செய்து, விதம் சரம் படையால் -
பலவகைப்பட்ட அம்புகளாகிய ஆயுதங்களால், விண்தலம் தூர்த்து -
ஆகாயத்தினிடத்தை நிறைத்துக்கொண்டு, (அருச்சுனன்), தானை காவலன் முனை
சார்ந்தான்- கௌரவசேனைத் தலைவனான துரோணன் போர் செய்யுமிடத்தைச்
சேர்ந்தான்; (எ -று.)- பி -ம் : முனைச்சார்ந்தான்.

     சூரியனில்லாதசமயத்தில் இருளில் மின்னிக்கொண்டு விளங்கி நிற்கும்
மின்மினிக்குழாம்  சூரியன்வந்தவளவில் அவ்விளக்கம் ஒழிதல்போல, அருச்சுனன்
வருமுன் பலபராக்கிரமங் காட்டிவந்த பகையர்சர்கள் அவன் வரக்கண்டவளவிலே
அவ்வாற்றல் முற்றும் ஒடுங்கின ரென்க.                            (408)

வேறு.

12.- மூன்றுகவிகள்- அருச்சுனனும் துரோணனும் போர்செய்தலைக் கூறும். 

சென்ற விற்ற னஞ்ச யற்கு முனைகு லைந்த சேனைவாய்
நின்ற வத்து ரோண னுக்கு நீடு போர்வி ளைந்ததால்
ஒன்றெ டொன்று துரக தங்க ளுருமின் விஞ்சி யதிர்வுறக்
குன்று குன்றொ டுற்றொ னக்கொ டிக்கொ டேர்கு லுங்கவே.

     (இ -ள்.) சென்ற - (இவ்வாறு) போன, வில் தனஞ்சயற்கு உம் - விற்போரிற்
சிறந்தவனான அருச்சுனனுக்கும், முனை குலைந்த சேனைவாய் நின்ற - முன்பக்கம்
கலக்கமடைந்த (எதிர்புறத்துச்) சேனையில் நின்றுள்ள, அ துரோணனுக்குஉம் -
அந்தத்துரோணாசாரியனுக்கும்,- துரகதங்கள்- தேர்க்குதிரைகள், உருமின் -
இடியோசைபோல, ஒன்றொடு ஒன்று விஞ்சி அதிர்வுற - ஒன்றைக்